பேச்சு:ஸ்டான்லி பூங்கா, வான்கூவர்
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by Anton
இக்கட்டுரையில் உள்ள இரண்டு இடங்கள் பற்றி விக்கியில் கட்டுரைகள் இல்லை. அவற்றைத் தனிக்கட்டுரைகளாக்கி, இப்பட்டியலை நீக்கி விடலாம். அவசியம் பார்க்க வேண்டிய 20 இடங்கள் என்பது யார் இவற்றைத் தேர்ந்தெடுத்தார்கள் என்பது குறிப்பிடப்படவில்லை.--Kanags \உரையாடுக 00:48, 12 மே 2013 (UTC)
- பட்டியல் முழுமையடையவிலை போலும்.. கனகு கூறுதுபோல இதனை ஓர் வார்ப்புருவாக மாற்றி இடங்கள் குறித்து தனித்தனி கட்டுரைகள் இருப்பதே சிறப்பு. எந்த அடிப்படையில் இந்தப் பட்டியல் உருவாக்கப்பட்டதென்று தெரியவில்லை. பதிப்புரிமை மீறலாகவும் இருக்கலாம்.--மணியன் (பேச்சு) 00:58, 12 மே 2013 (UTC)
- பதிப்புரிமை மீறல் இருக்காது என்றே நம்புகிறேன். கட்டுரையாளர் புதிய கட்டுரைகளை சில நாட்களில் ஆரம்பிக்காவிட்டால் வேறு யாரும் எழுதலாம். இவை அனைத்து விக்கிகளிலும் இருக்க வேண்டிய கட்டுரைகள்.--Kanags \உரையாடுக 03:04, 12 மே 2013 (UTC)
- இருக்கட்டும். விக்கியாக்கம் செய்து புகைப்படங்களைச் சேர்க்கலாம். நிறைய தளங்கள் இதுபோன்ற தகவல்களை வெளியிடுகின்றன. அவற்றை மேற்கோளாகவும் வெளியிணைப்பாகவும் கொடுக்கலாம். கண்டிப்பாக இது பதிப்புரிமை மீறல் கட்டுரை இல்லை. :) ஏதேனும் நூலில் வந்திருக்கக்கூடும். -- சூர்யபிரகாஷ் உரையாடுக 05:36, 12 மே 2013 (UTC)
- இக்கடுரையினை நீக்கிவிடலாம். கட்டுரையாளர்களில் பேச்சுப் பக்கத்தில் தகவல் தெரிவித்தும் பயனில்லை. புதிய பயனர் பெயரிலும் ஐ.பி முகவரியிலும் தொகுக்கப்படுகின்றது. மற்றும் இதனை அவசியம் பார்க்க வேண்டிய 20 இடங்கள் என வரையறுக்க முடியாது. "20 must see places in the world" என தேடு பொறியில் தேடினால் பல விடைகள் அவரவர் விருப்புக்கு ஏற்ப வருகின்றன. National Geographic ஒவ்வொரு வருடமும் அவசியம் பார்க்க வேண்டிய 20 இடங்கள் பட்டியலிடுகின்றது. இதனைத் தவிர 25, 30, 50 எனப் பட்டியல்கள் உள்ளன. --Anton (பேச்சு) 02:15, 13 மே 2013 (UTC)
- நிக்குவதே சிறந்தது. உலகத்தில் அவசியம் பார்க்க வேண்டிய 20 இடங்கள் இப்படிக் கூறுவது விளம்பர நோக்கம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:10, 13 மே 2013 (UTC)
- விளம்பர நோக்கம் எதுவும் இப்பயனர்களுக்கு இல்லை என்பது நிச்சயம். புதிய பயனர்கள் இவ்வாறு தகவல்களைத் தருகிறார்கள். அதனைக் குறைத்து மதிப்பிட வேண்டாம். இப்பட்டியலை நீக்குவது தான் நல்லது. ஆனால் இப்பக்கத்தில் உள்ள கட்டுரைகளைத் தனிக் கட்டுரைகளாக்க வேண்டும். இக்கட்டுரையாளர்கள் இதனைச் செய்வார்கள் எனத் தெரியவில்லை. ஆகவே வேறு பயனர்கள் இதனைச் செய்யலாம். எவருக்கும் முடியாவிட்டால் என்னிடம் விடுங்கள். நானே எழுதி விட்டுப் பின்னர் இதனை நீக்கி விடுகிறேன்.--Kanags \உரையாடுக 10:20, 13 மே 2013 (UTC)
- கனக்ஸ் கூறுவது சரியே. இத்தகைய கட்டுரை முயல்வுகள் புதிய பயனர்கள் எப்படி விக்கியைப் பார்க்கின்றார்கள் என்பது குறித்த தகவல்களை எமக்குத் தருகின்றன. பயனர்களை நாம் அணுகவும் வழிப்படுத்தவும் தகவலாக இது அமையும். முடிந்தவற்றை தனிக்கட்டுரை ஆக்குவதே சிறப்பு.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 10:55, 13 மே 2013 (UTC)
- நான் தனிக் கட்டுரைகளாக்குகிறேன். முடிந்தவர்கள் தனிக் கட்டுரைகளாக்க உதவவும். --Anton (பேச்சு) 11:15, 13 மே 2013 (UTC)