பேச்சு:ஸ்ரீவில்லிபுத்தூர்

Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by தமிழ்க்குரிசில்

ஸ்ரீ என்பது தமிழ் வழக்கப்படி சீ என்றே எழுதப்படும். ஏற்கனவே பெருவழக்கிலும் இருந்துள்ளது.

எடு: ஸ்ரீவல்லபப்பேரி -> சீவலப்பேரி
ஸ்ரீனிவாசன் -> சீனிவாசன்

ஸ்ரீகாழி -> சீகாழி (பின்னர் பிழையாகி சீர்காழி எனப்பட்டது). இப்படி இருக்கையில், சிறீ என்றும் சிரீ என்றும் நாம் ஏன் புதிதாக எழுத வேண்டும்? ஜ வுக்கு மாற்றாக ய பெரும்பாலான இடங்களில் பயன்படுத்துவதுபோல் ஸ்ரீ என்பதற்கு சீ என்பதையே பொது வழக்காகக் கொள்ளலாமே!

இதை திருவில்லிபுத்தூர் என்பதும் தவறு என்கிறார்களே! திருவில்லிபுத்தூர் என்றால், ஆண்டாள் வாழும் இடம் எப்படி திரு இல்லாமல் போகும்? சீவில்லிப்புத்தூர் எனலாம் என்று வைணவப் பெரியோர்கள் கூறுகிறார்கள். -தமிழ்க்குரிசில் (பேச்சு)

ஆழ்வார் பாடல்களில் சிரீதரன் என்ற பயன்பாடு உள்ளது. ஈழத் தமிழரிடையே சிறீ என்னும் பயன்பாடு உள்ளது. இடத்துக்கு ஏற்றாற் போல் சீ, சிரீ, சிறீ ஆகிய மூன்றையும் பயன்படுத்தலாமே? முன்பு ஸ்ரீ இருந்த பல ஊர்ப்பெயர்கள் பொதுவழக்கில் திரு பெற்று வழங்கப்பெறுகிறது. எனவே அதனை மாற்றத் தேவை இல்லை.
//திருவில்லிபுத்தூர் என்றால், ஆண்டாள் வாழும் இடம் எப்படி திரு இல்லாமல் போகும்? சீவில்லிப்புத்தூர் எனலாம் என்று வைணவப் பெரியோர்கள் கூறுகிறார்கள்.// புரியவில்லை--இரவி (பேச்சு) 13:01, 25 அக்டோபர் 2012 (UTC)Reply
இந்தப் பேச்சுப் பக்கத்தை தொடங்கும் முன், ஸ்ரீதரன் (சொற்பொருள்) என்ற பக்கத்தில், ஆழ்வார்கள் சீரிதரன் என்று கையாண்டுள்ளார்கள் என்று எழுதினேன். பின்னர் இணையத்தில் தேடியபோது சீ சான்றோர் வழக்கு என்று அறிந்துகொண்டேன்.

திரு+இல்லி+புத்தூர் -> திரு இல்லாத ஊர் என்று பொருளாம்! ஆண்டாள் வாசம் செய்யும் இடம் எப்படி திரு இல்லாமல் இருக்கும்? ஆகவே, இவ்விடத்தில் திருவில்லிப்புத்தூர் என்பது தவறாம். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:11, 25 அக்டோபர் 2012 (UTC)Reply

முதலில் திரு+இல்லி+புத்தூர் என்று பிரிப்பது சரியா? திரு+வில்லி+புத்தூர் என்றுதானே பிரிக்க வேண்டும்.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 16:33, 25 அக்டோபர் 2012 (UTC)Reply

சீ,சிரீ, சிறீ மூன்றையும் நானும் இடத்திற்குத் தகுந்தவாறு பயன்படுத்துகிறேன். :) இருப்பினும் ஒன்றைப் பயன்படுத்தினால் சீராக இருக்குமே என்று கேட்டிருந்தேன். இதே போன்றே ஜூலை, யூலை, சூலை என்ற மூன்றையும் பயன்படுத்துவேன். சீராகும்வரை! தேனியாரே, திரு+இல்லி+புத்தூர் என்பதை வைணவ சான்றோர் கூறியிருந்தார். கூகுளில் தேடிப் பாருங்களேன். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:17, 26 அக்டோபர் 2012 (UTC)Reply

Return to "ஸ்ரீவில்லிபுத்தூர்" page.