இந்த தலைப்பிலானா கட்டுரை வொக்கலிகர் எனும் தலைப்பில் குறுங்கட்டுரையாக உள்ளது. கவனிக்கவும். கவுடர் எனும் தலைப்பில் அனைத்துக் கவுடர் சாதியினரையும் குறித்து குறிப்பிடலாம். --Theni.M.Subramani 04:54, 5 மார்ச் 2010 (UTC)

  • சரிதான் நண்பரே.

நீக்கப் பரிந்துரை

தொகு

இந்தக் கட்டுரை வொக்கலிகர் எனும் தலைப்பில் ஏற்கனவே இடம் பெற்றுள்ளது. இக்கட்டுரையில் முக்கியமான கருத்துக்கள் எதுவுமிருப்பதாகத் தெரியவில்லை. அப்படி இருப்பின் இதை வொக்கலிகர் கட்டுரையுடன் இணைத்து விட்டு இக்கட்டுரையை நீக்கிவிடலாம்.--Theni.M.Subramani 01:56, 6 மார்ச் 2010 (UTC)

  • அப்படியா நண்பரே.

மேற்கோள்கள் தேவை

தொகு
  • வரலாற்றுச் செய்திகள் தரப்படும் போது அதுகுறித்த ஆதாரங்கள், மேற்கோள்கள் குறிப்பிடப்பட வேண்டும். இக்கட்டுரையில் சேர்க்கப்பட்ட சரித்திரக் குறிப்புகள் சரியானதாக இல்லாததால் இத்தலைப்பிலான பகுதி நீக்கப்பட்டது.
  • தனிப்பட்ட ஒருவரின் புகழ்பாடும் விதமாக இருந்த மற்றொரு தலைப்பிலான பகுதியும் நீக்கப்பட்டது.
  • அப்படித்தெரியவில்லை நண்பரே.

-வொக்கலிகர் சாதி உருவான வரலாற்றுக் கதை இருப்பின் அதை தகுந்த ஆதாரங்களுடன் இங்கு பதிவேற்றலாமே... --Theni.M.Subramani 17:49, 14 மார்ச் 2010 (UTC)

  • ஆம், அதுவும் சரிதான்.

இவ்வளவு மோசமாக திருத்தாதீர்

தொகு

தேனி சுப்பிரமணிக்கு, ஏன் இவ்வளவு காழ்ப்புணர்ச்சியோடு திருத்துகிறீர்கள்? உங்கள் நோக்கம் நீங்கள் மட்டுமே எழுதவேண்டும் என நினைக்கிறீர்கள்,நீங்கள் பெரிய ஜாம்பவானாக [ஆரம்பிப்பதில் மட்டும்] இருக்கலாம்,அதற்காக எல்லாவற்றையும் திருத்தம் செய்யாதீர்கள்.மற்றவர்களின் பங்களிப்பை மதியுங்கள்,அல்லது உங்களுக்கு தெரியாத விசயங்களை மற்றவர்கள் எழுதும்போது அதை ஏற்றுக்கொள்ளூம் பக்குவத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்.மற்றவர் கருத்துக்களை இருட்டடிப்பு செய்யவேண்டாம்.moorthy.pb

