பேச்சு:விசுவாமித்திரர்

விசுவாமித்திரர் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
விசுவாமித்திரர் என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
விசுவாமித்திரர் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
விசுவாமித்திரர் என்னும் கட்டுரை வைணவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வைணவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

தற்காலிக குறிப்பு

தொகு
  • அழிக்க வேண்டாம். (போட்டியில் புகுத்திய புதிய வரிகள். 200 சொற்கள் உள்ளன.) 05:10, 23 அக்டோபர் 2019 வரை

பின்னர், சகுந்தலை அரசன் துஷ்யந்தனை மணமுடித்து, அவர்களுக்கு பரதன் மகனாக பிறந்தான். ஆனாலும், தன் தவம் மேனகையால் கலைக்கப்பட்டதற்காக மேனகையை விசுவாமித்திரர் சபித்தார்.மேனகையை சபித்த பின்னர், ஆயிரம் ஆண்டுகளுக்கு கடுந்தவம் செய்யும் பொருட்டு இமாலயத்திற்கு சென்று விடுகிறார் கௌசிகர். உண்ணாமல், மூச்சு விடுவதையும் கூட அறவே குறைத்துவிடுகிறார். பல ஆண்டுகளுக்கு பின் விரதத்தை முடித்து உண்ண முடிவு செய்யும் கௌசிகரை இந்திரன் மீண்டும் சோதிக்கிறார். ஏழை அந்தணராக வரும் இந்திரன், கௌசிகரிடம் யாசகம் கேட்க, அவரும் உணவை யாசகமாக கொடுத்துவிட்டு தன் தவத்தை தொடர்ந்தார். அந்த ஆயிரம் ஆண்டுகள் தவவலிமையை கண்ட தேவலோக தலைவர் பிரம்மா, கௌசிகருக்கு "பிரம்மரிஷி" எனும் பட்டத்தை வழங்கி, விசுவாமித்திரர் எனும் பெயரும் இடுகிறார். திரிசங்கு எனும் ஓர் அரசன், மஹாகுரு வசிட்டரிடம் தன்னை உடலுடன் சொர்க்கத்திற்கு அனுப்புமாறு கோரிக்கை விடுகிறார். அவ்வாறு செய்ய இயலாது என்று வசிட்டர் மறுத்துவிடுகிறார். அதனை தொடர்ந்து, வசிட்டரின் ஆயிரம் புதல்வர்களிடமும் அதே கோரிக்கையை வைக்கிறார் திரிசங்கு. அவர்களும் மறுத்து, சிரிசங்குவை வெட்டியானாக போக சபித்துவிடுகிறார்கள். அதனால், சாம்பல் பூசப்பட்ட உடலுடன், இரும்பு அணிகலன்களும், கருப்பு ஆடையும் அணிந்த மனிதனாக உரு மாறுகிறார் திரிசங்கு. தன் உரு மாறியதால் அடையாளம் தெரியாமல் போக, ராஜாங்கத்திலிருந்து வெளியேற்றப்படுகிறார் திரிசங்கு.வெளியேறும் பொழுது, விசுவாமித்திரரை சந்திக்க நேரிடுகிறது. அவர், திரிசங்குவிற்கு உதவ ஒப்புக்கொள்கிறார் விசுவாமித்திரரின் தவபலம் உச்சத்தில் இருக்கும் பொழுது, திரிசங்குவை உடலுடன் சொர்க்கத்தில் ஏற்றுக்கொள்ள வைக்கும்படி யாகம் ஒன்றை வளர்த்தார். மாறாக, எந்த தேவரும் செவிசாய்க்கவில்லை. மேலும் கோபமுற்ற அவர், தனது மொத்த தவப்பலத்தையும் பயன்படுத்தி, திரிசங்குவை சொர்க்கத்திற்கு அனுப்பி வைத்தார். உள்ளே நுழையும் பொழுது, சிரிசங்குவை தடுத்து அனுமதி மறுத்தார் இந்திரன். அதனால், திரிசங்குவிற்காக என்றே புது உலகம் ஒன்றை படைத்தார். அப்போது, பிருகஸ்பதி தலையிட்டு, விசுவாமித்திரரை மேலும் செய்யவேண்டாம் என்று உத்தரவு இட்டார். இருப்பினும் சொர்கம் சென்ற திரிசங்கு, வானிலே தலைகீழாக மாட்டிக்கொண்டு நட்சத்திரமாக மாறினார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:விசுவாமித்திரர்&oldid=3790630" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "விசுவாமித்திரர்" page.