டோபி என்பது ஆங்கில பெயர், வண்ணார் என்பதே இதற்கான தமிழ் பெயர். 69.255.40.38 03:36, 1 டிசம்பர் 2007 (UTC)

சலவைத் தொழிலாளிகள் சமூகம் என்றோ டோபி என்றோ அழைப்பது தற்போதுள்ள தலைப்பை விடப் பொருத்தமாக இருக்கும் என்பது என்னுடைய அபிப்பிராயம். Barber ஐ சிகையங்கரிப்பாளர் என்றுதானே தமிழில் எழுதுகின்றேன். மேற்குறிப்பிட்ட சமூகத்தவரையும் ஒன்றில் நல்ல தமிழில் அழைக்கலாம் அவ்வாறு இல்லாவிட்டால் டோபி என்றே சொல்லலாம். --உமாபதி 10:22, 1 டிசம்பர் 2007 (UTC)

வண்ணார் என்று அழைப்பது இன்றைய தமிழகச் சூழலில் இகழ்ச்சிக்குரிய சொல்லாகப் பார்க்கப்படுகிறது என்று குறிப்பிட விரும்புகிறேன். சலவைத் தொழிலாளர் என்று எழுதலாம்--ரவி 19:00, 1 டிசம்பர் 2007 (UTC)

சாதி அடிப்படை

தொகு

கட்டுரையில் சாதி அடிப்படை மட்டுமே குறிக்கப்பட்டிருப்பதை இப்போதே கவனித்தேன். அப்படியென்றால் சலவைத் தொழிலாளர் என்ற பெயர் கட்டுரைத் தலைப்புக்குப் பொருந்தாது என்று நினைக்கிறேன். இந்தச் சாதியைச் சேராத இன்றைய நவீன சலவைத் தொழிலாளர்களையும் இந்தச் சாதியோடு பிணைத்துக் காட்டும் ஆபத்தாகி விடும். வண்ணார் என்று இவர்களைக் குறிப்பார்களே தவிர, அந்தச் சாதியின் பெயரே வண்ணாரா என்று எனக்குத் தெளிவில்லை. சாதிகளின் பெயர்களில் சாதிகள் குறித்த கட்டுரைகளை தமிழ் விக்கிபீடியாவில் எழுதுவதைத் தவிர்க்க இயலாது. ஆனால், அவை வெறும் தொழிலோடு பிணைத்துக் காட்டும் குறுங்கட்டுரைகளாக இல்லாமல், அவர்களின் மக்கள் தொகை விவரங்கள் போன்ற பிற புள்ளி விவரங்கள், விவரிப்பு இருப்பதாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். வெறும் தொழிலை மட்டும் குறிப்பிடும் கட்டுரைகளைத் தவிர்க்கலாம்--ரவி 23:28, 1 டிசம்பர் 2007 (UTC)

விக்கிபீடியா நிர்வாகிகளுக்கு வணக்கம்.

தொகு

https://en.m.wikipedia.org/wiki/Vannar மேலே சுட்டிகாட்டியது ஆங்கில விக்கிபீடியா பக்கம் இதை அடிப்படையாக வைத்து இந்த கட்டுரை உருவாக்கப்படவில்லை,இந்த கட்டுரையில் தேவையில்லாத விளக்கங்களும் தொகுப்புகளும் உள்ளது ஆங்கில விக்கிபீடியா ஆதாரம் அனைத்தும் தெளிவாக உள்ளது, அதை மையப்படுத்தி இந்த கட்டுரையை திருத்தி எழுதவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். Navaneethan tiger (பேச்சு) 17:19, 3 திசம்பர் 2020 (UTC)Reply

விக்கிபீடியா நிர்வாகிகளுக்கு வணக்கம்

தொகு

தமிழ் விக்கிபீடியா மட்டும் அல்லாமல் அனைத்து மொழி விக்கிப்பீடியா பக்கத்திலும் சான்று கண்டிப்பாக தேவை ஆனால் இந்தக் கட்டுரையில் சான்றே இல்லாத தொழில் மற்றும் முதன்மைகட்டுரை புதிரைவண்ணார் போன்ற பக்கங்கள் இடம்பெயர்கிறது இதை மூத்த நிர்வாகிகள் சற்று கவனித்து நிக்கவேண்டும், சான்று இல்லாத பல பொய் கட்டுரைகளும் சில பக்கங்களில் தற்போதைய புதிய நிர்வாகிகளால் தொகுக்கப்பட்டது வருத்தமாக உள்ளது,மதம் இனம் தொகுக்கப்படக்கூடாது அதை வேறு வழி இல்லாமல் தொகுக்கப்பட்டு வருகின்றனர் அதை சான்றுடன் நிரூபிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. Navaneethan tiger (பேச்சு) 05:32, 4 திசம்பர் 2020 (UTC)Reply

