பேச்சு:யூலியசு சீசர்
இதன் தலைப்பை வில்லியம் சேக்ஸ்பியர் க்கு மாற்றுவது பொருத்தம் என எண்ணுகிறேன். -- சிவகுமார் 07:09, 12 ஜனவரி 2006 (UTC)
- கட்டுரை உள்ளடக்கத்தை மட்டும் வெட்டி ஒட்டி விட்டு பக்கத்தலைப்பை அழித்து விடலாம். கட்டுரையை அப்படியே நகர்த்த வேண்டாம்--ரவி 07:54, 12 ஜனவரி 2006 (UTC)
வில்லியம் ஷேக்ஸ்பியர் எனும் கட்டுரை இருக்கிறது. ஆதலால் தலைப்புக்குப் பொருத்தமற்ற இக்கட்டுரையை நீக்கிவிட்டு ஜூலியஸ் சீசர் பற்றி எழுதி விரிவாக்க வேண்டும். --கோபி 19:06, 28 ஆகஸ்ட் 2006 (UTC)
கட்டுரைப் பக்கத்திலிருந்து வெட்டி ஒடப்பட்டது
ஆங்கில நாடக வேந்தன் வில்லியம் சேக்ஸ்பியர், இப்பூவுலகில் வாழ்ந்த மாபெரும் எழுத்து வேந்தன் என்று பொதுவாகப் போற்றப்படுபவர்.ஸ்டிராப்ஃபோர்ட்-ஆன்-ஆவோனில் 1564 இல் பிறந்தார். வில்லியம் சேக்ஸ்பியர் என்பது 17 ஆம் ஆக்ஸ்ஃபோர்ட் கோமகன் எட்வர்ட்-டி-வேர் தமக்கு வைத்துக் கொண்ட ஒரு புனை பெயர் என்பதைப் பெரும்பாலான சான்றுகள் வலியுறுத்துகின்றன. வில்லியம் சேக்ஸ்பியர் என்பவர் ஒரு பணக்கார வணிகர். அவர் வணிகம் நிமித்தம் லண்டன் சென்றார். நாடகங்கள் எழுதுவதற்கும் அவருக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.
சேக்ஸ்பியரின் தந்தை ஜான் ஒரு காலத்தில் செல்வச் செழிப்புடன் வாழ்ந்தவர். அவர் நொடித்துப் போய் வறுமையில் வீழ்ந்தார். சிறுவன் வில்லியம் மிகுந்த வறுமைச் சூழலில் வளர்ந்தான். எனினும், அவன், ஸ்டிராட் ஃபோர்ட் இலக்கணப் பள்ளியில் சேர்ந்தான்; அங்கு அவன் லத்தீனும், இலக்கியமும் கற்றான். வில்லியம் தனது 21 வயதை எட்டுவதற்கு முன்பே, வில்லியம், மனைவியையும் மூன்று குழந்தைகளையும் காப்பாற்ற வேண்டியிருந்தது.1590 களில், லண்டனில் ஒரு நடிகர் குழுவின் ஓர் உறுப்பினராக அவர் மீண்டும் தோன்றுகிறார். அவர் ஒரு வெற்றிகரமான நடிகராக விளங்கினார்.
விரைவிலேயே நாடகங்களும், கவிதைகளும் எழுதுவதில் அவர் ஈடுபாடு கொண்டார்.சேக்ஸ்பியர் லண்டனில் ஏறத்தாழ 20 ஆண்டுகள் தங்கியிருந்தார். இந்தக் கால அளவின்போது அவர் குறைந்தது 36 நாடகங்களை எழுதினார். 154 ஈரேழ் வரிப் பாடல்களை இயற்றினார். ஒரு சில ஆண்டுகளில் அவர் பெரும் பணக்காரர் ஆனார். ஸ்டிராட்ஃபோர்டில் 1597 இல் புதிய மாளிகை (New Palace) என்னும் விலையுயர்ந்த இல்லத்தை வாங்கினார். அவருடைய குடும்பத்தினர் எப்போதும் ஸ்டிராட் ஃபோர்டிலேயே இருந்து வந்தனர். அவர்களுக்கு அவர் தொடர்ந்து ஆதரவளித்து வந்தார்.
