பேச்சு:வீரபத்திரர்
தஞ்சாவூர் வீரபத்திரர் கோயில்
தொகுவண்ணாந்துரை அகோர வீரபத்திரசாமி கோயில், தஞ்சாவூர் என்ற தலைப்பில் கோயில் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. இதுவரை களப்பணியின்போது தஞ்சாவூரில் கீழவாசலில் ஒரே ஒரு இடத்தில்தான் வீரபத்திரசாமி கோயில் எனப்படுகின்ற வீரபத்திரர் கோயிலைக் காண முடிந்தது. உள்ளூரில் பல அறிஞர்களிடம் உசாவியதில் தஞ்சாவூரில் ஒரே ஒரு வீரபத்திரர் கோயில்தான் உள்ளது என்று தெரிவித்தனர். அதன் அடிப்படையில் வண்ணாந்துரை அகோர வீரபத்திரசாமி கோயில், தஞ்சாவூர் என்ற சொற்றொடர் தற்போது நீக்கப்பட்டது. களப்பணியின்போதோ பிற வகையிலோ வண்ணாந்துரை அகோர வீரபத்திரசாமி கோயில் என்ற தலைப்பில் ஒரு கோயில் தென்பட்டால் புதிதாக அது சேர்க்கப்படும். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 04:53, 18 செப்டம்பர் 2016 (UTC)