பேதுல்
பேதுல் (Betul) நகரம் இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள பேதுல் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி ஆகும். இந்நகரம் போபால் கோட்டத்திற்கு உட்பட்டது.
பேதுல் | |
---|---|
நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மத்தியப் பிரதேசம் |
மாவட்டம் | பேதுல் |
ஏற்றம் | 658 m (2,159 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,03,330 |
அமைவிடம்
தொகுபேதுல் நகரம் மத்தியப் பிரதேசத்தின் தெற்கில், மகாராட்டிரா மாநிலத்தின் எல்லையில், போபால் - நாக்பூர் நகரங்களுக்கு இடையே அமைந்துள்ளது. இந்நகரின் அமைவிடம் 21°55′N 77°54′E / 21.92°N 77.9°E.[1] ஆகும். இந்நகரானது கடல் மட்டத்திலிருந்து 658 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ளது.
மக்கட்தொகை
தொகு2011 ஆம் ஆண்டின் மக்கட்தொகைக் கணக்கெடுப்பின் படி 34 வார்டுகளும், 22398 குடியிருப்புகளும் கொண்ட பேதுல் நகராட்சியின் மொத்த மக்கட்தொகை 1,03,330 ஆகும்.இதில் ஆண்கள் 52823 பேரும் பெண்கள் 50507 பேரும் அடங்குவர். இந்நகர மக்களின் கல்வியறிவு 76%. மொத்த மக்கட்தொகையில் 6 வயதிற்குட்பட்டவர்கள் 11,185 ( 10.82%). பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 956 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 79.62% ஆகும். இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 12.21% மற்றும் 9.29% ஆக உள்ளனர்.[2]இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 84.56%, இசுலாமியர்கள, 12.24%, சமணர்கள் 1.24%, பௌத்தர்கள் 0.88%, சீக்கியர்கள் 0.33 %, கிறித்தவர்கள் 0.69% மற்றும் பிறர் 0.06% ஆக உள்ளனர்.
பேதுல் தொடருந்து நிலையம்
தொகுசென்னை, பெங்களூர், புனே மற்றும் ஐதராபாத்திலிருந்து வடக்கே தில்லி, லக்னோ, ஜம்முதாவி, வாரணாசி செல்லும் அனைத்து தொடருந்துகளும் பேதுல் நகரத்தில் நின்று செல்கிறது.[3]