வாருங்கள்!

வாருங்கள், Guy of india, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--இரவி (பேச்சு) 16:04, 1 ஏப்ரல் 2012 (UTC)

ரொறன்ரோ கட்டுரையை நீங்கள் அது பற்றிய உரையாடலைக் கவனிக்காமல் நகர்த்திவிட்டீர்கள். இனிமேல் அப்படிச் செய்வதாயின் அருள் கூர்ந்து அதனைப் பற்றிக் குறித்த கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் உரையாடுங்கள்.--பாஹிம் (பேச்சு) 07:10, 6 மே 2012 (UTC)Reply

தேனி தலைப்பு மாற்றம் ஏன்?

தொகு

தேனி என்பதே தேனி நகருக்கான கட்டுரைக்கு பொதுவான பெயர். இந்தக் கட்டுரைக்கு தேனி - அல்லிநகரம் என்கிற வழிமாற்று ஒன்றும் இருக்கிறது. தாங்கள் தேவையில்லாமல் அல்லிநகரம் - தேனி என்று புதிய தலைப்பிற்கு நகர்த்தியுள்ளீர்கள். இது போன்ற தவறான நடவடிக்கைகளை இங்கு செயல்படுத்த வேண்டாம். நன்றி.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 12:02, 1 சூலை 2012 (UTC)Reply

தானியங்கித் தமிழாக்கம் தவிர்க்க வேண்டுகோள்

தொகு

வணக்கம். தாங்கள் உருவாக்கிய பல கட்டுரைகள் தானியங்கித் தமிழாக்கம் கொண்டு செய்ததாகத் தெரிகிறது. இவ்வாறான கட்டுரைகளைத் தமிழ் விக்கிப்பீடியாவில் ஏற்பதில்லை. இவை உடனுக்குடன் நீக்கப்படும். தொடர்ந்து இவ்வாறான கட்டுரைகளைத் தராமல் தாங்களே சொந்தமாக எழுத வேண்டுகிறேன். நன்றி.

Tamil Wikipedia doesn't accept translated articles. Such articles will be deleted at once. Please try to contribute on your own. If you are not well versed in Tamil, please try doing technical / image based contributions to Tamil Wikipedia. Thanks.--இரவி (பேச்சு) 07:12, 30 மே 2013 (UTC)Reply

சைதாப்பேட்டை நகராட்சி

தொகு

தாங்கள் தொடங்கியுள்ள சைதாப்பேட்டை நகராட்சி கட்டுரையில் இறந்த நகராட்சி என்று வந்துள்ளது. ஆங்கிலத்தினை அப்படியே மொழி பெயர்த்துள்ளீர்களா?. கவனிக்கவும். அத்துடன் ஏற்ற பகுப்பினையும் இணைக்கவும். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 08:07, 11 சூன் 2013 (UTC)Reply

வணக்கம் நண்பரே. சைதாபேட்டை கட்டுரையில் dead municipality என்பது இறுதியாக இணைக்கப்பட்ட அல்லது அறிவிக்கப்பட்ட என்ற பொருளில்தான் வந்துள்ளது. மேலும் தமிழக அரசின் வலைதளத்தில் அவ்வாறு குறிப்பிடப்படவில்லை. அவ்வாறு எங்கேனும் குறிப்பிட்டிருந்தால் அதற்கான சான்றினை இணைக்கவும். தங்கள் மீது காழ்ப்புணர்ச்சி யாருக்கு, ஏன் வரவேண்டும்? விக்கிப்பீடியா ஒரு கூட்டு முயற்சியாக் கலைக்களஞ்சியம் உருவாக்குமிடம். இங்கு உங்களைப்போல பங்களிப்பாளர்களை வரவேற்கவே செய்கிறோம். உங்கள் கருத்துகளையும் தேவைப்படும் உதவிகளையும், ஐயங்களையும் இங்கேயே பதிவு செய்யலாம். பிற விக்கியர்கள் உங்களுக்கு உதவக் காத்திருக்கிறோம். கலைக்களஞ்சிய நடைக்கேற்ப சிறப்பாக தங்கள் பங்களிப்பை நல்குமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:02, 11 சூன் 2013 (UTC)Reply
இந்த விக்கிப்பீடியா உங்கள் வலைதளம் அல்ல என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள் என நினைக்கிறேன். நானும் உங்களைப் போலவே என்னுடைய எழுத்துகள் மாற்றப்படுவது குறித்து வருத்தம் அடைந்திருக்கிறேன். நிர்வாகிகளை வாய்க்கு வந்தபடியெல்லாம் வசை பாடியிருக்கிறேன். அதன் காரணமாக விக்கிப்பீடியாவிலிருந்து முடக்கப்பட்டு இருக்கிறேன். :-( உங்கள் செயல்கள் என்னையே ஞாபகம் செய்கின்றன. சற்று பொறுமை காத்து, எங்களைப் போன்ற விக்கிப்பீடியாவில் பங்காற்றும் நபர்களின் பேச்சுக்கு செவி சாயுங்கள். நீங்கள் மிகச் சிறந்த விக்கிப்பயனராக வருவீர்கள். நாங்கள் உங்களுக்கு உதவவே கட்டுரையில் மாற்றம் செய்கிறோம். தவறாக இருந்தால் திருத்திக் கொள்ளவும் தயாராகவும் இருக்கிறோம். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 10:43, 12 சூன் 2013 (UTC)Reply

