பேச்சு:ரோசிதுகள்

Add topic
Active discussions

இந்த வார்ப்புரு விக்கித்தரவில் பல விக்கிமீடியத் திட்டங்களை உள்ளடக்கி செய்யப்பட்டுள்ளது. அதன் படி சில மாற்றங்களை செய்ய விரும்புகிறேன். --உழவன் (உரை) 13:21, 4 பெப்ரவரி 2017 (UTC)

User:Info-farmer, இந்தக் கட்டுரையில் ஏன் மாற்றம் செய்தீர்கள்? படம் உட்படத் தகவல்கள் எதுவும் இல்லையே? விக்கித்தரவில் பயன்படுத்தப்படும் வார்ப்புருவை எவ்வாறு விக்கிக் கட்டுரையில் பயன்படுத்துவது? இரண்டும் வெவ்வேறு அல்லவா?--Kanags \உரையாடுக 22:45, 4 பெப்ரவரி 2017 (UTC)
விக்கியினங்களில் தொடங்கிய இக்கேள்வி, விக்கித்தரவில் மேலும் வளர்க்கப்பட/நிறைவு பெற, அதற்குரிய தொழினுட்ப உதவி கோரப்பட, மாற்றப்பட்டுள்ளது. இப்பொழுது [ இதுபோன்று சிவப்பு இணைப்புகள் இருந்தால், அந்த சொற்களை நிரல் வழியே எடுத்து, அதற்குரிய சிவப்பு இணைப்புகளை நீக்க மாற்றங்கள் செய்ய கற்று வருகிறேன். ஆங்கில தட்டச்சு இதுவரை பழகவில்லை. அதனால், பல இடங்களில் உரையாட நேரவிரயம் ஆகிறது. அதுவே தடை. தாங்களும் இதில் இணைய விருப்பமா? இது நிறைவு பெறும் போது, உலகத் தரமுள்ள விக்கியினங்களில் செய்யப் படும் Taxobox மாற்றங்கள், விக்கத்தரவு வழியேயும், பொதுவகத்தில் உள்ள படங்களும் இங்கே எப்பொழுதும் இற்றைப்படுத்தப் பட்ட நிலையில் தெரியும். வேறுவிதமாகச் சொல்லப் போனால், Automatic Taxobox என்பதன் உயர்மட்ட தொழில் நுட்ப வளர்ச்சி தமிழ் விக்கிப்பீடியாவில் நிலைக்கும். இதனால், விரைவாக உயிரியல் கட்டுரைகள் வளரும். ஆனால், நான் தாவரவியல் கட்டுரைகளில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். --உழவன் (உரை) 01:42, 5 பெப்ரவரி 2017 (UTC)

தலைப்பு மாற்றம் தேவைதொகு

Rosids என்ற தாவர வகைப்பாட்டியல் சொல்லுக்கு தமிழில் என்ன பொருள் என்று விளங்கவில்லை. அது குறித்து தேடியும் கிடைக்காததால், தற்போதுள்ள ஒலிப்பு மாற்ற தலைப்பை சீர் படுத்த வேண்டும் என எண்ணுகிறேன். இதனை ஒலிக்கும் போது, இரு சொல் போன்றே வருகிறது. ரோசித்துகள் என்றோ, உரோசிட்டுகள் என்றோ மாற்றலாமே? ரோசா என்பதை தமிழ் ஒலிப்புப் படி, உரோசா என்றே அழைக்கிறோம். அதாவது முதலில் மெய்யெழுத்தான ர் வரக்கூடாது என்பது நமது இலக்கண விதி என்பதால் இதனை மாற்றுக.--உழவன் (உரை) 01:24, 12 பெப்ரவரி 2017 (UTC)

