பேச்சு:யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
என்ன சிக்கல் என்று தெரியவில்லை. திடீரெனப் புதுப்பயனர்கள் பலர் இப்பக்கத்தில் பலகலைக்கழகத்தின் துணைவேந்தர்கள் குறித்த சர்ச்சையான செய்திகளை சேர்த்து வருகின்றனர். இவ்வாறான தகவல்களை எழுத வலுவான புற ஆதாரம் வேண்டும். இது பற்றிய விக்கிப்பீடியா கொள்கை - விக்கிப்பீடியா:வாழும் மனிதர்களின் வாழ்க்கை வரலாறு. மேலும் புதிய கணக்குகள் தொடர்ந்து இதனைத் தொகுப்பதிலிருந்து வெளித்தளம் எங்கிருந்தோ இது ஒருங்கிணைப்படுவதாகத் தெரிகிறது. எனவே இரு வாரங்களுக்கு இக்கட்டுரையைப் பூட்டி வைக்கிறேன்.
புதிய பயனர்களுக்கு:
விக்கிப்பீடியா நிஜ உலக சர்ச்சைகளை வெளியிடும் புலனாய்வுத் தளமோ, வஞ்சந் தீர்க்கப்பயன்படும் தளமோ கிடையாது. நடுநிலையான முறையில் சர்ச்சைக்குரிய தகவல்களை தகுந்த புற ஆதாரங்களுடன் வெளியிட வேண்டும். குறிப்பாக வாழும் நபர்கள் பற்றிய அவதூறாகக் கொள்ளக்கூடிய தகவல்களை வலுவான புற ஆதாரங்கள் இல்லாமல் இங்கு சேர்க்க வேண்டாம்.--சோடாபாட்டில்உரையாடுக 16:09, 23 திசம்பர் 2011 (UTC)
(கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை கட்டுரையும் இதே காரணத்துக்காகப் பூட்டப்பட்டுள்ளது)--சோடாபாட்டில்உரையாடுக 16:12, 23 திசம்பர் 2011 (UTC)
மேற்கோள்கள் தேவைப்படும் பகுதிகள்
தொகுகல்வி மற்றும் ஆய்வுச் செயற்பாடுகள், சமூகச் செயற்பாடுகளும் சேவையும் ஆகிய உபதலைப்புக்கள் பல்கலைக்கழகம் பற்றி குறிப்பிடாமல் தனி மனிதர்கள் பற்றிக் குறிப்பிடுவதால், இப்பகுதிகளை குறித்த கட்டுரைகளுக்கு நகர்த்தி விடலாமா? (அல்லது நீக்கிவிடலாமா?) மேலும், இது பட்டியல் போன்று தொகுக்கப்பட்டுள்ளது. --Anton (பேச்சு) 01:18, 25 நவம்பர் 2012 (UTC)
- வரலாற்றுப் பின்னணி, யாழ்ப்பாண வளாகம் ஆரம்பம், பல்கலைக்கழகமாதல், வவுனியா வளாகம் - என்கின்ற பகுதிகளில் கூட தனிப்பட்ட கருத்துக்கள் வெளிப்பட்டிருக்கின்றன. இவற்றையும் நீக்கிவிடுதல் நல்லதே!Kovaisarala (பேச்சு)
- விருப்பம்--Anton (பேச்சு) 12:03, 26 நவம்பர் 2012 (UTC)