பேச்சு:வெதுப்பி
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by Natkeeran
பொது வழக்கில் பாணும் ரொட்டியும் ஒன்றாக கருதப்படுவதில்லை. இரண்டும் இரு வேறுபட்ட உணவுப் பொருட்கள். ஒன்று வீட்டில் இலகுவாக செய்யப்படுவது. மற்றது வெதுப்கத்தில் இருந்து பெறப்படுவது. --Natkeeran 05:05, 28 டிசம்பர் 2008 (UTC)
வட இந்தியாவில் ரொட்டி சப்பாத்தியைக் குறிக்கிறது. தமிழக தமிழ் வழக்கில் ரொட்டி Breadஐக் குறிக்கிறது. சில இடங்களில் வெதுப்பகத்தை ரொட்டிக்கடை (உதாரணம், காரைக்காலில் பிரபலமான வெதுப்பகம்) அல்லது ரொட்டியகம் என குறிப்பார்கள். -ராஜ் (தொழில்நுட்பம்) - 8 - 4 - 2010
- தமிழகத்தில் பன்னும் ரொட்டியும் ஒன்றல்ல. ரொட்டி என்பது பிஸ்கட்/ரஸ்க்/சப்பாத்தி ஆகியனவற்றைக் குறிக்கிறது. பஞ்சாக இருக்கும் பிரெட்டை ரொட்டி என சொல்வதில்லை. மேலும், அதை வெதுப்பி என்று சொல்வதும் இல்லை. இலங்கை வழக்கில் இச்சொல் பரவலாக இருந்தால் ஏற்க வாய்ப்புண்டு. இல்லையெனில்,
- இதை பிரெட் என இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
- இது ஒரு பொருளின் பெயர் என்பதால், பிரெட் என்பதில் தவறில்லை.
- மேலும், வெதுப்பி என்ற சொல் பரவலான பயன்பாட்டில் இல்லை.
-தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:00, 20 ஆகத்து 2013 (UTC)
- வெதுப்பகத்தில் செய்யப்படுவதால் வெதுப்பி என அழைத்திருக்கலாம். இங்கு வெதுப்பகம். இங்கு வெதுப்பி எனப்படுவது பாண் ஆகும். இலங்கையில் பாண் வேறு ரொட்டி வேறு. இதில் பாண் என உள்ளது சரி. ப்ரெட் என்பது பாண் என இங்கு அழைக்கின்றனர். பாண் என ஆக்கலாம். கருத்து .... -- நி ♣ ஆதவன் ♦ (என்னோடு உரையாட படத்தை சொடுக்கவும்) 15:42, 20 ஆகத்து 2013 (UTC)
வெதுப்பகம், வெதுப்பி ஆகிய சொற்கள் ஈழத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் ஓரளவு பயன்பாட்டில் உள்ளது. இங்குள்ள பல பாட நூல்களில் இவை இடம்பெற்று இருக்கின்றன. --Natkeeran (பேச்சு) 17:30, 20 ஆகத்து 2013 (UTC)