விக்கிபீடியா நிர்வாகிகளுக்கு

தொகு

ஏன் சான்றே இல்லாத சில தொகுப்பை இதில் இணைத்து உள்ளீர்கள் என்று ஒரு வினா எழுப்பினேன் இன்று வரை பதில் வரவே இல்லை,அதை நீக்கினால் மட்டும் மீண்டும் இணைக்கிறீர்கள் இதற்கு காரணம் என்ன ஜாதி மதம் போன்றவைகளை விக்கிபீடியாயாவில் தொகுப்பது வேதனையாக உள்ளது இதில் தவறான தொகுப்புகளை இணைப்பது மேலும் விக்கிபீடியாயாவின் உண்மை தன்மையை சிலர் தவறான தொகுப்புகளை இணைப்பதாக காட்டும் வண்ணம் உள்ளது மேலும் சில நிர்வாகிகள் உண்மைக்கு மாறாக சில தொகுப்பைகளை சான்றே இல்லாமல் பதிவு செய்துள்ளார்கள் ஆக விக்கிப்பீடியாவின் மூத்த நிர்வாகிகள் இதை சற்று உங்கள் பார்வைக்கு கொண்டு செல்ல இதை பதிவிடுகிறேன், ஆங்கில கட்டுரையின் உண்மை தன்மையை கூறினாலே போதும் ஆனால் கணக்கு சாராதவர் தொகுப்புகளை மாற்றிஅமைகின்றனர் அதை சில புதிய நிர்வாகிகள் கண்டுகொள்வது இல்லை மேலும் சான்றே இல்லாத தொகுப்பை நீக்க வேண்டும் என்று முயற்சி செய்தால் அதில் பதிலே வருவது இல்லை. Navaneethan tiger (பேச்சு) 03:28, 10 திசம்பர் 2020 (UTC)Reply

@AntanO: வணக்கம் அண்ணா, இக்கட்டுரையில் புதிரை வண்ணான் என்ற கட்டுரையின் இணைப்பு, இதில் இடம் பெற்றுள்ளது. அதற்காக தான் இப்பயனர் அதை நீக்க சொல்லி பரிந்துரை செய்திருக்கிறார். புதிரை வண்ணான் சமூகத்தினர் தமிழ்நாடு அரசு சாதிகள் பட்டியலில், பட்டியல் சாதிகள் (SC) பிரிவில் எண்:60-ல் உள்ளவர்கள், மற்றும் வண்ணார் சமூகத்தினர் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகள் (MBC) பிரிவில் எண்:38-ல் உள்ளனர். நான் ஆராய்ந்த வரையில் வண்ணார் சமூகத்தினருக்கும், புதிரை வண்ணான் சமூகத்தினருக்கும் எந்த விதமான சம்மந்தமும் இல்லை, அதனால் இக்கட்டுரையில் உள்ள புதிரை வண்ணான் என்ற இணைப்பை நீக்க பரிந்துரை செய்கிறேன். நன்றி-- கௌதம் 💛 சம்பத் (பேச்சு) 15:10, 10 திசம்பர் 2020 (UTC)Reply

நன்றி நிர்வாகி கௌதம் சம்பத் அவர்களுக்கு பேச்சு Navaneethan tiger (பேச்சு) 07:12, 12 திசம்பர் 2020 (UTC)Reply

@Gowtham Sampath: வணக்கம், கௌதம். தேவையான மாற்றத்தைச் செய்யுங்கள். நன்றி. --AntanO (பேச்சு) 02:16, 13 திசம்பர் 2020 (UTC)Reply
நன்றி அண்ணா --கௌதம் 💛 சம்பத் (பேச்சு) 06:39, 13 திசம்பர் 2020 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வண்ணார்&oldid=3073137" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "வண்ணார்" page.