பேச்சு:வண்ணை காமாட்சி அம்பாள் ஆலயம்

வண்ணை ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் ஆலயம் என்பது அதிகாரபூர்வப் பெயரா. க்ஷி எழுத்து வழக்கொழுந்து விட்டது. பழைய கட்டுரைத் தலைப்பில் இருப்பது போல் (வண்ணார்பண்ணை காமாட்சி அம்பாள் ஆலயம்) காமாட்சி என்று மாற்றலாம் என்று கருதுகிறேன். --Natkeeran (பேச்சு) 20:52, 2 ஆகத்து 2013 (UTC)Reply

விக்கிப்பீடியாவில் பொதுவாக ஆலயங்களின் தலைப்புகளில் ஸ்ரீ, திரு, அருள்மிகு, போன்ற சொற்கள் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை. கட்டுரையின் உள்ளே சேர்க்கலாம். இக்கட்டுரையை வண்ணார்பண்ணை காமாட்சி அம்பாள் ஆலயம் என்ற தலைப்புக்கு (அக்கட்டுரையின்) வரலாற்றுடன் நகர்த்த வேண்டும். அத்துடன் இரு பெயர்கள் ஒரே தலைப்பில் (அடைப்புக்குறிகளுக்குள்) வருவதில்லை. பாபுஜி புரிந்து கொள்வார் என நினைக்கிறேன்.--Kanags \உரையாடுக 22:07, 2 ஆகத்து 2013 (UTC)Reply

வண்ணை ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் ஆலயம்

தொகு

அன்புடன் நற்கீரன் மற்றும் கனகரத்தினம் சிறீதரன் அவர்களுக்கு வணக்கம்,

உங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி, இந்த பக்கத்திலே இருக்கவேண்டிய சில விடயங்கள் பற்றி உங்களிடம் கலந்துரையாட விரும்புகிறேன்.

எமது இடத்தில் அமைந்திருக்கும் இந்த ஆலயத்தின் சரியான பெயர் - “வண்ணை ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் ஆலயம்” , இந்தப்பெயர் ஆலயத்தின் அதிகாரபூர்வ பெயர். இதனை எமது ஆலயத்தின் அதிகாரபூர்வ இணையத்தளத்திலும் , முகநூலிலும் பார்க்க முடியும். “நாச்சிமார் கோவில்” என்பது எல்லோராலும் அறியப்படுகின்ற பெயர். யாரவது இணையத்தளத்தில் தேடும்பொழுது வண்ணை ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் ஆலயம் அல்லது நாச்சிமார் கோவில் என்ற பெயரில்தான் தேடுவார்கள். அதனால் தயவுசெய்து இந்த இரண்டு பெயரில் எதாவது ஒரு பெயரிலேயே ஆலயத்தின் பிரதான தலைப்பு அமைய வேண்டும். அப்படி இருந்தால்தான் தேடுபவர்களுக்கு சரியான தகவலை கொடுக்க முடியும் இல்லாவிட்டால் நாமே ஒரு தவறான தகவலை கொடுப்பதாக அமைந்துவிடும்.

அதனால் தயவு செய்து எமது ஆலயத்தின் பிரதான தலையங்கத்தை "வண்ணை ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் ஆலயம்" என்ற பெயரில் மாற்றியமைக்குமாறு அன்புடன் கேட்டுகொள்கிறேன்.

சிறீதரன் அவர்களிடமும் ஒரு விண்ணப்பம். இலங்கையில் பல ஆலயங்களின் பெயர் ஸ்ரீ என்ற பெயரில்தான் இருக்கிறது. நாம் அதனை குறிப்பிடாவிட்டால், அந்த ஆலயம் பற்றி தேடுபவர்கள் ஒரு தவறான பெயரையே விக்கிபீடியா இணையம் மூலம் பெறுவார்கள். அதனால் ஆலயங்கலின் வரலாறு என்று வரும்பொழுது அதன் சரியான பெயரை குறிப்பிடுவதே மிகவும் நல்லது. 'திரு' 'அருள்' 'அருள்மிகு' என்பது குறிப்பிடாவிட்டாலும் ' ஸ்ரீ ' என்பது இல்லாமல் சில ஆலயங்களின் பெயரை குறிப்பிட முடியாது. உதாரணம் - வண்ணை ஸ்ரீ வெங்கடேச வரதராஜப் பெருமாள் தேவஸ்தானம் - இதிலே நீங்கள் ஸ்ரீ நீக்கினால் நீங்கள் மக்களுக்கு கொடுக்கும் தகவல் தவறாக அமைந்துவிடும். இதனை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

