பேச்சு:வேலணைத் தீவு
இலங்கை வரைபடத்தில் லைடன் தீவு எங்கு அமைந்துள்ளது என்பதை குறியிட்டுக்காட்டும் விதமாக ஒரு படத்தை சேர்க்கலாம்--ரவி (பேச்சு) 09:52, 18 ஆகஸ்ட் 2005 (UTC)
லைடன் தீவு என்பது வேலணைக்குப் ஒல்லாந்தர் இட்ட பெயர். இன்று இப்பெயர் பயன்பாட்டில் இல்லை. வேலணை என்றே குறிப்பிடப்படுகிறது. ஏன் கட்டுரையை வேலணை அல்லது வேலணைத் தீவு என்ற பெயரில் எழுதக்கூடாது? Mayooranathan 12:46, 18 ஆகஸ்ட் 2005 (UTC)
- தற்போது பரவலாகப் பயன்பாட்டில் வேலணை உள்ளதென்றால் கட்டுரையை அத்தலைப்பிற்கு நகர்த்துங்கள். இந்த பெயர் வரலாற்றை கட்டுரையில் குறிப்பிடுங்கள். -- Sundar \பேச்சு 12:57, 18 ஆகஸ்ட் 2005 (UTC)
- இது பற்றி இதை எழுதியவரின் கருத்தையும் அறிவோம் ஏனெனில் வேலணை பற்றி இன்னொரு கட்டுரை உண்டு. அதிலே வேலணை லைடன் தீவிலுள்ள ஒரு ஊர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. லைடன் தீவுக்கு வேறு தமிழ்ப் பெயர் உண்டா அல்லது வேலணைத் தீவு என்று அழைக்கப்படுகிறதா என்பதை உறுதிப் படுத்திக்கொள்ள வேண்டும். அத்துடன் காவலூர் என்று குறிப்பிடப்பட்டுள்ள இடம் உத்தியோக பூர்வமாக ஊர்காவற்றுறை என்றே குறிப்பிடப்படவேண்டும். Mayooranathan 13:15, 18 ஆகஸ்ட் 2005 (UTC)
- லைடன் தீவு வேலணைத் தீவு என்றும் அழைக்கப்படும். ஆனால், வேலனை என்பது குறிப்பாக லைடன் தீவில் உள்ள ஒரு கிராமத்தையே குறிக்கும். எனவே தற்போது லைடன் தீவு என்பதே பரவலாக உபயோகத்திற்க்கு வருகின்றது. இப் பரவலான உபயோகத்தை "சப்த தீவு" என்ற புத்தகத்தில் காணலாம். எனினும் 'வேலனைத் தீவு என்றும் லைடன் தீவை' அழைப்பர் என்ற குறிப்பையும், ஒரு "திசை திருப்பு" சுட்டியையும் இணைத்துவிடுதல் நன்று.
- காவலூர் ஊர்காவல்துறை என்பது சரிதான். காவல் + ஊர் = ஊர் + காவல் + துறை :-)
- --Natkeeran 14:17, 18 ஆகஸ்ட் 2005 (UTC)
மயூரநாதன் மாற்றங்கள் நன்று. சில கேள்விகள்:
தொகுமயூரநாதன், ஏழு தீவுகளில் மண்டைதீவு உள்ளடக்கப்படவில்லை என்பதை கவனித்தீர்களா? மண்டைதீவை லைடன் தீவுடன் இணைத்து "சப்த தீவு" புத்தகத்தில் விபரிக்கப்பட்டதாக ஞாபகம்.
யாழ் மாவட்டத்தின் தென் மேற்கில் இவ் இடங்கள் அமைந்துள்ளது என்பது நன்றாக கவனிக்கப்பட்ட மாற்றம்.
"சப்த தீவு" என்ற புத்தகத்தை தவிர இத்தீவுகள் பற்றி தகவல்கள் குறைவு. எனினும், இக் கிராமங்களில் இருந்து வந்த மக்களினால் எழுதப்பட்ட சில கட்டுரைகள் "பிறந்த மண்ணில் பெற்ற சுகந்தம்" என்ற நூலில் உண்டு. (இக் கட்டுரைகளிலும் லைடன் தீவு என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இலங்கை அரசின் அதிகார பூர்வ பெயர் வேலணைத்தீவு ஆகும்.) மேலும் கிராமப் பெயர் பற்றிய தகவல்கள் "இடப்பெயர் ஆய்வு" என்ற நூலில் உண்டு. கனடாவில் பல ஊர் மக்கள் ஒன்றியங்கள் உண்டு. லைடன் தீவின் பல கிராமங்களுக்கும் அப்படி உண்டு. மேலும் தகவல்களை, படங்களை நேரடியா பெற்று இணைக்க முடியுமா என்று முயன்று பார்க்கின்றேன். உங்களுக்கு தெரிந்த, அல்ல கிடைக்கும் தகவல்களை நிச்சியம் இணையுங்கள். விக்கிபீடியா பரந்தும் வளர வேண்டும், ஆழ்ந்தும் வளர வேண்டும் என்பதுவே அனைவரின் விருப்பம். எனவேதான் கிராமங்களை பற்றிய தகவல்களை பகிரலாம் என்று நினைத்தேன்.