ஆங்கிலத்தில் Rosids தமிழில் ரோசிதுகள் என்றே வரவேண்டும். Rosits என்றால் மட்டுமே ரோசித்துகள் அல்லது ரோசிட்டுகள் என வரலாம். உரோசிதுகள் என எழுதுவது இன்னும் சிறப்பாக இருக்கும். ஆனாலும், ஆங்கிலக் கட்டுரையில் ஏன் பன்மையில் தலைப்பு வைத்துள்ளார்கள் என்று தெரியவில்லை.--Kanags \உரையாடுக 02:00, 12 பெப்ரவரி 2017 (UTC)
ஆங்கிலத்தில் t என்பதை ஒலி குறைவாகவும், d என்பது அழுத்தம் அதிகமாகவும் இருப்பதாக எண்ணுகிறேன். ஆங்கில மொழிச்சூழலில், என்னைப்போன்ற அதிக பயனர்கள் வாழ்வதில்லை என்பதால், தற்போதுள்ள ரோசிதுகள் என்பதை, ரோசி துகள் என்று இரு சொல்லாகவே நான் பார்க்கிறேன். அந்த இரண்டையும் இணைக்கவே த் என்பதை இணைக்க விரும்புகிறேன். இது ஒலிப்பு குறித்த எண்ணம். ஆனால், இந்த தாவரவியல் சொல்லுக்குரிய பூக்கும் தாவரங்கள் 70, 000க்கும் அதிகமாக அடங்குகின்றன. பொதுவாக தாவரவகைப்பாட்டியலில், பூவுறுப்புகளின் புறஅமைப்புகளைக் கொண்டு முதலிலும், பிறகு மரபியல், வேதியியல் பண்புகளின் அடிப்படையிலும் தேவைப்படும் போது பிரிக்கின்றனர். இதுபற்றி சில தாவரவியல் ஆர்வமுள்ளோரிடம் பேசிய போது,
  1. //The Rosids are a large group of diverse eudicots that, together with Asterids, Caryophyllids, and a few other lineages, make up what are known as the "crown eudicots". //
  2. பெரும்பாலான தாவரங்கள் hypanthiumஎன்ற ஆண் உறுப்பு(Elongated filament = நீள் மகரந்தத்தண்டு = நீள் பூத்துகள் தண்டு) அமைப்பினைப் பெற்று இருக்கிறது.

இவைகளின் அடிப்படையில் நல்ல தமிழ் பெயரை வைப்பதே சிறப்பாகும். நல்ல தமிழ் பெயராக சிந்தித்து, ஏதேனும் பரிந்துரையுங்கள். நானும் கட்டுரையை பலவழிகளிலும் வளர்க்க முயற்சிக்கிறேன். மேலும், இதன் அடிப்படையில் பல நூறு கட்டுரைகளை உருவாக்கலாம் என்பதால் இப்பெயரிடலை முக்கியமாகக் கருதுகிறேன். ஆவலுடன்...--உழவன் (உரை) 04:05, 12 பெப்ரவரி 2017 (UTC)

இப்போதைக்கு ஒருமையில் உரோசிது எனத் தலைப்பிடலாம். சரியான தமிழ்ச் சொல் கண்டுபிடித்த பின்னர் மாற்றலாம். ஆனால் உரோசித்து எனவோ அல்லது உரோசித்துகள் எனவோ எழுதுவது தவறு. @செல்வா:.--Kanags \உரையாடுக 04:11, 12 பெப்ரவரி 2017 (UTC)
சரி. தமிழ் பெயருக்கு பிறரின் எண்ணங்களை இங்கு தரக்கோருகிறேன். அதுவரை இத்தலைப்பையே பேணலாமென்று எண்ணுகிறேன். ஓரிரு வாரங்கள் பார்க்கலாம்.--உழவன் (உரை) 04:16, 12 பெப்ரவரி 2017 (UTC)

பிரான்சிய கட்டுரைதொகு

இந்த பிரஞ்சுக்கட்டுரையில் அமைப்பு, விக்கியினங்கள் திட்டத்தினை ஒத்து இருக்கிறது. இதன் தொழில்நுட்பம் தாவரவியற் தகவற் சட்டத்தினை அமைக்க உதவும்--உழவன் (உரை) 10:26, 24 பெப்ரவரி 2017 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ரோசிதுகள்&oldid=2193158" இருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ரோசிதுகள்" page.