இணையத்தளம் - http://www.vannaikamakshi.com/

முகநூல் - https://www.facebook.com/pages/%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/211567992204178

          https://www.facebook.com/NachchimarKovil

அத்துடன் இதற்கு முன்னதாக உருவாக்கப்பட்ட "வண்ணார்பண்ணை காமாட்சி அம்பாள் ஆலயம்" என்ற பெயர் கண்டிப்பாக மாற்றப்படவேண்டும், இல்லையென்றால் அது நாம் கொடுக்கும் ஒரு தவறான தகவலாக அமைந்து விடும். அத்துடன் எமக்கு இன்னும் ஒரு கட்டுரையும் உருவாக்கவேண்டிய தேவை இருக்கிறது.

தயவு செய்து "வண்ணார்பண்ணை காமாட்சி அம்பாள் ஆலயம்" என்ற ஒரு பிரதான தலையங்கத்தை "வண்ணை காமாட்சி சனசமூக நிலையம்" என்ற பிரதான தலையங்கத்தில் மாற்றி அந்த கட்டுரையை தொடர்ந்து எழுதுவதற்குரிய உதவியினை செய்யுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறேன்.

உங்களுக்கு இதனை உறுதிப்படுத்த மேலதில தகவல் தேவையென்றால் இந்த இணையத்தளத்திலிருக்கும் ஆலயத்தின் தொலைபேசியிலே இல்லையென்றால் என்னுடைய இந்த மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம். என்னுடைய மின்னஞ்சல் - Baabuji@gmail.com

நன்றி, தங்கள் உண்மையுள்ள நா. தர்மேந்திரதாஸ் ( பாபுஜி )

