பேச்சு:2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்

இந்தக் கட்டுரையில் தற்போதுள்ள வடிவமைப்பின்படி இருந்தால், 234 தொகுதிகள் எனும் நிலையில் நீட்சி அதிகமாவதுடன் தொகுதியைக் கண்டறிவதில் சிக்கல் அதிகமாகும். இதை அகரவரிசைப்படி மாற்றியமைத்தால் பார்ப்பதற்கு எளிதாக இருக்கும். கட்டுரையின் மேல் பகுதியில் அகர வரிசைப்பட்டியல் அமைத்தால் நன்றாக இருக்கும். முயற்சிக்கலாமே...?--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 14:59, 17 மார்ச் 2011 (UTC)

ஆங்கில விக்கிப்பீடியாக்களில் மிக நீளமான கட்டுரைகள் அதிகமாக உள்ளன. முடிவுகள் எல்லாவற்றையும் ஒரு பக்கத்திலே தொகுத்தலும் பார்த்தலும் நன்றாயிருக்கும். 234 கட்டுரைகளில் தொகுப்பதைவிட ஒரு கட்டுரையில் தொகுத்து பின் அந்தந்த தொகுதி கட்டுரைகளில் பரணிடுவது எளிதாக இருக்கும். தேடுவது கடினமாக இல்லை. அகர வரிசைப்படியே அமைந்துள்ளது. -- மாகிர் 16:23, 17 மார்ச் 2011 (UTC)

234 கட்டுரைகளில் தொகுக்கப்படாவிட்டாலும் மாவட்டங்கள் அடிப்படையில் கூட தொகுக்கலாமே... மேலும் கட்டுரைகளின் கீழே மாவட்ட வாரியான தொகுதிகளுக்கு ஒரு வார்ப்புருவை உருவாக்கி இணைத்து விடலாம். மாஹிர் நினைத்தால் இது இலகுவாகவும், மாவட்டங்கள் வாரியாகவும், எளிதில் பார்ப்பதற்கு வசதியாகவும் அமையும்... சற்று சிந்தியுங்கள். --தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 17:17, 17 மார்ச் 2011 (UTC)

கட்டுரையின் நீளத்தைக் குறைத்து அகர வரிசைப்படி அமைப்பது தகாது. தொகுதிகளும் ஒரே பக்கத்தில் இருக்க வேண்டும். அகர வரிசைப்படி இருப்பதே போதுமானது ஆகும். --சூர்ய பிரகாசு.ச.அ. 17:28, 17 மார்ச் 2011 (UTC)

தேர்தல் வைப்பு நிதி? -- மாகிர் 18:29, 21 மார்ச் 2011 (UTC)
கட்டுப்பணம் இலங்கையில் பயன்படுத்தப்படும் சொல்.--Kanags \உரையாடுக 21:03, 24 மார்ச் 2011 (UTC)
”வைப்புத் தொகை” தமிழ்நாட்டு ஊடகங்களில் பயன்படுத்தப்படுகிறது. (முன்பணம் என்றால் -advance ஆகிவிடும்)--சோடாபாட்டில்உரையாடுக 04:14, 25 மார்ச் 2011 (UTC)

தொகுதி பட்டியல் அகர வரிசைப்படி இங்கு வேண்டாம், அகரவரிசைப்படி 2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பக்கத்தில் உள்ளது. இங்கு தொகுதி எண் வரிசைப்படி இப்பட்டியல் இருக்கவேண்டும். இந்திய தேர்தல் ஆணையத்தின் தொகுதி மீறு சீரமைப்பு கோப்பில் தொகுதி எண் கொடுக்கப்பட்டுள்ளது. இவை பெரும்பாலும் மாவட்டங்களின் அடிப்படையில் வருகின்றன என்பது கவனிக்கதக்கது. --குறும்பன் 03:29, 23 மார்ச் 2011 (UTC)

ஆமாம் மாவட்ட வரிசைப்படி தொகுப்பது தான் நல்லது. அத்துடன் பக்கத்தையும் பிரிக்கவேண்டும். ஆறு மாவட்டத்திற்கு ஒரு பக்கம் என்கிற வகையில்..-- மாகிர் 09:07, 24 மார்ச் 2011 (UTC)

ஆமாம் மாகிர் நிறைய தொகுத்தல் முடிவதற்குள் மாற்றி விட்டால் நல்லது. 134. அரவக்குறிச்சி, 1.அணைக்கட்டு, 7. ஆற்காடு, ... என்று எதை அடிப்படையாக கொண்டு இவற்றிற்கு எண் கொடுக்கப்பட்டது என்றும் தெரியவில்லை. --குறும்பன் 16:38, 24 மார்ச் 2011 (UTC)

  • மாவட்டம் வாரியாகத் தொகுக்கப்பட வேண்டும் என்கிற முடிவே சரியானது. தற்போது இதற்கான வார்ப்புருவும் உருவாக்கப்பட்டு விட்டது. முதலாவதாக தேனி மாவட்டத்திற்கான பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலுமுள்ள தொகுதிகள் அனைத்தையும் அந்த மாவட்டத்திற்கான பக்கத்தில் கொண்டு வந்து விடுவது நல்லது. கீழே வார்ப்புரு இடம் பெறுவதால் குறிப்பிட்ட மாவட்டத்திற்குச் சென்று பார்வையிடும் வசதி உள்ளது. --தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 17:31, 24 மார்ச் 2011 (UTC)
தனி தனி தொகுப்புகளாக அல்லாமல் சட்டமன்றம், அதன் வரிசை எண், அது எந்த மாவட்டத்தை சேர்ந்தது என்று குறிப்பிட்டால் வேண்டுபவர்கள் சொடுக்கி தேவையான ( வரிசை வேண்டுமா, மாவட்டப்படி வேண்டுமா) சட்டமன்றத்துக்கு செல்லலாம் அல்லவா? --குறும்பன் 17:58, 25 மார்ச் 2011 (UTC)

இந்தப் பக்கத்தின் markup மேம்படுத்தப்பட வேண்டும் தொகு

இந்தப் பக்கத்தின் markup மேம்படுத்தப்பட வேண்டும்.

--Natkeeran 15:58, 15 மே 2011 (UTC)Reply

swing? தொகு

swing =? -- மாகிர் 16:53, 26 மே 2011 (UTC)Reply

Return to "2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" page.