பேச்சு:2011 தமிழ்நாடு நில அபகரிப்பு வழக்குகள்

முன்பு மாவட்டக் குற்றப் பிரிவு காவல்துறையினர் மூலமாக இது போன்ற நில அபகரிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தன. தற்போது அதிமுக ஆட்சிக்கு வந்த பின்பு இந்தக் குற்றப்பிரிவு காவல்துறையின் ஆய்வாளர் தலைமையில் தனிப்பிரிவு அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பிரிவு திமுக ஆட்சிக் காலத்தில் (2006-2011) புகார் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படாத நிலையிலுள்ள வழக்குகளை சிறப்புக் கவனத்துடன் எடுத்துச் செயல்படுத்தி வருகிறது.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 02:05, 23 சூலை 2011 (UTC)Reply

முதல் பத்தி தொகு

விக்கி கட்டுரைகளில் தலைப்பை அப்படியே முதல் சொற்களாக கொடுத்து அந்த கட்டுரையைப் பற்றி அறிமுகம் கொடுக்கப்படுகிறது. தற்போதுள்ள முதல் பத்தி கட்டுரையின் நோக்கத்தை நேரிடையாக வரவில்லை. சுற்றிவளைத்து விளக்குகிறது.

சுப்ரமணி, கட்டுரையில் திருத்துவதாகவோ, சேர்ப்பதாகவோ இருந்தால் தொடர்ச்சியாக செய்யலாம், அதைவிடுத்து தவறு இல்லாத பட்சத்தில் அப்படியே நீக்குவது தமிழ் விக்கி சமூகத்தில் இதுவரை நான் காணவில்லை.

நான் எழுதிய முதல் பத்தி, தமிழ்நாடு நில அபகரிப்பு வழக்குகள் என்பது அதிமுக தலைமையிலான அரசு 2011 ஆம் ஆண்டு பதவியேற்றவுடன் பொதுமக்களிடமிருந்து சட்டத்திற்கு புறம்பாக அபகரிக்கப்பட்ட அல்லது ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்களை உரியவர்களிடமே ஒப்படைப்பதற்காக எடுக்கப்பட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைப் பற்றியதாகும்.

'சில ஆண்டுகளாக நடைபெற்றது' என்பது பரப்புரை போன்று உள்ளது. அதற்கு ஆதாரம் தேவை. -- மாகிர் 05:04, 23 சூலை 2011 (UTC)Reply

முடிந்தவரை கட்டுரை தலைப்புகள் முதற்சொற்களாகவோ அல்லது முதல் வரிக்குள் வருமாறு இருக்க வேண்டும். பொதுக் கட்டுரைகளைப் போல விளக்கத்தில் ஆரம்பித்து, கட்டுரைத் தலைப்புக்கு வரவேண்டாம் (பிற கட்டுரைகளிலும் இதைச் செய்ய வேண்டாம்). அதே போல “கடந்த சில” என்று கால அடிப்படை சொற்களையும் பயன்பற்ற வேண்டாம். 2011 இல் எழுதுவதால் இது பொருந்தும், இன்னும் சில ஆண்டுகள் சென்ற பின்னால் இது பொருந்தாது. எனவே எந்த ஆண்டுகளில் நிகழ்ந்தவை என்பதை எப்போதும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். இதனை “2006-2011 காலகட்டத்தில் ” என்று மாற்றியுள்ளேன். மேலும் கூட “தமிழக அரசு குற்றம் சாட்டியுள்ளது” என்பதைச் சேர்த்துள்ளேன். (அதிமுக சார்பு இருப்பது போலத் தோன்றுவதால்.)--சோடாபாட்டில்உரையாடுக 05:15, 23 சூலை 2011 (UTC)Reply
தமிழ்நாட்டில் நில அபகரிப்பு வழக்குகள் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சிக்கு வந்த பின்புதான் நடைபெறுகிறது என்கிற கருத்து தவறானது. .இது போன்ற வழக்குகள் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் மாவட்டக் குற்றப்பிரிவு காவல்துறையின் மூலம் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்கு ஆதாரமாக;
1 தேனியில் கண்டமனூர் ஜமீன் வாரிசு என்ற பெயரில் சிலர் நில மோசடி செய்த வழக்கு கடந்த ஆண்டு (2010) ஜூலையிலேயே தேனி மாவட்டக் குற்றப்பிரிவுக் காவல்துறையில் பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். ஜமீன் நிலமோசடி வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை (தினமலர் செய்தி பார்க்க)
2.போலி ஆவணம் தயாரித்து நிலமோசடி செய்ததாக தேனி உடையப்பா பொறியியல் கல்லூரி நிர்வாக இயக்குனர் கண்ணப்பன் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர். தேனியிலுள்ள உடையப்பா பொறியியல் கல்லூரி நிர்வாக இயக்குனர் கண்ணப்பன். தேனி நகராட்சி முன்னாள் தலைவராகவும் இருந்துள்ளார். இவர், 2003 ல் கல்லூரியில் பணியாற்றும் 24 பேருக்கு பழனிசெட்டிபட்டி வாசவி காலனியில் தலா இரண்டரை சென்ட் வீதம் நிலம் வாங்கி கொடுத்தார். பின் கல்லூரியில் வேலை செய்யும் 17 பேர் வேறு வேலைகளுக்கு சென்று விட்டனர். இந்நிலையில் கண்ணப்பன், இந்த நிலத்தினை போலி ஆவணம் தயாரித்து தனது பெயருக்கு மாற்றிக் கொண்டார். தன் பெயரில் இருந்த நிலத்தை வேறு நபருக்கு விற்பனை செய்து விட்டார். தற்போது இந்த நிலத்தின் மதிப்பு 40 லட்சம் ரூபாய். நிலத்திற்கு உரிமையாளரான கல்லூரி பணியாளர்கள் இது பற்றி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் தலைமையில் தனி போலீஸ் படை விசாரணை நடத்தி நிலமோசடி செய்ததாக கண்ணப்பன், மற்றும் கல்லூரி பணியாளர்கள் ராஜேஷ்கண்ணன், சுவாமிநாதன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் நான்கு பேரை தேடி வருகின்றனர்.போலி ஆவணம் தயாரித்து நிலமோசடி பொறியியல் கல்லூரி நிர்வாகி கைது (தினமலர் செய்தி பார்க்க)
நீங்கள் தலைப்பை வேண்டுமானால் தமிழ்நாடு நில அபகரிப்பு வழக்குகள் 2011 அல்லது 2011 தமிழ்நாடு நில அபகரிப்பு வழக்குகள்என்று மாற்றிவிடுங்கள்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 10:12, 23 சூலை 2011 (UTC)Reply
Return to "2011 தமிழ்நாடு நில அபகரிப்பு வழக்குகள்" page.