ஒரு வரிக் கட்டுரைகள்

தொகு

வணக்கம், ஒரு-வரிக் கட்டுரைகள் பொதுவாக தமிழ் விக்கிப்பீடியாவில் வரவேற்கப்படுவதில்லை. குறைந்தது மூன்று வரிகளாவது எழுதுங்கள். கட்டுரைகளில் ஆங்கிலப் பெயரையும் தந்தால் அவற்றை வேறு பயனர்கள் விரிவாக்க நினைத்தால் அவர்களுக்கு வசதியாக இருக்கும். நன்றி.--Kanags \உரையாடுக 09:59, 12 சூன் 2013 (UTC)Reply

நண்பரே, தாங்கள் பகுப்பு:திருவண்ணாமலை நகர விரிவாக்கப் பகுதிகள் என்ற பகுப்பின் கீழ் பல கட்டுரைகளை எழுதிவருவது கண்டு மகிழ்ச்சி. உங்கள் பங்களிப்பு விக்கிப்பீடியாவின் கட்டுரையை எண்ணிக்கையை கூட்ட வழிவகுக்கும். எனினும் கட்டுரையை இன்னும் சற்று விரிவாக படைத்தால் விக்கிப்பீடியாவின் தரம் உயரும். இரண்டு வரி, ஒரு வரி கட்டுரைகளில் இன்னும் ஒரு வரி இணைத்து, அதன் கீழ் தாங்கள் உருவாக்கிய வார்ப்புருவினையும் இணைத்துவிடுங்கள். நன்றி். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 10:36, 12 சூன் 2013 (UTC)Reply

குறிப்புதவிகள்

தொகு

தாங்கள் பேச்சுப்பக்கத்தில் கையெழுத்தினை இட பயனர் என்றெல்லாம் குறிப்பிடத் தேவையில்லை, நீங்கள் தொகுக்கும் பக்கத்தின் கீழ் -~~~~~ என இருப்பதை இட்டால் போதுமானது. பார்க்க: விக்கிப்பீடியா:கையெழுத்து நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 10:51, 12 சூன் 2013 (UTC)Reply

வேண்டுகோள்

தொகு

வணக்கம், ரோகித். நீங்கள் பெங்களூரில் பிறந்து தமிழ் மீதும் தமிழ்நாடு மீதும் ஆர்வம் கொண்டு எழுதி வருவதைக் கண்டு மகிழ்கிறேன். ஒரே ஒரு வேண்டுகோள்: திராவிட இயக்கத் தாக்கத்துக்குப் பிறகு, தங்கள் பெயரின் அடைப்பெயராகச் சாதிப்பெயரை இடும் பழக்கம் தமிழ் நாட்டில் அருகி விட்டது. ஆனால், தமிழரல்லாதோர், தமிழ்நாட்டுக்குப் பிறந்து வளரும் தமிழர் தங்கள் பெயரின் கடைசிப் பெயராக சாதிப் பெயரை இடும் வழக்கம் இருக்கிறது. தமிழ் விக்கிப்பீடியர்கள் தங்கள் சாதி அடையாளங்களைத் தமிழ் விக்கிப்பீடியாவில் தெரிவிக்காமல் செயற்படுவதை ஒரு நல்ல வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். எனவே, இதனைக் கருத்திற் கொண்டு தங்கள் பயனர் பக்கத்தில் உள்ள சாதிப் பெயர் குறிப்பை நீக்குமாறு வேண்டுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 14:48, 12 சூன் 2013 (UTC)Reply

