பேரியம் மெட்டாபாசுப்பேட்டு
பேரியம் மெட்டாபாசுப்பேட்டு (Barium metaphosphate) Ba(PO3)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நிறமற்ற திண்மமாகக் காணப்படும் இச்சேர்மம் தண்ணீரில் கரையாது. அமிலக் கரைசல்களில் இது கரையும் என்றாலும் மிக மெதுவாகவே கரையும்.[3] Ba2+ நேர்மின் அயனிகள் ((PO3−)n) பாலிபாசுப்பேட்டு எதிர்மின் அயனிகளுடன் சேர்ந்து பேரியம் மெட்டாபாசுப்பேட்டு சேர்மம் உருவாவதாக எக்சுகதிர் படிகவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பல நீரேற்றப்பட்ட வடிவங்கள் அறியப்படுகின்றன, அவை உண்மையில் வளைய மெட்டாபாசுப்பேட்டுகளாகும். Ba2(P4O12)·3.5H2O, Ba3(P3O9)2·6H2O.[4]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
பேரியம்(2+); ஈராக்சிடோ(ஆக்சோ)பாசுப்பேனியம்
| |
இனங்காட்டிகள் | |
13762-83-9 | |
ChemSpider | 2341276 |
EC number | 237-362-6 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 3084168 |
| |
பண்புகள் | |
Ba(PO3)2 | |
வாய்ப்பாட்டு எடை | 295.27 கி/மோல் |
தோற்றம் | தூள்[1] |
அடர்த்தி | 3.63 கி/செ.மீ3 |
உருகுநிலை | 1,560[2] °C (2,840 °F; 1,830 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுமெட்டாபாசுபாரிக் அமிலத்துடன் பேரியம் கார்பனேட்டைச் சேர்த்து வினை புரியச் செய்வதன் மூலம் பேரியம் மெட்டாபாசுப்பேட்டை தயாரிக்கலாம்:[4]-
- BaCO3 + 2HPO3 → Ba(PO3)2 +CO2 +H2O
அல்லது மாற்றாக பேரியம் குளோரைடு மற்றும் சோடியம் மெட்டாபாசுபேட்டு ஆகியவற்றின் நீர்த்த நிலை வினையின் மூலமும் இதை தயாரிக்கலாம்:[4]-
BaCl2(aq) + 2NaPO3(aq) → Ba(PO3)2 + 2NaCl
பயன்கள்
தொகுசோடியம் மற்றும் பேரியம் பாலிபாசுப்பேட்டு ஆகியவற்றின் கலவையானது உயர் வெப்ப விரிவாக்க குணகமும், குறைந்த உருகுநிலையும் கொண்ட கண்ணாடியை உருவாக்குகிறது. பேரியம் உள்ளடக்கம் அதிகமானால் கண்ணாடியின் உருகுநிலையும் அதிகரிக்கிறது. இந்த கண்ணாடி அலுமினியம் (உருகுநிலை 650 ° செல்சியசு) போன்ற குறைந்த உருகுநிலை கொண்ட உலோகங்களுடன் சேர்ந்து முத்திரைகள் தயாரிக்க உருவாக்குகிறது. சாதாரண போரோசிலிகேட்டு கண்ணாடிகள் அலுமினியத்தின் உருகுநிலைக்கு மேல் மென்மையாகின்றன. ஈரமோமோனியம் பாசுப்பேட்டு, சோடியம் கார்பனேட்டு மற்றும் பேரியம் கார்பனேட்டு ஆகியவற்றின் கலவையை சூடாக்குவதன் மூலம் இந்த சேர்மம் தயாரிக்கப்படுகிறது.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ Elements, American. "Barium Metaphosphate". American Elements. பார்க்கப்பட்ட நாள் 17 April 2018.
- ↑ "BARIUM METAPHOSPHATE - 13762-83-9". www.chemicalbook.com. பார்க்கப்பட்ட நாள் 17 April 2018.
- ↑ "Barium Metaphosphate". Chemical Book. 2017. பார்க்கப்பட்ட நாள் November 27, 2017.
- ↑ 4.0 4.1 4.2 Ropp, Richard (2012). Encyclopedia of the Alkaline Earth Compounds. Newnes. p. 76. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0444595539.
- ↑ Wilder Jr., J.A. "Glasses and glass ceramics for sealing to aluminum alloys" Journal of Non-Crystalline Solids Volume 38-39, Issue PART 2, May 1980, Pages 879-884. Hart, Patricia E.; Mesko, Melissa G.; Shelby, James E. "Crystallization and phase equilibrium in the sodium barium metaphosphate system" Journal of Non-Crystalline Solids (2000), 263&264, 305-311. எஆசு:10.1016/S0022-3093(99)00642-0