பேரியம் பர்மாங்கனேட்டு
பேரியம் பர்மாங்கனேட்டு (Barium permanganate) என்பது BaMn2O8 என்ற மூலக்கூறு வாய்பாடுடன் கூடிய ஒரு வேதியியல் சேர்மமாகும்[1].
இனங்காட்டிகள் | |
---|---|
7787-36-2 | |
EC number | 232-110-1 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 24587 |
| |
பண்புகள் | |
BaMn2O8 | |
வாய்ப்பாட்டு எடை | 375.198 கி/மோல் |
தோற்றம் | அடர் கருநீல முதல் பழுப்பு வரையான படிகங்கள் |
மணம் | மணமற்றது |
அடர்த்தி | 3.77 g/cm3 |
உருகுநிலை | 200 °C (392 °F; 473 K) |
62.5 கி/100 மி.லி (29 °செல்சியசு) | |
கரைதிறன் | ஆல்ககாலில் சிதைகிறது |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | சாய் சதுரம் |
தீங்குகள் | |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய நேர் மின்அயனிகள் | மக்னீசியம் பர்மாங்கனேட்டு இசுடிரான்சியம் பர்மாங்கனேட்டு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுஒரே நேரத்தில் நிகழும் ஒடுக்க-ஏற்ற வேதிவினைகள் காரணமாக மென்மையான அமிலக் கரைசலில் பேரியம் மாங்கனேட்டு விகிதச்சமமற்று பிரிவதால் பேரியம் பர்மாங்கனேட்டு தோன்றுகிறது[2]. வலிமையான ஆக்சிசனேற்றிகளைக் கொண்டு பேரியம் மாங்கனேட்டை ஆக்சிசனேற்றம் செய்தும் பேரியம் பர்மாங்கனேட்டை தயாரிக்கலாம். பேரியம் மாங்கனேட்டின் நீர்த்த கரைசலில்ல் செயல்முறை மெதுவாக நிகழ்வதன் காரணம் மாங்கனேட்டின் குறைவான கரையும் தன்மையைச் சார்ந்திருக்கிறது[2].
வினைகள்
தொகுபேரியம் பர்மாங்கனேட்டு கரைசலுடன் நீர்த்த கந்தக அமிலத்தைச் சேர்ப்பதன் மூலம் பர்மாங்கனிக் அமிலம் தயாரிக்க முடியும். கரைசலில் கரையாத உடன் விளை பொருளான பேரியம் சல்பேட்டு வடிகட்டல் முறையில் பிரிக்கப்படுகிறது[2].
- BaMn2O8 + H2SO4 → 2 HMnO4 + BaSO4
வினையில் சேர்க்கப்படும் கந்தக அமிலம் கண்டிப்பாக நீர்த்த அமிலமாக இருக்க வேண்டும். அடர்த்தியான கந்தக அமிலத்துடன் பர்மாங்கனேட்டு வினை புரிந்தால் நீரிலியான மாங்கனீசு எப்டாக்சைடு உருவாகிவிடும்.