பேவநத்தம் மலை

கிருஷ்ணகிரி மாவட்ட மலை

பேவநத்தம் மலை (Bevanatham Hills) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், கிருட்டிணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், பேவநத்தம் என்ற ஊருக்கு அருகில் உள்ள ஒரு மலைக் குன்றாகும். இது கடல் மட்டதிலிருந்து 1100 மீட்டர் உயரமானது என்று கூறப்படுகிறது. இந்த மலை உச்சியில் பெரும் காற்பாறை ஒன்று செங்குத்தாக உள்ளது. அந்தப் பாறையானது அந்த மலையை தனித்து அடையாளம் காணும்படி உள்ளது. இந்த மலை செங்குத்தானதாகவும், வழுக்குப் பாறைகள் கொண்டதாகவும் உள்ளது. மலையில் ஏற வழி நெடுக்க பதிக்கபட்டுள்ள இரும்புக் குழாய்களை பிடித்தபடிதான் ஏறவேண்டி இருக்கும். இந்த மலை வனப்பகுதியில் அமைந்துள்ளது. இது யானைகள் நடமாட்டமுள்ள பகுதியாகும்.[1]

பேவநத்தம் மலை
மலையில் உள்ள சிவ சிவநஞ்சுண்டேஸ்ரர் கோயில் பகுதியில் கற் பலகையில் உள்ள சிற்பம்
மலையில் உள்ள சிவ சிவநஞ்சுண்டேஸ்ரர் கோயில் பகுதியில் கற் பலகையில் உள்ள சிற்பம்

மலையில் செங்குத்து பாறைக்கு அருகில் பழமையான சிவ சிவநஞ்சுண்டேஸ்ரர் கோயில் அமைந்துள்ளது. சிவராத்திரி அன்று மலைமீது உள்ள சிவனை வழிபட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சென்று வழிபடுகின்றனர். அச்சமயம் தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மூன்று மாநில பக்தர்கள் திரளாக வந்து தரிசனம் செய்கின்றனர்.[2] இங்கு நான்கைந்து கற்களைக் கொண்டு கோயிலாக நினைத்த கட்டி வழிபட்டால் வீடுகட்டும் யோகம், பிள்ளைச் செல்வம், திருமணத் தடை நீங்குதல் போன்றவை நடக்கும் என்ற நம்பிக்கை பக்தர்களிடேயே உள்ளது.[3]

குறிப்புகள்

தொகு
  1. "கர்ப்பிணிக்காக சென்ற ஆம்புலன்சை மறித்தது யானை, செய்தி [[தினகரன் (இந்தியா)|தினகரன்]], 2013 சனவரி 28 பார்த்த நாள் 2021 மார்ச் 15". Archived from the original on 2013-01-30. பார்க்கப்பட்ட நாள் 2021-03-15.
  2. பேவநத்தம் சிவநஞ்சுண்டேஸ்வர சுவாமி மலைக்கோயிலில் சிவராத்திரி சிறப்பு பூஜை, செய்தி, இந்து தமிழ் 2021 மார்ச் 12
  3. கற்கோயில் கட்டி வழிபட்டால் நினைத்த காரியங்கள் கைகூடும், தினகரன், 2016 நவம்பர் 7 பார்த்த நாள் 2021 மார்ச் 15[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேவநத்தம்_மலை&oldid=3716289" இலிருந்து மீள்விக்கப்பட்டது