இது விளம்பர அறிவிப்பு அல்ல

தொகு

நண்பருக்கு, தாங்கள் குறிப்பிட்டபடி எனக்கு எவ்விதக் காழ்ப்புணர்ச்சியுமில்லை. வொக்கலிகர் சமுதாயக் கட்டுரையைத் தொடங்கியது மட்டுமில்லை. அதன் வளர்ச்சியிலும் என் பங்கு அதிக அளவுள்ளது. தாங்கள் குறிப்பிடும் தனிப்பட்ட நபர்கள் வொக்கலிகர் சமுதாயத்திற்கு மட்டும் முக்கியமானவராக இருக்கலாம். வொக்கலிகர் சமுதாயத்திற்கு பெயர் சேர்க்கும் வகையிலுள்ள நபர்கள், குறிப்பாகத் தமிழர்கள் பெரும்பான்மையானவர்களுக்குத் தெரிந்த நபராக இருப்பது நல்லது. முக்கியப் பிரமுகர் பகுதியில் உயர்நீதிமன்ற நீதிபதி நீதியரசர் முருகேசன் தங்கள் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதை நான்தான் குறிப்பிட்டேன். இதுபோல் அரசியல் பங்களிப்பில் கம்பம், என்.நடராசன், என்.ராமகிருஷ்ணன், ஆர்.டி.கோபால் போன்றவர்கள் இருப்பதை முதலில் நான் தான் சேர்த்தேன். வொக்கலிகர் சமுதாயம் / சமுதாயத்தைச் சேர்ந்த கல்வி நிறுவனங்கள் பட்டியல் முதலில் நான் தான் சேர்த்தேன். இக்கட்டுரை நல்ல வளர்ச்சியடைவதில் என்னைத் தவிர மகிழ்ச்சியடைவது வேறு யாருமிருக்க முடியாது. தாங்கள் தனிப்பட்ட நபர்களை இக்கட்டுரையில் தேவையில்லாமல் சேர்ப்பதைத் தவிர்க்கவும். வொக்கலிகர் சமுதாயத்திற்கு பெருமை சேர்க்கும் பல தகவல்களை அளிக்கலாமே....? ஏன் தனிப்பட்ட நபர்கள் புகழ்பாடும் செய்திகள்...? இப்படி இந்தக் கட்டுரையில் சேர்த்துக் கொண்டு போனால் இதுவும் ஒரு விளம்பர அறிவிப்பு போல் ஆகிவிடும். கட்டுரை வளர்ச்சியில் பங்காற்றுங்கள்...கலைக்களஞ்சிய நடைக்கு ஏற்ற தகவலை மட்டும் தாருங்கள்...--Theni.M.Subramani 13:23, 3 ஏப்ரல் 2010 (UTC)

இதுவும் விளம்பர அறிவிப்பு அல்ல

தொகு

நண்பருக்கு, முக்கியமானவர்களை மட்டும் சேருங்கள் என்கிறீர்கள் தமிழக விவசாயிகள் சங்கத்தலைவர் டாக்டர் சிவசாமி ஐயா அவர்களை உங்களுக்குத் தெரியவில்லை என்றால் என்னவென்று சொல்வது,இவரும் டாக்டர் ஈ.ராமதாஸ் அவர்களைப்போல் இலவசமாக மருத்துவம் பார்த்துவந்தார்,எழுவது வயதில் எந்த சுயநலமும் இல்லாமல் இன்றும் விவசாயிகளுக்காக போராடிவருகிறார்,அதுப்போல் ஓ.ஆறுமுகசாமி அவர்களும்,ஒக்கலிகர்களுக்காக ஆரம்பிக்கப்பட்டு இன்று எல்லா ஜாதிக்கும் இலவசமாக மெட்ரிக்லேசன் கல்வியை வழங்கி வருகிறார்.இவர்களெல்லாம் ஒக்கலிக்கவுண்டர் ஜாதியின் முன்னோடிகள்,தயவு புகழ்பாடும் செய்திகள் என்று அவமானப்படுத்தாதீர்கள்.இந்த கட்டுரையின் தலைப்பை [அதுகூட ஒக்கலிகர் என்றுதான் வந்திருக்கவேண்டும் ஆங்கிலத்தில் vokkaligar என்பதை ஒக்கலிகர் என்றுதான் எழுதுவார்கள்,அப்படித்தான் இனையத்தில் தேடுவார்கள் ] நீங்கள் முதலில்உருவாக்கியதற்கு நன்றி.அதற்காக எல்லாவற்றையும் திருத்தம் செய்யாதீர்கள்,தெரியாதவற்றை விட்டுவிடுங்கள்.இல்லையேல் அது ஒக்கலிகர் களஞ்சியமாக இருக்காது.நாம் சம்மந்தமில்லாமல் வேறு ஜாதி கட்டுரைகளை மாற்றம்செய்யமுடியாது அல்லவா,அதைப்போல தான்,இதுவும்.

கட்டுரைத் தலைப்பு ஒக்கலிகர் என்றிருத்தலே சரி. Elango (பேச்சு) 17:37, 8 திசம்பர் 2022 (UTC)Reply

