பேன்னி லோபசு சிமினெசு

மெக்சிகன் தொல்பொருள் ஆய்வாளர்

பேன்னி லோபசு சிமினெசு (Fanny López Jiménez) மெக்சிகன் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஆவார். இவர் டக்சுட்லா குட்டிரெசு, சியாபாசு என்னும் ஊரில் 1970 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் பாலென்குவில் ஊரில் தனது அகழ்வாராய்ச்சிக்காக அறியப்படுகிறார். இதில் சிவப்பு ராணியின் கல்லறையின் கண்டுபிடிப்பும் அடங்கும். [1]

சிவப்பு ராணியின் முகமூடி.

லோபசு சிமினெசு மெக்சிகோ நகரத்தில் உள்ள தேசிய மானுடவியல் மற்றும் வரலாற்றுப் பள்ளியில் தொல்லியல் படித்தார். இவர் தனது முதல் களப்பணியை கமிட்டான் அருகே உள்ள லகார்டெரோ என்னும் இடத்தில் முடித்தார். சிறிது காலத்திற்குப் பிறகு, 1991 ஆம் ஆண்டு, வடக்கு எல் பலாசியோவில் உள்ள பாலென்க்யூவில் அகழ்வாராய்ச்சி நடைமுறைகளை மேற்கொண்டார். சிவப்பு ராணியின் எச்சங்கள் 1994 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதியன்று [2] கோயில் 13வது உள் கட்டமைப்பில் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் ஆராய்ச்சிக்குப் பிறகு, லோபசு சிமினெசு தான், முன்னர் அறியப்படாத பெண்ணின் அடையாளம் கன் கே ஆன்லியம், "செனோரா 1 டெலரானா" ("லேடி 1 கோப்வெப்") என்று தனது "குயின் எசு லா ரெய்னா ரோசா?" (சிவப்பு ராணி யார்?) என்ற கட்டுரையில் ஆர்கியோலாசியா மெக்சிகானா என்ற நூலில்முன்மொழிந்தார். . [3]

லோபசு சிமினெசு கெக்டர் எசுகோபரை மணந்தார்.

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேன்னி_லோபசு_சிமினெசு&oldid=4108556" இலிருந்து மீள்விக்கப்பட்டது