பேச்சு:யூத தொழுகைக் கூடம்

கேள்வி

தொகு

Synagogue என்பதை சினகாக் என்று தான் அழைப்பார்கள் என்று எண்ணுகிறேன். இதை யாராவது உறுதி படுத்த முடியுமா ? [சைனோகோகியு] என்ற ஒரு கட்டுரை இதற்கு redirect செய்ததால் கேட்கிறேன்

--சந்தோஷ் குரு 11:12, 17 பெப்ரவரி 2009 (UTC)

வணக்கம் சந்தோஷ்குரு, நீங்கள் கூறுவது சரியாக இருக்கலாம். ஆனால்[1] இல் இதற்கு இணையான தமிழ்ச் சொல் தரப்பட்டிருக்கிறது. அதன்படியே தமிழாக்கம் செய்திருந்தேன்.--Kanags \பேச்சு 20:23, 17 பெப்ரவரி 2009 (UTC)
யூதர்களுக்கு கோவில் ஒன்று இப்போது இல்லை. Synagogue என்னும் வார்த்தை விவிலியத்தில் தொழுகைக்கூடம் என்றே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மேலும் யூதர்களுக்கு கோவில் என்பது ஒன்று இருந்தது (முதல் கோவில் (யூதம்), இரண்டாம் கோவில் (யூதம்)), ஆனால் அது உரோமையர்களால் சுமார் கி.பி 70-இல் இடிக்கப்பட்டது. இதுவரை மீண்டும் கட்டப்படவில்லை, இக்கோவில் மீண்டும் கட்டப்பட்டால் அதே இடத்தில், அதே போன்றே கட்டப்பட வேண்டும் என்பது யூதர்களின் நம்பிக்கை. இக்கோவில் இருந்த இடத்தில் இப்போது பாறைக் குவிமாடம் உள்ளது. (காண்: en:Jewish temple மற்றும் en:Temple in Jerusalem). மேலும் முக்கியமாக யூதர்கள் Temple/கோவிலில் பலி செலுத்துவர், ஆனால் Synagogue/தொழுகைக்கூடத்தில் இறைவேண்டல் மட்டுமே நடக்கும். எனவே இக்கட்டுரைக்கு யூதர்களின் தொழுகைக்கூடம் என தலைப்பிட பரிந்துரைக்கின்றேன் . --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 14:34, 9 ஏப்ரல் 2012 (UTC)
யூதர்களின்/யூதருடைய செபக்கூடம்/ஜெபக்கூடம் என அழைக்கலாம். தமிழ் விவிலியம் அவ்வாறுதான் அழைக்கிறது. http://www.tamil-bible.com/lookup.php?Book=Acts&Chapter=13&Verse=&Kjv=0 (எ.கா) அப்போஸ்தலர் 13:5. சாலமி பட்டணத்தில் வந்தபோது அவர்கள் யூதருடைய ஜெப ஆலயங்களில் தேவவசனத்தைப் பிரசங்கித்தார்கள். யோவானும் அவர்களுக்கு உதவிக்காரனாயிருந்தான். --Anton (பேச்சு) 02:35, 14 ஏப்ரல் 2012 (UTC)
  • மேலே ஜயரத்தினா கூறுவதை ஒட்டி, இக்கட்டுரைத் தலைப்பை தொழுகைக் கூடம் (யூதம்) என மாற்றுவது பொருத்தமாய் இருக்கும். யூதர்கள் தம் வரலாற்றில் கோவில் என்பதைத் தொழுகைக் கூடத்திலிருந்து பிரித்து அறிகிறார்கள். கோவில் ஒன்றே ஒன்றுதான். அது எருசலேமில் இருந்தது. எருசலேம் கோவில் கிபி 70இல் அழிவுற்றபின் மீண்டும் கட்டப்படவில்லை. சிதறிப்போன யூதர்கள் வெவ்வேறு நாடுகளில் தொழுகைக் கூடங்களை (Synagogues) அமைத்து வழிபாடும் செபமும் நடத்தினார்கள். Anton குறிப்பிடுகின்ற விவிலிய மொழிபெயர்ப்புக்குப் பின் எல்லாக் கிறித்தவ சபைகளுக்கும் பொதுவான மொழிபெயர்ப்பு 1995இல் வெளியாயிற்று (காண்க: தமிழ் விவிலியம்). அங்கே synagogue தமிழில் தொழுகைக் கூடம் என்றே உள்ளது. அதையே விக்கியில் பயன்படுத்துவது சிறப்பு. மேலும், இக்கட்டுரை துப்புரவாக்கப்பட வேண்டும். அதை விரைவில் செய்கிறேன்.--பவுல்-Paul (பேச்சு) 04:34, 14 ஏப்ரல் 2012 (UTC)

யூதர்களின் தொழுகைக்கூடம் அல்லது தொழுகைக் கூடம் (யூதம்) என தலைப்பை மாற்றம் செய்யலாமே? கட்டுரைகளுக்கு பாவிக்க இலகுவாக இருக்கும். வாக்கெடுப்பு ஏதும் நடாத்த வேண்டுமா? --Anton (பேச்சு) 12:04, 16 சூன் 2012 (UTC)Reply

வாக்கெடுப்பு தேவை படாது என்றே நினைகின்றேன். நானே இதன் தலைப்பை மாற்றி விட்டேன். யாருக்கேனும் சிக்கல் இருப்பின் பேச்சு பக்கத்தில் தெரிவித்தால் அடுத்தென்ன செய்வதென்பதைப்பற்றி முடிவெடுப்போம். --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 14:29, 19 சூன் 2012 (UTC)Reply
Return to "யூத தொழுகைக் கூடம்" page.