  விருப்பம்--அராபத் (பேச்சு) 08:32, 13 சூன் 2013 (UTC)Reply

பெங்களூரில் பல தலைமுறைகளாக வசிக்கும் தமிழர்களில் முதலியார்கள் மட்டுமே கன்னடத்துடன் தமிழும் நன்கு அறிந்திருப்பதாக அறிந்திருக்கிறேன். கர்நாடகத்து தமிழ்ப் பயனரை வரவேற்கிறேன். எனினும், ரோகித் தங்களின் சமூக அடையாளத்தை நீக்குவது நல்லது. இது நம்மிடைய பாகுபாடற்ற உறவை வளர்க்க உதவும்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:57, 12 சூன் 2013 (UTC)Reply

ஒரே பெயரில் உள்ள கட்டுரைகள்

தொகு
வணக்கம், ரோகித் , தங்கள் ஆர்வம் கண்டு மகிழ்கிறேன் , தாங்கள் துவக்கிய ஊர் பற்றிய பல கட்டுரைகள் அதே பெயரில் உள்ளன.(எ-கா)
ஏற்கனவே உள்ள ஊர் பற்றிய கட்டுரைகளில் தாங்கள் விரும்பும் தகவலை விரிவாக்கம் செய்யலாம்,

தாங்கள் துவக்கிய நகராட்சி எனும் கட்டுரைகளை பிற தகவல் கொண்டு விரிவாக்கம் செய்ய இயலாது --ஸ்ரீதர் (பேச்சு) 13:26, 13 சூன் 2013 (UTC)Reply


சென்னையை சுற்றியிருந்த , இன்று சென்னையுடன் ஐக்கியம் ஆன நகர பகுதிகளை பற்றிய கட்டுரைகள் இது . மேலும் இவை " செங்கற்பட்டு மாவட்டத்தின் பழைய நகரங்கள் " எனும் பகுப்பில் இடம் பெற உள்ளதால் அந்த கட்டூரைகளின் பழமை நிலை கருதியும் அவற்றை இன்றைய பகுதிகளை பற்றி எழுதப்பட்டுள்ள கைட்டுரைகளுடம் இணைக்காமல் இருப்பது நன்று . ரோஹித் முதலியார் 04:10, 14 சூன் 2013 (UTC)

பதக்கம்

தொகு
  அசத்தும் புதிய பயனர் பதக்கம்
வணக்கம், ரோகித். தமிழ் விக்கிப்பீடியாவில் உங்கள் பங்களிப்பு நன்று. தொடர்ந்து சிறப்பாகச் செயற்பட வாழ்த்துகள். இரவி (பேச்சு) 07:04, 15 சூன் 2013 (UTC)Reply

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுவதற்கு நன்றி

வணக்கம், Guy of india!

 
உங்கள் கட்டுரையை பயிர் போல் வளர்ப்போம், காப்போம்! வித்திட்டதற்கு நன்றி!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள்.

மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 61ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் கட்டுரைகள் உதவும்.

பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:

ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.

--இரவி (பேச்சு) 07:05, 15 சூன் 2013 (UTC)Reply

மிக்க நன்றி -

ரோஹித் 07:10, 15 சூன் 2013 (UTC)

  விருப்பம், மகிழ்ச்சி! தங்களின் வேகம் அபாரம்! எனக்கு அவ்வப்போது கன்னடம் கற்றுக் கொடுங்கள். -தமிழ்க்குரிசில்

நன்றி நிச்சயமாக ...ದೋಸ್ತ್ ಧನ್ಯವಾದಗಳು (தோஸ்த் தண்யவாடுகலு) ரோஹித் 12:12, 17 சூன் 2013 (UTC)