தேவையற்ற விவாதம்

தொகு

தேவையற்ற கருத்துக்கள், தேவையற்ற விவாதங்கள் நமக்கிடையே தேவையற்றது. தனிப்பட்ட நபர்கள் குறித்த செய்திகளைத் தவிர்த்து வொக்கலிகர் சமுதாயத்திற்கு பெருமை அளிக்கும் தகவல்கள் தர முயற்சியுங்கள். இது ஒரு தமிழ்க் கலைக்களஞ்சியம். இது வொக்கலிகர் களஞ்சியமில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். தாங்கள் வொக்கலிகர் எனும் கட்டுரையைத் தவிர வேறு எந்தக் கட்டுரையிலும் பங்களித்ததாகத் தெரியவில்லை. மேலும் அடையாளம் காட்டாத பயனராக விக்கிப்பீடியாவில் பயணித்து வருகிறீர்கள். தங்களை விக்கிப்பீடியாவின் பயனராக அடையாளப்படுத்திக் கொண்டு பிற கட்டுரைகளையும் எழுதுங்கள். விக்கிப்பீடியாவில் எப்படிப்பட்ட கட்டுரைகள் இடம் பெறுகிறது? விக்கிப்பீடியாவின் நோக்கம் என்ன என்பதை முதலில் உணர்ந்து கொள்ளுங்கள். பட்டியலில் இடம் பெற்றுள்ள பல சாதிகள் குறித்த கட்டுரைகளை நான் தமிழ் விக்கிப்பீடியாவில் தொடக்கி எழுதியிருக்கிறேன். அதை விரிவாக்கியும் உள்ளேன். வேறு சிலரும் எழுதியிருக்கின்றனர். மற்ற சாதிகளின் கட்டுரைகளையும் படித்துப் பார்த்து எப்படி ஒரு சாதி குறித்த கட்டுரை அமைய வேண்டும் என்று முதலில் ஒரு முடிவுக்கு வாருங்கள். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள கையேட்டில் வொக்கலிகர் என இடம் பெற்றிருப்பதால் அதே பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது. (பார்க்க: தமிழ்நாடு சாதிகள் பட்டியல்). எந்த ஒரு செய்திக்கும் ஆதாரம் மற்றும் சான்றுகள் தேவை என்பதை உணர்ந்து எழுத வேண்டும். தனிப்பட்ட நபர்கள், நிறுவனங்கள், அமைப்புகள் குறித்த செய்திகள் விளம்பரப்படுத்தும் நோக்கத்துடன் இடம் பெறுவதை விக்கிப்பீடியா அமைப்பு அனுமதிப்பதில்லை. சாதிகள் குறித்த கட்டுரையில் கல்வி நிறுவனங்கள் குறித்த தகவல்கள் கல்விச் சேவை எனும் சமுதாயப் பார்வையுடன் இடம் பெறுகிறது. இதில் அந்த கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகள் பற்றிய செய்திகள் தேவையற்றது. மேலும் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருபவர்கள் அனைவரும் தன்னார்வலர்கள். இவர்கள் அனைத்து விதமான செய்திகளையும் தேவையான ஆதாரங்களின் அடிப்படையில் பதிவேற்றி வருகிறார்கள். தமிழ் விக்கிப்பீடியா ஒரு உலகம் தழுவிய அமைப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதில் தாங்கள் உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளக்கூடிய பொதுவான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்ய வேண்டும். இப்படிப்பட்ட விவாதம் இதுவரை தமிழ் விக்கிப்பீடியாவில் இடம் பெற்றதாகத் தெரியவில்லை. தங்களைப் போன்ற அடையாளம் காட்டாத, தமிழ் விக்கிப்பீடியாவின் செயல்பாடு குறித்து அறியாத நிலையில் இது போன்ற விவாதங்கள் அமைந்து விட்டது வருத்தத்திற்குரியது.--Theni.M.Subramani 15:04, 4 ஏப்ரல் 2010 (UTC)

வருந்துகிறேன்

தொகு

எவ்வளவு விளக்கமாக எடுத்துச்சொன்னாலும் கிளிப்பிள்ளைப்போல் திரும்பவும் அதையே எழுதிக்கொண்டிருக்கும் உங்கள் அறியாமையை நினைத்து வருந்துகிறேன்.இது ஒரு தமிழ்க் கலைக்களஞ்சியம்.இது வொக்கலிகர் களஞ்சியமில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்று மிரட்டி எழுதிகிறீர்களே உங்கள் அறியாமையை நினைத்து வருத்தப்படுவதைத் தவிற வேறு வழியில்லை.நல்லவேளை நீங்கள் ஆங்கில விக்கிப்பீடியாவுக்கு ஓனராக இல்லை. அதிகம் எழுதுவது மட்டுமே ஒருவருக்கு தகுதியாகிவிடாது.நானும் பல பெயர்களில் எழுதியுள்ளேன்.விவாதம் ஆரோக்கியமாக இருந்தால்தான் எழுதுவது நல்லது.ஆகவே இனி வொக்கலிக கட்டுரையை நீங்களே தொடருங்கள்,தப்பித்தவறிக்கூட அந்த சமுகத்தின் தலைவர்களை வெளிப்படுத்திவிடாதீர்கள்,முடிந்தளவுக்கு பூந்துவிளையாடுங்க, இனி இதை -தேனி சுப்பிரமணிப்பீடியாவாக தொடருங்கள்.ஜாதிகளையே ஒழிக்கமுடியாத நாம் சமகருத்துக்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் தேடி பல நூற்றாண்டு பயணிக்கவேண்டிவரும்.ஆனால் பயணம்தான் தெளிவைத்தரும். moorthy.pb