--Natkeeran 14:20, 19 ஆகஸ்ட் 2005 (UTC)
- ஏழு தீவுகளில் நெடுந்தீவு பற்றிய விபரமான நூலொன்று சென்ற ஆண்டு நான் யாழ்ப்பாணம் சென்றபோது எனக்குக் கிடைத்தது. இதுவும் சு.சிவநாயகமூர்த்தி என்பவர் எழுதி கனடாவில் 2003ல் வெளியிடப்பட்ட ஒரு நூல்தான். இதன் தலைப்பு நெடுந்தீவு மக்களும் வரலாறும் என்பதாகும். மற்றும் போத்துக்கீசர், ஒல்லாந்தர் மற்றும் பிரித்தானியர் கால நூல்கள் சிலவும் என்னிடம் உள்ளன. இவற்றிலும் பல தகவல்கள் உண்டு. எடுத்துக்காட்டாக ஊர்காவற்றுறையின் முக்கியத்துவம் பற்றிய தகவல்கள் உள்ளன. இது தவிர 1918ல் க. வேலுப்பிள்ளை என்பவர் எழுதி வெளியிட்ட "யாழ்ப்பாண வைபவ கௌமுதி" என்ற நூலில் சில தீவுகளின் இடப்பெயர்கள் பற்றிய கருத்துக்கள் உள்ளன. இக்கருத்துக்கள் நீங்கள் குறிப்பிட்ட இடப்பெயர் ஆய்வு நூலுக்கு எதிர்மறையானவை. எல்லாவற்றையும் வாசித்து எழுத நேரம் வேண்டும் இதுதான் பிரச்சினை. Mayooranathan 20:02, 19 ஆகஸ்ட் 2005 (UTC)
- தகவலுக்கு நன்றி. அப் புத்தகத்தை பெற முடியுமா என்று முயல்கின்றேன். மண்டைதீவு, எட்டாவது தீவாக அல்லவா அமையும்? இயலுமானால், இதை தெளிவுபடுத்துங்கள். --Natkeeran 20:42, 19 ஆகஸ்ட் 2005 (UTC)
- இது பற்றித் தற்போதைக்கு எதுவும் சொல்லத் தெரியவில்லை, அறிந்து சொல்கிறேன். சப்த தீவு பற்றிய எண்ணக்கரு எனக்குப் புதியது. நீங்கள் இங்கே குறிப்பிட்டபின்னர்தான் எனக்குத் தெரிய வந்தது. மண்டைதீவையும் தனியான ஒரு தீவாகத் தான் நான் கருதி வந்தேன். Mayooranathan 20:58, 19 ஆகஸ்ட் 2005 (UTC)
மீண்டும் பெயர் மாற்றம்
தொகுலைடன் தீவு என்ற பெயருடன் இத்தீவு சப்த தீவு, நெடுந்தீவு மக்களும் வரலாறும், & இடப்பெயர் ஆய்வு: யாழ்ப்பாண மாவட்டம் ஆகிய நூல்களிலும் பரவலாகவும் தற்போது வழங்கப்படுகின்றது என்று எண்ணுகின்றேன். ஆனால் ஒரு பயனர் விளக்கங்கள் தரமால் வேலணைத்தீவு என்று மாற்றியிருந்தார். வேலணை என்ற கிரமாமும் இங்கு இருப்பதால் மேலும் குளப்பங்கள் பெயரிடிலில் இருக்கின்றது.
வேலணைத்தீவு என்பது அரச உத்யோகபூர்வ பெயராக இருக்கலாம் போன்று தோன்றியதால், மேலும் விளக்கங்கள் வரும்வரை அப்படியே விடப்பட்டது. அரச பிரயோகங்களில் பிரிவுகளை ஏற்படுத்துவோர் கிராமங்களை கணக்கில் எடுக்காமல் எல்லைகளை மட்டுமே வைத்து பிரிவுகளை ஏற்படுத்துவது போன்று பின்வரும் சுட்டிகள் மூலம் தெரிகின்றது. எனவே பழையபடி பெயரை மாற்றுகின்றேன். ஆட்சோபனை இருந்தால் தயவு செய்து தெரிவித்து, உரையாடி, பின்னர் ஒரு மாற்றங்களை ஏற்படுத்துமாறு கேட்டுகொள்கின்றேன்.
- http://www.nepc.lk/administration/jaffna/20304.html
- http://www.nepc.lk/GN%20Division%20detail/Jaffna/Kayts.html
- http://www.nepc.lk/GN%20Division%20detail/Jaffna/Velanai.html
--Natkeeran 16:30, 20 மே 2006 (UTC)
- லைடன் தீவு என்னும் பெயர் பொதுப்பயன் பாட்டில் இல்லை. வேலணைத்தீவு என்பதுதான் பயன்பாட்டில் இருக்கும் பொதுப்பெயர் மற்றும் வேலணை என்பதுதான் இலங்கை அரசின் அதிகாரபூர்வ பெயர் ஆகும். லைடன் தீவு என்பது வழக்கொழிந்து போனது. எனவே பெயரை வேலணைத்தீவு எனமாற்றி "வேலணைத்தீவை என்றும் லைடன் தீவு என்று முன்னர் அழைத்தார்கள்" எனமாற்றுவது சிறந்தது. [1] --கனகநாயகம் சயந்தன் 16:19, 20 சனவரி 2018 (UTC)
- @Natkeeran and Kanags: கனகநாயகம் சயந்தனின் கருத்துச் சரிதான். "லைடன் தீவு" உத்தியோகபூர்வ வழக்கிலோ பொது வழக்கிலோ இப்போது இல்லை. பெயரை "வேலணைத் தீவு" என மாற்றி விடலாம். "லைடன் தீவு என்று முன்னர் அழைத்தார்கள்." என்பதிலும், "ஒல்லாந்தர் காலத்தில் இதற்கு 'லைடன் தீவு' எனப் பெயர் வழங்கியது" எனக் குறிப்பிடலாம். ---மயூரநாதன் (பேச்சு) 11:38, 23 சனவரி 2018 (UTC)