நன்றி ரோகித்! நேரம் கிடைக்கும் போது கன்னடச் சொற்களை தமிழ் விக்சனிரியில் சேர்த்து தமிழில் பொருளுடன் விளக்குங்கள். தமிழ் விக்சனரி கன்னடம் கற்பது தொடர்பான அடிப்படை விடயங்களை தமிழ் விக்கிநூல்களில் எழுதி உதவுங்கள். விக்கிநூல்கள் அங்கே ஏற்கனவே கன்னடம் கற்பது தொடர்பான பக்கம் ஒன்றை தொடங்கியுள்ளேன். அதைத் திருத்தி உதவுங்கள். இங்கும் கர்நாடகம் தொடர்பான கட்டுரைகளுக்கு கன்னட மொழி வழி ஆதாரங்கள் கிடைத்தாலும் இணைத்து உதவுங்கள். விரைவில் பேசுவோம். வணக்கம் -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:14, 18 சூன் 2013 (UTC)Reply

தலைப்பு

தொகு

ரோகித், பெங்களூரின் பல பகுதிகளின் பெயர்களை தமிழுக்கு ஏற்ப மொழி பெயர்த்து எழுதி வருகின்றீர்கள் (எ.கா. சந்தாபுரா – சந்தை புரம்). ஏற்கனவே இருக்கும் கட்டுரைகளிலும் இவ்வாறான மாற்றங்களை செய்துள்ளீர்கள். (கோரமங்களா – கோரமங்கலம்). இது சரியான வழிமுறை அல்ல. அந்தந்த ஊர்களின் பெயர்களை, அவர்களின் உச்சரிப்பின் அடிப்படையிலேயே எழுதுவது நல்லது. --அராபத் (பேச்சு) 06:23, 18 சூன் 2013 (UTC)Reply

நாளே அவருனு இதே தரா தமிழ் நாடு அன்னதா தமிழ் நாட்ஊ அன்தா பரியக்கே சுருவ் மாடுத்ரே சென்னாகிரல்லா  

நண்பர் அபாரத் அவர்களுக்கு , இது தமிழ் விக்கிபீடியாவின் நியதிகளில் ஒன்றாகும் என நினைக்கிறேன். ஏனெனில் "moscow " வை நாம் தமிழ்படுத்தி "மாசுகுவா" என்று எழுதி இருப்பதை அறிந்து இருக்கிறேன். மேலும் பெங்களூர் தமிழர்களும் "சந்தாபுரா " வை "சந்தைபுரம்" என்று தான் வழங்கு கிறார்கள். மேலும் "madiwalla " - "மடவாளம்" , "halasooru " - "அலசூர்" , "mulbaagal "- "முல்லை காடு " என்பது இன்றும் கர்நாடக தமிழர் மத்தியில் வழக்கில் இருக்கும் பெயர்களாகும். "இவை இன்றளவும் பெங்களூர் தமிழ் மக்கள் இடையில் வழக்கில் உள்ள உச்சரிப்பே ஆகும்". ரோஹித் 06:39, 18 சூன் 2013 (UTC) ನಿಮ್ಮ ಮಾರ್ಗದರ್ಶನ ತುಂಬಾ ಧನ್ಯವಾದಗಳು ತಮಿಳುನಾಡು ಹುಟ್ಟಿದ್ದರೂ ಕೂಡ, ತಮಿಳು ಭಾವನೆ ಹೊಂದಿರುವ

"தமிள்நாடு ஹுட்டிட்டறு குட , தமிலு பவனே ஹோண்டிருவ . "  

ரோஹித் 06:49, 18 சூன் 2013 (UTC)

Moscow என்பதை நாம் மாஸ்கோ என எழுதாமல் மாசுகோ என எழுதுவது கிரந்த நீக்கம் மட்டுமே. மொழி பெயற்ப்பு கிடையாது. இதன் படி சிவாஜி நகராவை நாம் சிவாசி நகர் என எழுதலாம், ஆனால் சிவாஜி நகரம் என எழுதக்கூடாது.

