பேச்சு:விஷ்ணு சஹஸ்ரநாமம்
பெயர்
தொகுவிஷ்ணு சஹஸ்ரநாமம் என்ற பெயர் எனக்கு முன்னால் இப்பக்கத்தைத் தொகுத்தவர் வைத்த தலைப்பு. இக்கட்டுரையை விரிவாக்குவதில் முனைந்த நான் தலைப்பைத் திருத்த முயற்சிக்கவில்லை. அது சமஸ்கிருத நூலின் பெயராக இருப்பதால் அதன் தலைப்பு 'விஷ்ணு ஸஹஸ்ரநாமம்' என்று இருப்பதுதான் சரி. தயவுசெய்து திருத்திக்கொடுக்கவும். --Profvk 15:00, 24 சூலை 2011 (UTC)
- சஹஸ்ரநாமம் என்பதில் உள்ள ச என்பதும் ஸகஸ்ரநாமம் என்பதில் உள்ள ஸ என்பதும் ஒரே ஒலிப்பைத் தானே தருகிறது.--Kanags \உரையாடுக 02:36, 27 சூலை 2011 (UTC)
- நன்றி. அப்படியென்றால் சஹச்ரநாமம் என்று எழுதமுடியுமா? இது இலக்கணப்பிழையாகாதா?--Profvk 03:01, 27 சூலை 2011 (UTC)
அப்படியல்ல ஐயா, இங்கு கிரந்தம் தவிர்ப்பது அல்ல பிரச்சினை. ஒலிப்புக்கு ஏற்றவாறு மாற்றம் இருந்தால் ஏற்றுக்கொள்ளக்கூடியதே. சில இடங்களில் மட்டும் இந்த ச, ஸ இரண்டும் ஒரே ஒலிப்பைத் தருகின்றன. அந்த ஒரு சில இடம் என்பது இக்கட்டுரைத் தலைப்புக்குப் பொருந்துகிறது. சொற்களுக்கு ஏற்ப இது மாறுபடும். ஏன் தேவையில்லாமல் இங்கு ஸ வை எழுத வேண்டும்? மேலும், ஸ், ச் இரண்டும் ஒரே ஒலிப்பைத் தருவதில்லை. முழுமையாகக் கிரந்தம் தவிர்ப்பவர்கள் சகச்சுரநாமம் என எழுதலாம். ஆனால் அந்தளவுக்கு விக்கி போக வேண்டிய அவசியம் இருப்பதாகப் படவில்லை.--Kanags \உரையாடுக 03:58, 27 சூலை 2011 (UTC)