தங்கள் விளக்கத்திற்கு நன்றி. என்னதான் அதிகாரப்பூர்வப் பெயராக இருந்தாலும், கட்டுரைத் தலைப்பில் அளவுக்கதிகமாகக் கிரந்தம் இருப்பது தமிழ் விக்கிப்பீடியாவுக்கு அழகானதல்ல. மேலும், கூகுளில் வண்ணை ஸ்ரீ காமாக்ஷி அம்மன் ஆலயம் (இதனை தட்டச்சிடவே மிகச் சிரமமாக உள்ளது, க்ஷி எனக்கு எழுத வரவே வராது, வெட்டி ஒட்டிருக்கிறேன்.) எனத் தேடுபவர்களுக்கு கட்டாயம் இக்கட்டுரை தேடு பொறியில் வந்து விடும். அல்லது விக்கிப்பீடியாவில் தேடினாலும் கிடைத்து விடும். வண்ணை காமாட்சி அம்மன் ஆலயம் என அழகு தமிழில் தலைப்பிட வேண்டும் என வேண்டுகிறேன். கட்டுரையின் ஆரம்ப வரிகளில் அதிகாரபூர்வப் பெயரைக் கொடுக்கலாம். இதனால் தேடு பொறிகளில் இலகுவாக வந்து விடும். இவ்வாறே ஏனைய கோயில்களின் கட்டுரைகளும் உள்ளன. உரையாடல் பக்கங்களில் உங்கள் கையொப்பத்தை நேர முத்திரையுடன் பதிவதற்கு ~~~~ எனத் தட்டச்சிடுங்கள்.--Kanags \உரையாடுக 08:42, 5 ஆகத்து 2013 (UTC)Reply
ஆம், வண்ணார்பண்ணை காமாட்சி அம்மன் மிகவும் பொருத்தமானது. மேலும் நானும் இக்கோவிலுக்கு அருகில் இருப்பதால் கூறுகிறேன். இக்கோவிலின் உண்மையானபெயரை இப்போதே அறிகிறேன். இது அனைவராலும் நாச்சிமார் கோவில் எனவே வழங்கப்படுகிறது.
//தயவு செய்து "வண்ணார்பண்ணை காமாட்சி அம்பாள் ஆலயம்" என்ற ஒரு பிரதான தலையங்கத்தை "வண்ணை காமாட்சி சனசமூக நிலையம்" என்ற பிரதான தலையங்கத்தில் மாற்றி அந்த கட்டுரையை தொடர்ந்து எழுதுவதற்குரிய உதவியினை செய்யுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறேன்.//
நீங்கள் புதிதாகவே உருவாக்கலாம். இங்கு சொடுக்கி உருவாக்குங்கள். வண்ணை காமாட்சி சனசமூக நிலையம் , வண்ணை என்பது இந்த ஊரைக்குறிக்குமானால் வண்ணார்பண்ணை காமாட்சி சனசமூக நிலையம் என உருவாக்கலாம், நன்றி -- நி ♣ ஆதவன் ♦   (என்னோடு உரையாட படத்தை சொடுக்கவும்) 01:40, 6 ஆகத்து 2013 (UTC)Reply
  • இந்த 'ஆதாரபூர்வமானது', 'இது 'வணிகப்பெயர்', 'இது தனியொருவர் பெயர்', 'இது தனி நிறுவனப்பெயர்' என்று பற்பல காரணங்கள் அடிக்கடி கூறப்படுகின்றன. இதன் அடிப்படைகளை நாம் புரிந்துகொள்ள வேண்டும். எந்த மொழியில் வழங்குகின்றோமோ அந்த மொழியில் இயல்பின் படித்தான் எந்தப்பெயரானாலும் வழங்கும். ஒருவர் தன் கையெழுத்தை எப்படி வேண்டுமானாலும் எழுதலாம், அது அவருடைய தனியுரிமை, அவரின் தனி அடையாளம். ஆனால் ஒரு மொழியில் ஒரு பெயர் வழங்க சில விதிமுறைகள் உள்ளன அதன்படித்தான் வழங்கவேண்டும். என் பெயரை ஆங்கிலத்தில் எழுதினால் Selvakumar என்று S என்னும் எழுத்தைத் தலைப்பு எழுத்தில்தான் எழுத வேண்டும். Krishnan என்னும் பெயரில் இடையே வரும் ணகரம் n எனத்தான் எழுத முடியும். Gandhi என்பதை ஆங்கிலேயர் கே'அண்டி என்பது போலவும் Buddha என்பதை பூ'டா என்பது போலவும்தான் ஒலிப்பார்கள். அவர்கள்மொழியில் ணகரம், மெல்லொலி, வல்லொலி தகரம் ஆகியவை இல்லை (இப்படியான சூழல்களில் ஒலிக்கும்படியான தன்மையுடன் அவர்களிடம் இல்லை). தமிழில் கூட்டெழுத்துகள் கிடையவே கிடையாது (தமிழில் எழுத்துகள் வரையறை செய்யப்பட்டவை. உலகில் எந்த மொழியிலும் இப்படி மாத்திரையோடு எழுத்துகள் வரையறை செய்யப்படவில்லை. தமிழில் எழுத்துகள் உயிர் 12, மெய் 18, ஆய்தம் ஒன்று வரிவடிவம் இல்லா குற்றியலுகரம் குற்றியலிகரம் ஆக 33, இவற்றோடு உயிர்மெய் எழுத்துகளையும் கூறலாம். குற்றியலுகரம், குற்றியலிகரம் நீங்கலாகத் தமிழில் 247 எழுத்துகள்தாம். மெய்யெழுத்துகளின் கூட்டெழுத்துகள் கிடையாது). சிரீ என்றோ -ட்சி என்றோ தான் எழுத இயலும். ஶ்ரீ க்ஷி ஆகியன உள்ளதே என்றால், ஆம் அதுபோல் சிலர் F என்னும் எழுத்தையும் x