பேச்சு:2007 ஐசிசி உலக இருபது20

உலகக்கோப்பை?? தொகு

உலகக்கிண்ணம் என்பதைவிட உலகக்கோப்பை என்பது பொருந்தும் என்பது என் தாழ்மையானக் கருத்து! (விக்கிபீடியாவில்தான் இலங்கைத் தமிழ்யன்பர்களின் தமிழ்வழக்கை நான் அறிகின்றேன் என்பதினால் எனக்கு சிற்சில வார்த்தைப் பயன்பாடுகள் புதிதாய் இருக்கின்றன, ஆதலின் இவ்வாறான என் கருத்துக்களை பொருத்தருள்க) :-) -நரசிம்மவர்மன்10 05:43, 25 செப்டெம்பர் 2007 (UTC)Reply

கிண்ணம்-கோப்பை தொகு

கோப்பை ஈழத்திலும் பயன்படும் சொல்தான். ஆனால் plate போன்றவையும் கோப்பை எனப்படுகின்றன. கிண்ணம் நல்ல தமிழ்ச் சொல்தானே. அது தமிழகத்தில் பயன்பாட்டில் இல்லையா?

:-) இருக்கின்றது, ஆனால் அஃது சிறிய அளவிலான பாத்திரத்தை (கோப்பையை) குறிக்கும். மேலும், இங்கே வழக்கில் "உலகக்கோப்பை" என்றுதான் மொழிபெயர்கிறார்கள்
-நரசிம்மவர்மன்10 06:07, 25 செப்டெம்பர் 2007 (UTC)Reply

கோப்பை என்பது Cup என்பதன் நேரடித் தமிழாக்கம். தமிழ்ச் சொல்லல்ல. கிண்ணம் நல்ல தமிழ்ச்சொல். இது குறித்து ஏற்கனவே பேச்சு:2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் பக்கத்தில் உரையாடப்பட்டுள்ளது. 2007 இருபது20 துடுப்பாட்ட உலகக்கோப்பை என்பதை இங்கு வழிமாற்றலாம்.--Kanags 08:06, 25 செப்டெம்பர் 2007 (UTC)Reply

தமிழில் கொப்பு என்றால் குழி என்று அடிப்பொருள். கொப்பம் என்பது யானையைப் பிடிப்பதற்கு வெட்டி வைக்கும் பெரும் குழி. நீர் போன்றவற்றை வைத்திருக்க, அல்லது சூடேற்ற பயன்படும் பெரிய கொள்கலனுக்குக் கொப்பரை என்று பெயர்."கொப்பரைல தண்ணி இருக்கா பாரு". தொண்டைக் குழிக்கும், பெண்கள் காதணியில் குழியுள்ள ஓர் அணிக்கும் கொப்பு என்று பெயர். மேலும் கோப்பு என்பது அமைப்பழகைக் குறிக்கும். சீர், பெருமை முதலிவற்றைக் குறிக்கும். கொப்பு -> கோப்பை என்று கொள்வது பொருந்தும். இது தொடர்பாக, முன்னர் Company என்பதைக் கும்பினி என்றார்கள். கும்பினி என்பது தமிழ்ச்சொல்தான். கம்ப்பனி போன்று ஒலிப்பு தரும், ஆனால் தூய தமிழ்ச்சொல். கும்மு, கும்பல், கும்பம், குமுகம், கும்பிடு என்று மிகப்பல சொற்கள் காட்டலாம். இது போலவே, கோப்பை என்பது cup என்பதை ஒத்த தமிழ்ச்சொல். cup என்பதைக் கப்பு என்றே சொல்லலாமே ஏன் கோப்பை என்று அன்று அவர்கள் சொல்லியிருக்க வேண்டும். கிண்ணம் என்பது சிறியது. கோப்பை என்பது பெரியது (இரண்டுமே அழகைக் குறிப்பாய்ச் சுட்டும்).--செல்வா 11:59, 25 செப்டெம்பர் 2007 (UTC)Reply
கோப்பு என்பதன் பொருள் அறிந்து மகிழ்ச்சி. எங்கள் ஊர்ப்பக்கம் கட்டுக்கோப்பு என்ற சொல்லை ஒரு அமைப்பு ஒழுங்கை/ஒழுக்கத்தைக் குறிக்கப் பயன்படுத்துவர்.--சிவகுமார் \பேச்சு 14:17, 5 மார்ச் 2008 (UTC)
Return to "2007 ஐசிசி உலக இருபது20" page.