பேபி ஆல்தெர்
பேபி ஆல்தெர் (Baby Halder) (அல்லது ஹல்தார் ) (பிறப்பு 1973) இந்தியாவைச் சேர்ந்த எழுத்தாளர் ஆவார். இவரது மிகவும் புகழ்பெற்ற படைப்பு இவரது சுயசரிதை ஆலோ அந்தாரி (ஒரு வாழ்க்கை குறைவான சாதாரணமானது) (2002), இது ஒரு வீட்டுப் பணியாளராக வளர்ந்து வரும் அவரது கடுமையான வாழ்க்கையை விவரிக்கிறது, [1] [2] பின்னர் 13 வெளிநாட்டு மொழிகள் உட்பட 21 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. [3]
ஆரம்பகால வாழ்க்கையும் திருமணமும்
தொகுபேபி ஆல்தெர் காஷ்மீரில் பிறந்தவர், முர்சிதாபாத்தில் தனது 4 வது வயதில் தனது தாயால் கைவிடப்பட்டார். அப்போது இவரது தந்தையின் பழக்கமான குடிப்பழக்கம் இவரது தாயை இவரை விட்டு வெளியேற கட்டாயப்படுத்தியது. அதைத் தொடர்ந்து, முன்னாள் ராணுவ வீரரும் ஓட்டுநருமான தந்தையிடமும், தனது மாற்றாந்தாயிடமும் வளர்ந்தார். இவர்கள் குடும்பம் காஷ்மீரிலிருந்து முர்சிதாபாத்திற்கும், இறுதியாக மேற்கு வங்கத்தின் துர்காபூருக்கும் பயணம் செய்து. இத்ன் காரணமாக இவரது பள்ளிக்கல்வி தொடர்ச்சியாக இல்லை . மேலும் ஆறாவது வகுப்பிலேயே கல்வி தடைப்பட்டது. தனது 12 வது வயதில், அவரது தந்தை இவரைவிட 12 வயது மூத்தவரான ஒரு பகுதி நேர அழகுபடுத்துபவர் ஒருவரை திருமணம் செய்து வைத்தார். [4] தனது 13 வது வயதில் தனது முதல் குழந்தையைப் பெற்றார். மேலும் இரண்டு குழந்தைகளை அடுத்தடுத்து பெற்றெடுத்தார். இவர் சில வீடுகளில் வேலைக்காரியாக வேலை செய்ய ஆரம்பித்தார். இறுதியாக 1999இல், 25 வயதில், பல வருட குடும்ப வன்முறைக்குப் பிறகு, தன் கணவனை விட்டு, தில்லிக்கு தன் மூன்று குழந்தைகளுடன் தப்பிச் சென்றார். அவர் தனது குழந்தைகளுக்கு ஆதரவளிப்பதற்கும் கல்வி கற்பதற்கும் புதுடெல்லி வீடுகளில் ஒரு வீட்டு வேலைக்காரியாக வேலை செய்யத் தொடங்கினார். பின்னர் பல பாலியல் சுரண்டல்களை எதிகொண்டார்.[5]
இலக்கிய வாழ்க்கை
தொகுஇவரது கடைசி முதலாளியும், எழுத்தாளரும், ஓய்வுபெற்ற மானுடவியல் பேராசிரியருமான பிரபோத் குமார், புகழ்பெற்ற இந்தி இலக்கியவாதி பிரேம்சந்தின் தலைநகர் புதுடெல்லியின் புறநகர்ப் பகுதியான குருகிராமத்தில் வசிக்கிறார். இவர் பேபி ஆல்தர் தனுடைய புத்தக அலமாரிகளை சுத்தம் செய்யும்போது புத்தகங்களில் இவரது ஆர்வத்தைக் கண்டு, இவரை முன்னணி எழுத்தாளர்களை வாசிக்க ஊக்குவித்தார்.[5] தஸ்லிமா நசுரீனின் சுயசரிதை அமரா மெய்பெலா (எனது பெண்மை) புத்தகம் இவருக்கு ஒரு திருப்புமுனையாக மாறியது. ஏனெனில் இது இவருடைய சொந்த நினைவுகளை ஊக்குவிப்பதாக இருந்தது. இவர் விரைவில் ஆர்வத்துடன் மற்ற ஆசிரியர்களைப் படிக்கத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து, தென்னிந்தியாவிற்குச் செல்வதற்கு முன், பிரபோத் குமார் இவரை தன் வாழ்க்கைக் கதையை எழுத ஊக்குவித்தார்.
பல மாதங்களுக்குப் பிறகு, அவரது நினைவுக் குறிப்புகள் முடிந்ததும், குமார் கையெழுத்துப் பிரதியைத் திருத்த உதவினார், உள்ளூர் இலக்கிய வட்டத்துடன் பகிர்ந்து அதை இந்தியில் மொழிபெயர்த்தார். இந்த பதிப்பு 2002 இல் ஒரு சிறிய கொல்கத்தாவைச் சேர்ந்த வெளியீட்டு நிறுவனமான ரோஷனி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. ஆசியாவில் வீட்டு வேலைக்காரர்கள் நடத்திய கடினமான வாழ்க்கையை ஆவணப்படுத்தியதால் அது ஊடக கவனத்தைப் பெற்றது, மேலும் இரண்டு வருடங்களுக்குள் அது மேலும் இரண்டு பதிப்புகளை வெளியிட்டது. [5] வங்காள அசல், அலோ அந்தாரி (ஒளி மற்றும் இருள்) 2004இல் வெளியிடப்பட்டது. மலையாள பதிப்பு 2005இல் வெளிவந்தது. ஆங்கில மொழிபெயர்ப்பு 2006இல் வெளியிடப்பட்டது. இது இந்தியாவில் அதிகம் விற்பனையானது, நியூயார்க் டைம்ஸ் அதை இந்தியாவின் ஏஞ்சலாஸ் ஆஷஸ் என்று அழைத்தது. விரைவில் இது பிரெஞ்சு, யப்பான், கொரியன் உட்பட 13 வெளிநாட்டு மொழிகள் உட்பட 21 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Amelia Gentleman. "In India, a Maid Becomes an Unlikely Literary Star". https://www.nytimes.com/2006/08/02/books/02maid.html?_r=1&oref=slogin.
- ↑ Ray, Raka; Qayum, Seemin (2009). Cultures of Servitude: Modernity, Domesticity, and Class in India. Stanford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 080477109X.
- ↑ "Baby's day out in Hong Kong". http://www.dnaindia.com/world/report_baby-s-day-out-in-hong-kong_1085823.
- ↑ "The Diary of Baby Haldar". Outlook. 24 February 2003.
- ↑ 5.0 5.1 5.2 "The Diary of Baby Haldar". Outlook. 24 February 2003."The Diary of Baby Haldar". Outlook. 24 February 2003.
வெளி இணைப்புகள்
தொகு- In India, a Maid Becomes An Unlikely Literary Star. The New York Times, 2 August 2006
- Woman’s story Frontline, Jan/Feb 2008