என் கருத்து

தொகு

தேனி . சுப்ரமணியம் . தாங்கள் அந்த பகுதியை நீக்கியது தவறென்றே எனக்கு தோன்றுகிறது . அவர் நீங்கள் நீக்கம் செய்ய நினைப்பதை ஒப்பு கொண்டதன் பின்பு நீக்கியிருக்க வேண்டும் என்று நான் நினைகிறேன் . அவரது தொகுப்பில் உண்மையில்லை என்று நீங்கள் நினைத்திருந்தால் அங்கு மேற்கோள்கள் தேவை (citation needed) என்று குறிப்பிட்டு இருக்க வேண்டும் . நான் ஒன்றும் அதிகாரத்தில் சொல்ல வில்லை. எனது அபிப்ராயம் அவ்வளவே !!! -- இராஜ்குமார் 11:00, 5 ஏப்ரல் 2010 (UTC)

கர்நாடகா

தொகு

வொக்கலிகர்கள் கர்நாடகத்தில் அதிகளவு உள்ளனர். முன்னால் பிரதமர் தேவகௌடா இச்சமூகத்தை சார்ந்தவர். இது பற்றி தகவல்களை சேர்த்தால் நன்று. எடியூரப்பா லிங்காயத்து சமூகத்தை சார்ந்தவர். [1] --குறும்பன் 00:10, 13 ஏப்ரல் 2010 (UTC)

வேண்டுகோள்

தொகு

ஐ.பி 58.68.66.252 , 58.68.66.251 ஆகிய இரண்டிலும் ஒரே பயனர் பயன்படுத்துவதாக தெரிகிறது . அவர் செய்த தொகுப்புகள் பலவற்றில் விக்கிபீடியா கொள்கைக்கு முரணாக உள்ளதாக தெரிகிறது . உதாரணமாக அவ்வை தமிழ் சங்கம் என்ற கட்டுரையில் கைப்பேசி எண் , மின்னஞ்சல் முகவரி ஆகியவை எல்லாம் குறிப்பிட்டுள்ளது . கௌடா என்ற கட்டுரையில் வொக்கலிகர் கட்டுரைக்கு மாற்று வழி அமைக்கப்பட்டிருகிறது .

No law, no life. Know law, know life! Warrant ba ‘law’ 09842909190 warrantbala2011@gmail.com

மேலேயுள்ளவற்றை இரண்டு கட்டுரையில் அதாவது இந்தியச் சட்டம், அவ்வை தமிழ் சங்கம் கட்டுரையின் ஊடாக குறிப்பிட்டுள்ளார் . இதன் வரலாற்றை கண்டால் அனைவர்க்கும் புரிந்துவிடும் . இதனை நிர்வாகிகள் கவனிக்க வேண்டும் .

எதற்காக அவர் இப்படி செய்கிறார் . அப்படி செய்வதனால் ஒரு பயனும் இல்லை . இவ்வாறு அவர் பதிவு செய்வதை எல்லாம் நீக்கிவிடவும் , அந்த பதிவரை தடை செய்யவும் முடியும் . இதெல்லாம் அவருக்கு தெரியுமா ? தெரியாதென்றால் . அவர் இதனை புரிந்து கொண்டு நல்ல முறையில் விக்கிபீடியா விற்கு பங்களிக்க வேண்டும் . இந்த செய்தியை அந்த பயனர் மூர்த்தி படித்து உணர்வார் என்று நம்புகிறேன் . -- இராஜ்குமார் 07:20, 13 ஏப்ரல் 2010 (UTC)