மேலும் ஹலசூரூ அல்சூர் என அழைக்கப்படுவதை நான் அறிவேன். ஆனால் "madiwalla " - "மடவாளம்" , "mulbaagal "- "முல்லை காடு " என அழைக்கப்படுவதை இப்போதுதான் உங்கள் மூலம் அறிகிறேன்.--அராபத் (பேச்சு) 06:54, 18 சூன் 2013 (UTC)Reply

நீவு யவ சேற்ற ? ரோஹித் 06:56, 18 சூன் 2013 (UTC)

//நீவு யவ சேற்ற ?// அர்த்தாக்தாயில்லா :( --அராபத் (பேச்சு) 07:02, 18 சூன் 2013 (UTC)Reply

Nivu yava ksetra? நீவு யாவ நகரா இவே ? கன்னட சொற்களை தமிழில் அப்படியே எழுத சிரமமாய் உள்ளது... உங்களுக்கு இல்லையே? ரோஹித்

நானு இல்லி எலக்ட்ரானிக் சிட்டியல்லி இதினி. இல்லி பந்து என்டு வருசா மேலேனே ஆகிதே--அராபத் (பேச்சு) 07:18, 18 சூன் 2013 (UTC)Reply
எனக்கு கன்னடம் ஓரளவு சரலமாக பேச வரும். ஆனால் எழுத/படிக்க தெரியாது :(--அராபத் (பேச்சு) 07:20, 18 சூன் 2013 (UTC)Reply

பெங்களூர் தமிழர்

தொகு

பெங்களூரின் பகுதிகள் பற்றிய கட்டுரைகளில் தமிழர் பற்றியும் எழுதியுள்ளீர்கள். தமிழர்களின் சதவிகிதம் தங்களுக்கு எப்படி தெரியும்? ஆதாரம் கிடைத்தால் சேருங்கள். இல்லையெனில், இவற்றை போலி என எண்ணக் கூடும். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 05:17, 23 சூன் 2013 (UTC)Reply

அலசூர் போன்ற கட்டுரைகளில் எழுதியிருக்கும் தகவல்களை சரி பார்க்க வேண்டுகிறேன். ஒரு பகுதி பற்றிய கட்டுரை கன்னடத்திலும் தமிழிலும் ஒரே மாதிரியாகவே இருக்க வேண்டும். எனவே, தமிழில் சேர்த்திருக்கும் தகவல்களை கன்னடக் கட்டுரைகளிலும் சேர்க்கவும். நன்றி!-தமிழ்க்குரிசில் (பேச்சு) 05:19, 23 சூன் 2013 (UTC)Reply

சியாம் ரயில் பாதை

தொகு

வணக்கம், மேற்படி கட்டுரை இணையத்தில் இருந்து எடுத்து எழுதுகிறீர்கள். அதனால் நீக்கியிருக்கிறேன். இது குறித்த விரிவான மூலக் கட்டுரை சயாம் மரண இரயில்பாதை என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ளது. கவனிக்க.--Kanags \உரையாடுக 09:01, 30 சூன் 2013 (UTC)Reply

மாதம் 250 தொகுப்புகள்

தொகு

வணக்கம், Guy of india!

 

நீங்கள் கடந்த மாதம் 250 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்திருப்பதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 1000 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

--இரவி (பேச்சு) 05:43, 2 சூலை 2013 (UTC)Reply

சரித்திர நிகழ்வுகளையும் எழுதலாமா ?

தொகு

அன்பு விக்கிபீடியர்களுக்கு , சரித்திர நிகழ்வுகளையும் விக்கிப்பீடியாவில் எழுதலாமா ! மேலும் நான் எழுத விழைவது அரசியல் திருப்புமுனையும் அதற்கு வித்திட்ட ஒரு நிகழ்வையும் பற்றி , மேலும் அதை நான் சில புத்தகங்கள் வாயிலாக அறிந்துக்கொன்டாதால் சான்றுகளை எவ்வாறு இணைப்பது ? ஐயங்களை களைய ஆலோசைனை வேண்டும் ......... ரோஹித் (பேச்சு) 14:11, 2 சூலை 2013 (UTC)Reply

முடியாது ரோகித்! வரலாற்றை எழுதலாம். தனித்தனி நிகழ்வுகளை எழுத முடியாது. அசோகர் ஆட்சி புரிந்தார், மரம் நட்டார் என்றால் சரி. அவர் அமைச்சருக்கு ஆயிரம் பொன் வழங்கினார் என்பது போன்ற கதைகளை எழுதக் கூடாது. தேவையான இடங்களில் மட்டும், போர், ஆட்சிமுறை பற்றி போதிய தகவல்களைத் தரலாம். சுவாகதகளு! ;-) -தமிழ்க்குரிசில்

