பேச்சு:வித்யாரம்பம் (நிறுவனம்)
பாலா, ஒரே தலைப்பில் நிறைய கட்டுரைகள் வரும் வாய்ப்பு இருந்தால் மட்டும், முதன்மை கட்டுரை தவிர்த்த மற்றவற்றில் அடைப்புக் குறி விளக்கம் தர வேண்டி இருக்கும். அவ்வாறில்லாத கட்டுரைகளுக்கு அப்படித் தரத் தேவை இல்லை. எடுத்துக்காட்டுக்கு, சிங்கப்பூர் என்ற தலைப்பு போதும். சிங்கப்பூர் (நாடு) என்று குறிப்பிடத் தேவை இல்லை. இதுவே அதே தலைப்பில் நூல் இருந்தால் சிங்கப்பூர் (நூல்) என்று குறிப்பிட வேண்டும்.--இரவி (பேச்சு) 14:38, 15 மே 2014 (UTC)
- வித்யா என்ற சொல் கல்விக்கு இணையான சொல்லென்று நினைக்கிறேன். இந்த தலைப்பை பார்த்தவுடன் இது ஒரு ராகமாகவோ, பண்டைய நூலாகவோ அல்லது இந்திய அரசின் திட்டங்களில் ஒன்றாகவோ இருக்கலாம் என எண்ணத் தோன்றியது! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:06, 15 மே 2014 (UTC)
- விஜயதசமியன்று கேரளாவில் குழந்தைகளுக்கு முதன்முதலாக இசை அல்லது நாட்டியம் போன்ற கலைகளைச் சொல்லிக் கொடுக்கின்றனர் அதை வித்யாரம்பம் என்ற பெயரில் அழைப்பர். அதனால்தான் வேறுபடுத்திக் காட்ட அவ்வாறு செய்தேன். குழப்பம் வராது எனில் தலைப்பை நகர்த்திவிடலாம் :) --ஆர்.பாலா (பேச்சு) 15:38, 15 மே 2014 (UTC)
- இலங்கையிலும் கேரளாவைப் போல வித்தியாரம்பம் என்பது ஒரு பொதுவாக அனைவரும் பயன்படுத்தும் சொல். எனவே நிறுவனம் அடைப்புக்குறிக்குள் இருப்பதே நல்லது.--Kanags \உரையாடுக 21:02, 15 மே 2014 (UTC)
- விஜயதசமியன்று கேரளாவில் குழந்தைகளுக்கு முதன்முதலாக இசை அல்லது நாட்டியம் போன்ற கலைகளைச் சொல்லிக் கொடுக்கின்றனர் அதை வித்யாரம்பம் என்ற பெயரில் அழைப்பர். அதனால்தான் வேறுபடுத்திக் காட்ட அவ்வாறு செய்தேன். குழப்பம் வராது எனில் தலைப்பை நகர்த்திவிடலாம் :) --ஆர்.பாலா (பேச்சு) 15:38, 15 மே 2014 (UTC)
- ஆம், விருப்பம்--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 04:27, 16 மே 2014 (UTC)
- ஏற்கிறேன். வட இந்தியாவிலும் இந்த சொல் அதிக புழக்கத்தில் இருக்கக் கூடும்! எனவே, நிறுவனம் என்று அடைப்புக்குறிக்குள் இடுவது தேவை -தமிழ்க்குரிசில் (பேச்சு) 04:05, 16 மே 2014 (UTC)
வித்யாரம்பம் குறித்த அறியாமைக்கு வருந்துகிறேன். நிறுவனம் என்று அடைப்புக்குறிக்குள் இருக்கட்டும். ஆனால், மற்ற பல கட்டுரைகளில் தேவையில்லாமல் அடைப்புக்குறி விளக்கம் வரும் இடங்களைக் கவனித்துத் திருத்தலாம். இது அட்சரப்யாசம் என்றும் சிலரால் தமிழகத்தில் அழைக்கப்படுகிறது. கல்வியைத் தொடங்குதல் என்பது பொருள். நெல் / அரிசியல் அ எழுதிப் பழகுவதும் இந்தக் கணக்கில் வரும் என்று நினைக்கிறேன். --இரவி (பேச்சு) 06:44, 16 மே 2014 (UTC)