எழுத்தாளர் வில்லியம் சேக்ஸ்பியர் நன்கு கற்றறிந்த மேதையாகத் தோன்றுகிறார். அவருடைய சொல்லாட்சித் திறன் இதற்குச் சாந்று; வேறெந்த நாடகாசிரியரையும்விட, மிக அதிகமான சொற்களை அவர் கையாண்டிருக்கிறார்; ஃபிரெஞ்சு, லத்தீன் இருமொழிகளிலுங்கூட அவர் புலமை பெற்றவராக இருந்திருக்கிறார்; சட்டச் சொற்களை மிகத் துல்லியமாகக் கையாண்டிருக்கிறார்; பண்டைய இலக்கியங்களில் அவர் நுண்மாண் நுழைபுலம் பெற்றவராகத் திகழ்ந்திருக்கிறார்.
சேக்ஸ்பியர் தமது 48 வயதில் (1612) எழுதுவதிலிருந்து திடீரென ஓய்வு பெற்றார். ஸ்டிராட் ஃபோர்ட் திரும்பி வந்து மனைவி மக்களுடன் வாழலானார். அவர் அங்கு 1616 ஏப்ரல் மாதம் இறந்தார். சேக்ஸ்பியர், குறைந்தது 36 நாடகங்கள் இயற்றினார். இவற்றில் ஹாம்லெட்(Hamlet), மாக்பெத் (Macbeth), லியர் மன்னன் (King Lear), ஜூலியஸ் சீசர் (Julius Caeser), ஒத்தல்லோ (Othello), போன்ற அழியாக் காவியங்களும் அடங்கும். இவை தவிர, அற்புதமான 154 ஈரேழ்வரிப் பாக்களையும் (Sonnets) சில நெடிய கவிதைகளையும் படைத்துள்ளார்.
இலக்கியவாதிகள் அனைவரிலும் தலைசிறந்தவராக சேக்ஸ்பியர் விளங்குகிறார் என்பதை மறுப்பதற்கில்லை. சேக்ஸ்பியர் நாடகங்கள் இன்று நடந்தாலும், அரங்கம், நிரம்பி வழிகிறது. சேக்ஸ்பியரின் சொல்லாட்சித் திறன் ஈடு இணையற்றது. அவரது நாடகங்களைப் பார்க்காதவர்களும், படிக்காதவர்களுங்கூட அவரது நாடகங்களிலிருந்து மேற்கோள்கள் காட்டுவதை அடிக்கடி காண்கிறோம். மேலும், அவரது செல்வாக்கு இன்றிருந்து நாளை மறையும் ஒரு போலி பகட்டு அன்று என்பது தெளிவு, அவரது படைப்புகள், நானூறாண்டுகள் வாசகர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் மகிழ்வூட்டியிருக்கின்றன. அவை ஏற்கெனவே காலத்தை வென்று நிற்கின்றன. எனவே, சேக்ஸ்பியரின் படைப்புகளுக்கும் இன்னும் பல நூற்றாண்டுகள் செல்வாக்கு தொடர்ந்து நீடிக்கும் என்று கருதலாம்.
தலைப்பு
தொகுதமிழ் விக்கியில் பல்வேறு இடங்களிலும் பெயர்களை அவற்றின் மூல மொழி ஒலிப்பிற்குப் பொருந்துமாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளனவாயினும், இங்கே யூலியுசு கைசர் என்று மூல மொழியில் இருப்பதைத் தவிர்த்து விட்டு ஆங்கில மொழிக்கேற்ப வைத்திருப்பது தகாதென நினைக்கிறேன். அத்துடன், கைசர் என்பது இவனுடைய பட்டப் பெயரேயன்றி இவனுக்கு இடப்பட்ட பெயரன்று. எனவே, இதன் தலைப்பு யூலியுசு கைசர் என்றோ கையுசு யூலியுசு என்றோ இருக்க வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 02:34, 19 சூன் 2013 (UTC)
- தமிழில் பன்னெடுங்காலமாக ஜூலியற் சீசர் என்றே வழங்கி வருகிறது. ஒவ்வொரு மொழியிலும் அவர்கள் வழக்கப்படியே எழுதுகின்றனர். தலைப்பு யூலியசு சீசர் எனவே இருக்கலாம் என்பது எனது கருத்து. கட்டுரையின் ஆரம்பத்தில் மூல மொழிப் பெயர்ப்பைத் தமிழில் குறிப்பிடலாம். உருசிய மொழியில் அவர்கள் வழக்கப்படி கை யூலி சேசர் என்றெழுதுகிறார்கள்.--Kanags \உரையாடுக 10:00, 19 சூன் 2013 (UTC)
அனால் , தமிழ் விக்கியை யாவரும் பயன்படுத்தும் விதத்தில் கிரந்த எழுத்தோடு "ஜூலியஸ் சீசர்" என்ற வழி மாற்று தேவை ! ரோஹித் (பேச்சு) 05:31, 15 மே 2014 (UTC)