ஆதாரங்களை இணைக்க, தகவல்<ref>ஆதாரம்</ref> என்று தரவும். கட்டுரையின் இறுதியில் {{reflist}} என்று எழுதவும். ஆதாரம் தானே பக்கத்தின் இறுதியில் தெரியும். புரியவில்லை என்றால் ஆதாரம் சேர்க்கப்பட்ட கட்டுரை ஒன்றை தொகுத்துப் பார்க்கவும். -தமிழ்க்குரிசில்

இல்லை ..........அப்படி கேட்கவில்லை நிகழ்வின் பெயர் திருவண்ணாமலை இடைதேர்தல் 1967 . 1967 இல் நடைபெற்ற இந்த தேர்தல் தான் காங்கிரசின் செல்வாக்கு குறைவதைவும்.. தி.மு .கழக வளர்ச்சியையும் பறைசாற்றியது................இதன் பின் தான் காமராசர் பதவி துறந்து கட்சி பணியாற்ற விழைந்தார். மற்றவறைவும் செயல் பட வைத்தார் .... இந்திய அரசியல் மாற்றத்திற்கு வித்திட்ட காமராசர் திட்டம் தின் மூல காரணம் இந்த நிகழ்வு .

மறுமொழி

தொகு

எந்த தகவலையும் சேர்க்கலாம் ரோகித்! ஆனால் அது சொந்த விமர்சனமாக இருக்கக் கூடாது, இயல்பாக இருக்க வேண்டும். திட்டு/புகழ்ச்சி இருக்கக் கூடாது! நிகழ்வினை விவரமாக எழுதலாம். ஆங்காங்கே, மாமேதை, புரட்சித் தலைவர், பெரு வெற்றி, நல்ல மனிதர் போன்ற சொற்கள் வரக் கூடும். இவற்றை தவிர்க்கவும். எழுதத் தொடங்குங்கள். தவறிருந்தால் திருத்துவோம். சிறப்பாக இருந்தால் பாராட்டுவோம். பொருந்தாத கட்டுரை எனில் நீக்கப் படலாம். கவலை வேண்டாம். சுவாகதகளு! -தமிழ்க்குரிசில்

வந்தனே , எழுத துவங்குகிறேன் அனால் முழுமையாக முடியாது ......... படிப்படியாக. தண்யவாடுகலு ச்நேஹிட ரோஹித் (பேச்சு) 15:08, 2 சூலை 2013 (UTC)Reply

சிநேகித! இல்லி விக்கிப்பீடியாவின்டெ கட்டுரைகளு குறைந்தது நாலு வாக்கியங்களு இருக்கணும். அப்புறம் தொடர்ந்து எழுதலாம். :-) இல்லாவிடில் நீக்கப்படக் கூடும். கவனத்தில் கொள்க!

பொதுவான கலந்துரையாடல்களை ஆலமரத்தடியிலும், உதவி தொடர்பான கேள்விகளை ஒத்தாசைப் பக்கத்திலும் கேட்க வேண்டும். (உங்கள் பேச்சுப்பக்கத்தில் கேள்வி கேட்டால் எல்லாருக்கும் தெரியாது. உங்கள் பக்கத்தில் எழுதியவர்களும் அண்மைய மாற்றங்களைப் பார்ப்பவர்க்கும் மட்டுமே தெரியும். எனவே, பொதுவான பக்கங்களில் கேட்கவும். விரைவில் பதில் கிடைக்கும். தனிப்பட்ட உரையாடல்களை நமது பக்கங்களில் எழுதலாம்!) :-)- தமிழ்க்குரிசில் நிம்ம மஹிடிககி தன்யவாடுகலு ரோஹித் (பேச்சு) 16:04, 2 சூலை 2013 (UTC)Reply

தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்திற்கான அழைப்பு

தொகு

வணக்கம். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான பண்பாட்டுச் சுற்றுலாவில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். தங்கள் வருகையை திட்டப்பக்கத்தில் உறுதிப்படுத்தி விடுங்கள். இது "அழைப்புள்ளவர்களுக்கு மட்டும்" என்ற வகையில் ஏற்பாடு செய்யப்படும் சுற்றுலா. எனவே, உங்கள் நண்பர்கள், உறவினர்கள் முதலியோரை அழைத்து வருவதைத் தவிர்க்கலாம். சுற்றுலாவுக்கு அடுத்த நாள் பயிற்சிப் பட்டறைகள், கொண்டாட்டங்கள் கூடிய இரண்டாம் நாள் நிகழ்வு திறந்த அழைப்பாக ஏற்பாடு செய்கிறோம். இதிலும் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைக்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 20:18, 18 செப்டம்பர் 2013 (UTC)

கட்டுரைப் போட்டி

தொகு
வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 07:52, 27 அக்டோபர் 2013 (UTC)Reply

தகவலுக்காக...

தொகு

வணக்கம்! ஸ்ரீ எனும் கிரந்தத்தினைத் தவிர்க்க, சிறீ என எழுதலாம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:20, 14 மே 2014 (UTC)Reply

நன்றி ரோஹித் (பேச்சு) 05:16, 14 மே 2014 (UTC)Reply

சந்தேகம்

தொகு

ஆர்ஜிதம் என்றால் என்ன? தமிழ்ச் சொல்லா?--Kanags \உரையாடுக 07:42, 14 மே 2014 (UTC)Reply

தெரியவில்லை ஆனால் இதன் பொருள் - கையகப்படுத்துதல் (இங்கு பாருங்கள்)--ஸ்ரீகர்சன் (பேச்சு) 07:53, 14 மே 2014 (UTC)Reply

ஆர்ஜிதம் என்பதற்கு தான் " கொண்டுள்ள இடம் " , "தன்னகத்தே கொண்ட இடம் " என்பது தான் பொருள் . தசை யானது எந்த எலும்பில் இருந்து வருகிறதோ அது அந்த எலும்பை {அ} எலும்பிற்கு சொந்தமானது . ரோஹித் (பேச்சு) 08:25, 14 மே 2014 (UTC)Reply

உங்களின் கவனத்திற்கு...

தொகு

வணக்கம்! கல்வி கற்றலுக்கு நடுவிலும், தமிழ் விக்கியில் உங்களின் பங்களிப்பினைத் தருவது பாராட்டத்தக்கது. அதே நேரத்தில், நீங்கள் எழுதும் கட்டுரைகளில் உரிய ஆதாரங்களை இணைத்து குறைந்தபட்ச தரத்தினை காத்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன். இதன்மூலம் இந்தக் கட்டுரை எந்த மேற்கோளையும் சுட்டவில்லை எனும் வார்ப்புரு இடப்படுவதனை நீங்கள் தவிர்க்கலாம். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:07, 15 மே 2014 (UTC)Reply

ஆதாரங்களை எப்படி விக்கியில் சேர்ப்பது? ஏதேனும் தனி மென்பொருள் உள்ளதா ? ரோஹித் (பேச்சு) 04:56, 15 மே 2014 (UTC)Reply

மேற்கோள்கள் (References) என்பதையே ஆதாரங்கள் எனக் குறிப்பிட்டேன்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:11, 15 மே 2014 (UTC)Reply

மேற்கோள்களை எப்படி இடுவது என்று தான் கேட்டேன் ! அனால் இப்போது ஆங்கில பக்கத்தினை பார்த்து தெரிந்துக் கொண்டேன். நன்றி !! எடுத்துரைத்தமைக்கு ! ரோஹித் (பேச்சு) 05:14, 15 மே 2014 (UTC)Reply

சில திருத்தங்களை செய்துள்ளேன். அவைகளைக் கவனியுங்கள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:19, 15 மே 2014 (UTC)Reply

உங்களின் கவனத்திற்கு

தொகு

இங்கு உங்கள் கருத்தை தெரிவிக்கவும்--நந்தகுமார் (பேச்சு) 09:47, 18 மே 2014 (UTC)Reply

விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு

தொகு
 
அனைவரும் வருக

வணக்கம் Guy of india!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.

--♥ ஆதவன் ♥

。◕‿◕。 ♀ பேச்சு ♀ 07:22, 30 திசம்பர் 2014 (UTC)Reply

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters

தொகு

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:35, 30 சூன் 2021 (UTC)Reply

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Guy_of_india&oldid=3184174" இலிருந்து மீள்விக்கப்பட்டது