இனம் தான் முக்கியமான ஒன்று

தொகு

ஒக்கலிகர்கள் காப்பிலியர்கள் என்று அழைக்க படும் இனத்தவர்கள் காப்பு இனத்தினை சேர்ந்தவர்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று , மேலும் அதற்கான ஆதாரங்கள் கொடுத்தபோதிலும் ஏன் நீக்கி உள்ளீர்கள் என்று தெரியவில்லை ? மேலும் ஆந்திர , கர்நாடக தென் இந்தியாவில் பெரும்பான்மை சமுதாயமான காப்பு இனத்தவர்களின் கிளைகள் பல அவர்கள் ரெட்டியார் , கவுண்டர் , நாயக்கர் , ராவ் , நாயுடு , செட்டி என்று பல பெயர்களில் அழைக்க படுகின்றனர் . ஆதாரங்கள் இல்லை என்றால் அதனை நீக்கலாம் ஆனால் ஆதாரம் இருந்தும் அதனை நீக்குவதற்கான காரணம் ?--Rajanaicker

ஒன்பது கம்பளம் இனத்தில் ஒரு இனம் தான் ஒக்கலிகர் இனம் , கன்னடம் பேசுவதால் அவர்களிடம் உறவு இல்லையே தவிர வேறு எதுவும் இல்லை , அவர்களுக்கும் தொட்டிய நாயக்கர்களை போல தான் சடங்குகள் அனைத்தும் .[[2]][[3]] தேனி , திண்டுக்கல் , விருதுநகர் , நாமக்கல் , மதுரை , கோவை , திருப்பூர் போன்ற பகுதிகளில் இருவரும் சேர்ந்த கம்பளத்து இனத்தவர்கள் அதிகமாக பெரும்பான்மையாக உள்ளனர் என்பதே உண்மை . இவர்களின் ஆதி இனமான காப்பு இனத்தினை இவர்கள் அறிய வேண்டும் . காப்பு என்று இவர்கள் நடத்தும் சடங்குகளில் கூறி வரும் இவர்கள் காப்பு என்றால் ஏதோ ஒன்று என்று பிரிந்து உள்ளனர் , தற்போது இணையம் மூலம் படித்து வரும் மக்கள் தங்கள் ஜாதியின் மூலம் யாது என்பதை அறியவே இனத்தினை பதிந்துள்ளேன் . அதுவும் வெறும் வாய் மொழி வரலாறு அல்லாமல் ஆதாரங்களோடு தான் பதிகின்றேன் . வரலாறுகளை ஆராய்ந்து கொண்டு இருக்கும் மாணவன் என்பதால் தான் இதனை பதிகின்றேன் . நீக்க தேவை இல்லை என்பதே என் வேண்டுகோள் --Rajanaicker

தாங்கள் முன்பு அளித்த ஆதாரத்தில் இருந்த தகவல் “திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே எ.சித்தூரில் காமுகுல ஒக்கலிகர் காப்புக் கல்வி நலச்சங்கம் சார்பில் நடந்த விழாவில் அரசு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிக்கு முன்னாள் துணை சபாநாயகர் காந்திராஜன், ஊராட்சி ஒன்றியத் தலைவர் நடராஜன் ஆகியோர் பரிசு வழங்கினர்.” எனும் தினகரன் நாளிதழ் செய்தி. இதுதான் ஆதாரமா? இது விளம்பர நோக்கமுடைய தகவல் என்பதால் நீக்கப்பட்டது. இப்போது மீண்டும் முதல் ஆதாரமாக அந்தத் தகவலைச் சேர்க்கிறீர்கள். இரண்டாவதாகக் குறிப்பிட்டுள்ள ஆதாரம் ஓரளவு ஏற்புடையதாக இருப்பதால் விளம்பர நோக்கத்திலான முதல் ஆதாரம் மட்டும் மீண்டும் நீக்கப்பட்டுள்ளது.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 16:19, 18 பெப்ரவரி 2012 (UTC)


அப்படியா ? விளம்பரம் நோக்கில் இருக்கும் ஆதாரம் என்று என்ன வில்லை, காப்பு இனம் என்று அறிய தான் பதிந்தேன் . நன்றி .--Rajanaicker

Hai iam sathyaprasanna form theni district i have more eager to know the history of our vokkaliga caste, still now i dont know the correct meaning for the words "Kapu" and "Kamukula", i red in one of the magazine that we all are came form himalayas,we r the protecters of "Linga" and born from kamadhenu so that we r adding the word kamukula, but i dont know the meaning for the word "Kapu" but our forefathers said that out caste is always obeyed and controlled by "Kapu and Kambalam". can anyone answer and elabrate 1. the meaning of the word "Kapu"? 2. Is tamilnadu vokkaligar and andhra Kapu caste were same or not??? 3. Why that " Gangatika vokkaligar" alone called kshatriyas? By M.Sathyaprasanna

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வொக்கலிகர்&oldid=3616465" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "வொக்கலிகர்" page.