instant replay என்பதற்கு சரியான தமிழ் சொல் தெரியவில்லை. பல டென்னிஸ் ஆட்ட சொற்களுக்கு தமிழில் சொற்கள் இல்லை. ஆங்கில சொற்களையே பயன்படுத்தலாமா? --குறும்பன் 18:30, 12 செப்டெம்பர் 2010 (UTC)Reply

instant replay என்பதை உடனடி மறுஓட்டம் எனப் பொதுவாகக் குறிப்பிடலாம் எனக் கருதுகிறேன்.இக்கட்டுரையில் குறிப்பிட்ட இடத்தில் உடனடி காணொளி மறுஆய்வு என்றும் குறிப்பிடலாம்.
டென்னிசு கட்டுரையின் உரையாடல் பக்கத்தில் டென்னிசு ஆட்டம் தொடர்பான ஆங்கிலச்சொற்களுக்கு தமிழ்ச்சொற்கள் கோரலாம்.ஆட்ட வெற்றிப்புள்ளிகளைக்(score) குறிப்பிடுகையில் game=ஆட்டம்,set=தொகுப்பு, match=போட்டி என்று குறிப்பிட்டு வருகிறேன்.Grand Slam என்பதற்கு பெருவெற்றிதொடர் எனக் குறிப்பிடுகிறேன்.tiebreakerஐ சமநிலை முறிவு எனக் குறிப்பிட்டுள்ளேன். love,deuce என்பவனவற்றிற்கு சுழி,சமன் என்றுக் குறிப்பிடலாம்.--மணியன் 19:42, 12 செப்டெம்பர் 2010 (UTC)Reply
மணியன் உங்கள் ஆக்கங்கள் மிகவும் சரியானதாகவே எனக்குப் படுகின்றன. காணொளி என்னும் ஒன்று மட்டும், பலரும் பயன்படுத்தினாலும், பொருத்தமான சொல் அல்ல என்பது எக் கருத்து. ஒளியைக் காணாமல் என்ன செய்யப் போகிறோம்?! காணொளி என்பதற்கு இயற்பியல் நோக்கில் ஒரு பொருள் கொள்ள இடம் உண்டு,. காணக்கூடிய ஒளி, அதாவது ஒளியலைகளில் கண்ணால் காணக்கூடிய ஒளியலைகளின் தொகுதி, visible spectrrum. இது ஏறத்தாழ 400-700 நானோமீட்டர் (இது 390 முதல் 750 நா.மீ வரையும்கூடச் செல்லும்). காணொளி = visible spectrum. வீடியோ என்பதற்கு நிகழ்படம் என்பது பொருத்தமானது. ஒருசிலர் காணொலி என்கிறார்கள் (இது சற்று தேவலாம் என்றாலும், இதனைவிட ஒளியொலி என்பதே மேல்). எனவே வீடியோ என்பதற்கு நிகழ்படம் நல்ல தேர்வுகளுல் ஒன்று. Instant replay என்பதை நீங்கள் கூறும் உடனடி மறுவோட்டம் என்பதோடு உடனடி மீள்காட்டு என்றும் சொல்லலாம். score என்பதை வெற்றிப்புள்ளி என்பதோடு அது வழங்கும் சூழல்களில் எல்லாம் இச்சொல் பொருந்துமா என்றும் ஒரு தேர்வு செய்து பார்க்க வேண்டும். மற்றபடி எல்லாச் சொற்களுமே நன்றாக உள்ளன.--செல்வா 21:02, 12 செப்டெம்பர் 2010 (UTC)Reply

தலைப்பு மாற்றம்

தொகு

இந்த பக்கத்தின் தலைப்பு யூ.எசு. ஓப்பன் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை ஆங்கிலத்தில் US Open எனக் கூறுவார்கள் எனவே தமிழில் இதனை கூறினால் யூ எஸ் ஓப்பன் என்றே கூறவேண்டும். இது சரி என்றால் உங்கள் கருத்துக்களை தொரிவியுங்கள்.--thaya (பேச்சு) 04:42, 1 அக்டோபர் 2013 (UTC)Reply

கிரந்த எழுத்து தவிர்த்து தனித் தமிழில் எழுதும்போது இவ்வாறுதான் எழுதப்பட வேண்டியுள்ளது. ஆயினும், யூ.எஸ். ஓப்பன் என்ற வழிமாற்றும் உள்ளது. --Anton (பேச்சு) 05:31, 1 அக்டோபர் 2013 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:யூ.எசு._ஓப்பன்&oldid=1506889" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "யூ.எசு. ஓப்பன்" page.