பேச்சு:வேள்வி
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by Jagadeeswarann99 in topic விக்கியாக்கம் செய்ய நீக்கப்பட்ட பகுதிகள்
தமிழ்ச் சொல்
தொகுவேள்வி என்பது யாகத்துக்கு ஈடான தமிழ்ச் சொல் என்றால் வேள்வி என்ற பக்கத்துக்கு நகர்த்தலாமா?--ரவி 09:10, 7 பெப்ரவரி 2010 (UTC)
- ஆம் முற்றிலும் சரி. மாற்றிவிட்டேன். வேட்பது, வேண்டுவது வேள்வி. சுருதி, மறை என்பதைத் தமிழில் கேள்வி என்பர். கேள்வி என்னும் தமிழ்ச்சொல் கூறும் பொருள் மறை, சுருதி ஆகிய சொற்களில் அடங்காது (ஆனால் அப்பொருள்களும் உள்ளுணர்த்தும் அருமையான சொல்). வேதம் என்றால் அறிவு. சுருதி என்றால் கேட்பது. கேள்வி என்றால் கேட்பதும் சுட்டும், அறிவையும் சுட்டும், எல்லாவற்றுக்கும் மேலாக அன்பையும் சுட்டும். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்னும் தொடரில் கேளிர் என்னும் சொல் அன்புடையவர் என்று பொருள் (நண்பர், உறவினர் என்றும் கூறலாம்). காதலன் (அன்புடையன்) என்பதைத் தமிழில் கேள்வன் என்பர். கேள்வன் என்ரால் கணவன் என்றும் பொருள். கேண்மை என்றால் நட்பு (அன்பு கொள்ளுமை). கேள்->கேண். --செல்வா 14:07, 7 பெப்ரவரி 2010 (UTC) புகழ்பெற்ற மெய்யியலாளர் சே'. கிருட்டிணமூர்த்தி (JK) அவர்கள் அடிக்கடி கூறும் ஒரு வாசகம் To listen is to love; to love is to listen. இப்பொருள் இயல்பாகவே தமிழில் கேள்வி (கேட்பதும் அன்பு கொள்ளுவதும்) அமைந்திருப்பது அருமை. --செல்வா 14:10, 7 பெப்ரவரி 2010 (UTC)
விக்கியாக்கம் செய்ய நீக்கப்பட்ட பகுதிகள்
தொகுயாகம் என்பது ஒரு இந்து சமய வழிபாட்டு சடங்கு ஆகும். தேவர்களை மகிழ்வித்து வரம் நிறைவேற்ற என நம்பி யாகம் மேற்கொள்ளப்படுகிறது. ஒரு நெருப்பை தோற்றுவித்து அதனுள் பல்வேறு பொருட்களை இடுவர்.
பொதுவாக யாகத்தை பிராமண சாதியைச் சார்ந்த குருமார்களே செய்வர்.
தற்காலத்தில் வேள்வி
தொகுவேள்விக் குண்டத்தில் இடப்படும் பொருட்கள் முன்னோர்களைச் சென்றடையும் என்று நம்பப்படுகிறது. தற்காலத்தில் திருமணம், புதுமனை புகுதல் போன்ற சுப நிகழ்வுகளிலும், திதியளித்தல் போன்ற அமங்கல நிகழ்வுகளிலும் வேள்வி அமைக்கப்படுகிறது.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 13:28, 1 மே 2013 (UTC)