பைஜேந்திர சிங்
இந்திய அரசியல்வாதி
சவுத்ரி பைஜேந்திர சிங் (Bijendra Singh; பிறப்பு 25 திசம்பர் 1956) ஓர் இந்திய அரசியல்வாதியும் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினரும் ஆவார். இவர் 2004ஆம் ஆண்டு இந்தியப் பொதுத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் வேட்பாளாராக அலிகார் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார்.[1] இவர் இக்லாசு தெகசில் அருகே உள்ள தோண்டா கிராமத்தில் வசிக்கிறார். அலிகரால் உள்ள இக்லாசு சட்டமன்றத் தொகுதியிலிருந்து ஐந்து முறை உத்தரப் பிரதேசச் சட்டமன்ற உறுப்பினராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2024ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இவர் சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.[2]
பைஜேந்திர சிங் | |
---|---|
இந்திய மக்களவை உறுப்பினர் | |
பதவியில் மே 2004 – மே 2009 | |
முன்னையவர் | சீலா கௌதம் |
பின்னவர் | இராஜ் குமாரி சவுகான் |
தொகுதி | அலிகர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 25 திசம்பர் 1956 அலிகர், உத்தரப் பிரதேசம், இந்தியா |
அரசியல் கட்சி | சமாஜ்வாதி கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | இராகேசு செளத்ரி |
பிள்ளைகள் | 2 மகள்கள் |
வாழிடம் | அலிகர் |
As of 22 செப்டம்பர், 2006 மூலம்: [1] |
மேற்கோள்கள்
தொகு- ↑ Centre, National Informatics (2024-09-17). "Digital Sansad". Digital Sansad (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-09-17.
- ↑ https://myneta.info/ls2014/candidate.php?candidate_id=680