என்னும் எழுத்தையும் கூடக் கலந்து எழுதுகின்றார்கள். அவற்றை ஏற்றுத்தான் ஆகவேண்டும் என்று எங்கும் விதி கிடையாது. தமிழ்மொழியில் எழுதும் பொழுது தமிழ் இலக்கணத்துடன் எழுத வேண்டும். தேடுபொறிகளில் சிக்க வேறு வழக்கங்களையும் குறிக்கலாம், மறுப்பில்லை. தனியார் நிறுவனம் என்பதால் தமிழ் மொழியைக் கெடுக்கவோ, மீறவோ, சிதைக்கவோ உரிமை ஏதும் கிடையாது. ஒரு நிறுவனத்துக்கோ தனி மாந்தருக்கோ அவ்வளவு உரிமை இருப்பதாகக் கொண்டால், பல்லாயிரம் ஆண்டுகள் நன்முறையில் வாழ்ந்து வரும் தமிழ் மொழிக்கு எவ்வளவு உரிமை இருக்க வேண்டும் என்று எண்ணிப்பாருங்கள். அருள்மிகு என்றுதான் அண்மைக்காலம் வரை எழுதி வந்தனர். சிரீ என்னும் ஒலிப்பு முன்னொட்டாக வேண்டும் எனிலும், சிரீ என்று எழுதுங்கள். ஆழ்வார்கள் முதல் பல்லோரும் சிரீதரா, சீதரன், சீனிவாசன், சீராமன் என்று எழுதி வந்துள்ளனர். ஆகவே சிரீ (அல்லது இலங்கை வழக்கமாக சிறீ) என்று எழுதலாம் (தேவை எனில்). எனவே வண்ணை காமாட்சி அம்மன் ஆலயம் எனவோ சிரீ வண்ணை காமாட்சி அம்மன் ஆலயம் என்றோ பெயரை முறையாக எழுதுமாறு வேண்டுகின்றேன். நீங்கள் "அதிகாரபூர்வமானது" எனில் தமிழின் "அதிகாரபூர்வமான" முறையையும் கருத்தில் கொள்ளுங்கள். --செல்வா (பேச்சு) 15:27, 6 ஆகத்து 2013 (UTC)Reply
"வண்ணை ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் ஆலயம்" என்பதற்குப் பதிலாக "வண்ணை காமாட்சி அம்பாள் ஆலயம்" என்று எழுதுவதில் தவறேதும் இல்லை என்பதே என்னுடைய கருத்து. முன்னர் நல்ல தமிழில் "நாச்சிமார் கோயில்", "அண்ணமார் கோயில்", "ஐயனார் கோயில்" என்று இருந்த பெயர்களை எல்லாம் உயர்வு என்று கருதிக்கொண்டு சமசுக்கிருதப் பெயர்களாக மாற்றி வரும் போக்குக் காணப்படுகிறது. அதையும் எவ்வளவுக்குக் கூடிய அளவு சமசுக்கிருதமாக எழுத முடியுமோ அப்படி எழுதினால் தான் மதிப்பு என்று நினைக்கும் ஒரு நிலை இருப்பதைக் காணலாம். "ஸ்ரீ", "க்ஷி" போன்ற எழுத்துக்கள் வலிந்து திணிக்கப்படுகின்றன. "கோயில்" என்று பரவலாக அழைக்கப்பட்டாலும் அதை "தேவஸ்தானம்" என்று பெயர்ப் பலகையில் போடுகிறார்கள். இம்மாதிரியான போக்குகளை தமிழ் விக்கிப்பீடியா வலுப்படுத்தக் கூடாது என்றே நான் நினைக்கிறேன். நானும் இதே ஊரிலேயே பிறந்து வளர்ந்தேன். ஆனால், ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் ஆலயம் என்று அக்கோயிலை பொது மக்கள் அழைத்து நான் கேள்விப்பட்டதில்லை. "அதிகாரபூர்வப்" பெயரைக் கொண்டு தேடுபவர்களைவிடப் பொதுவழக்கில் இருக்கும் பெயரைப் பயன்படுத்தியே பெரும்பாலானோர் தேடுவார்கள். "ஸ்ரீ", "க்ஷி" போன்ற எழுத்துக்களை தட்டச்சிடவே பலருக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பு உள்ளது. "அதிகாரபூர்வப்" பெயரைப் பயன்படுத்தித் தேடுபவர்களுக்குக் கட்டுரை அகப்படாமல் போகும் நிலையைத் தவிர்ப்பதற்கு அந்தப் பெயரில் வழிமாற்றுப் பக்கம் ஒன்றை உருவாக்கலாம். ---மயூரநாதன் (பேச்சு) 16:51, 7 ஆகத்து 2013 (UTC)Reply
ஆம் நானும் அன்று பார்க்கும் போது வண்ணை ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் தேவஸ்தானம் என எழுதியிருந்தார்கள். அக்கோவிலை அனைவரும் நாச்சிமார் கோவில் என்றே அழைக்கிறார்கள். வண்ணை ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் இப்பெயரை பார்த்து வேறு ஆலயம் என நினைத்தேன். உள்ளே பார்த்தபோது அமைவிடத்தைக்கொண்டே நாச்சிமார் ஆலயம் என அறிந்துகொண்டேன். நாச்சிமார் கோவில் என வழங்கலாம். -- நி ♣ ஆதவன் ♦   (என்னோடு உரையாட படத்தை சொடுக்கவும்) 04:19, 8 ஆகத்து 2013 (UTC)Reply
Return to "வண்ணை காமாட்சி அம்பாள் ஆலயம்" page.