சீலா கௌதம் (Sheela Gautam)(15 நவம்பர் 1931 - 8 சூன் 2019) என்பவர் இந்திய பில்லியனர் அரசியல்வாதி மற்றும் தொழிலதிபர் ஆவார்.[1] இவர் சீலா பஞ்சு நிறுவன நிறுவனர் மற்றும் உரிமையாளர் ஆவார். இவரது மகன் ராகுல் கௌதம் தற்பொழுது இந்நிறுவனத்தினை நடத்துகிறார். இந்நிறுவனம் மற்றவற்றுடன் ஸ்லீப்வெல் வணிக முத்திரையின் கீழ் மெத்தைகளை விற்பனை செய்கிறது.[2][3] பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினரான இவர் இந்தியாவின் 10, 11, 12 மற்றும் 13வது மக்களவைகளில் உறுப்பினராக இருந்தார்.சீலா கௌதம் சூன் 1991 முதல் மே 2004 வரை 13 ஆண்டுகள் உத்தரப்பிரதேசத்தின் அலிகார் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4] இவர் பிரபல சுதந்திரப் போராட்ட வீரர் மறைந்த மோகன் லால் கவுதமின் மகள் ஆவார். 

சீலா கௌதம்
Sheela Gautam
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில்
சூன் 1991 – மே 2004
முன்னையவர்உஷா ராணி தோமர்
பின்னவர்பைஜேந்திர சிங்
தொகுதிஅலிகார்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1931-11-15)15 நவம்பர் 1931
அலிகர், பிரித்தானிய இந்தியாவின் ஐக்கிய மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு8 சூன் 2019(2019-06-08) (அகவை 87)
புது தில்லி, இந்தியா
குடியுரிமைஇந்தியர்
தேசியம்இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்ஹெச். எசு. கௌதம்
பிள்ளைகள்1, மகன் & 1 மகள்
வாழிடம்(s)அலிகார், உத்தரப் பிரதேசம் & புது தில்லி
முன்னாள் கல்லூரிலக்னோ பல்கலைக்கழகம்
வேலைஅரசியல்வாதி, தொழிலதிபர்

இளமையும் கல்வியும்

தொகு

சீலா கௌதம் கபானா அலிகார் மாவட்டத்தில் பிராமண குடும்பத்தில் பிறந்தார். [5] இவரது பெற்றோர் இந்தியச் சுதந்திர ஆர்வலர் பண்டிட். மோகன் லால் கெளதம் மற்றும் திரௌபதி கௌதம் ஆவர். இந்த நேரத்தில், பிரித்தானியப் பேரரசு இந்தியாவை ஆக்கிரமித்ததால், இவர் பல இடங்களில் தனது வாழ்க்கையைக் கழித்தார். இவர் லக்னோ பல்கலைக்கழகத்தில் (உத்தரப்பிரதேசம்) இளங்கலை, இளம் கல்வியியல் மற்றும் நிர்வாகத்தில் பட்டயப் படிப்பினை முடித்தார்.

திருமணம்

தொகு

சீலா கௌதம் எச். எசு. கௌதம் ஆவார். இவர் படையணித் தலைவர் ஆவார். புற்றுநோயால் உயிரிழந்தார்.

அரசியல் வாழ்க்கை

தொகு

சீலா கௌதம் இந்தியத் தேசிய காங்கிரசு அரசியலில் சேர்ந்தார். ஆனால் காங்கிரசிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். 10, 11, 12 மற்றும் 13வது இந்திய நாடாளுமன்ற மக்களவையின் உறுப்பினராக 1991 முதல் 2004 வரை தொடர்ந்து பதவியை வகித்தார். அலிகார் மக்களவைத் தொகுதியிலிருந்து அதிக காலம் மக்களவை உறுப்பினராக இருந்தவர் என்ற சாதனையை இவர் படைத்துள்ளார். மே 2004 தேர்தலில் சீலா கௌதம் இந்தியத் தேசிய காங்கிரசு வேட்பாளர் பிஜேந்திர சிங்கிடம் 2800 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. "Sleepwell founder, ex-MP Sheela Gautam dead at 88". Business Standard. பார்க்கப்பட்ட நாள் 15 January 2021.
  2. "Sheela Gautam" (in en). https://www.forbes.com/profile/sheela-gautam. 
  3. "Sheela Foam Limited: Private Company Information". Bloomberg.com. பார்க்கப்பட்ட நாள் 2018-08-22.
  4. "Parliamentary Constituency In Aligarh". aligarh.net.in. Archived from the original on 2014-08-19. பார்க்கப்பட்ட நாள் 2018-08-22.
  5. University, Sheela Bhatt at the Aligarh Muslim. "Reading the Muslim mind in UP and Bihar". Rediff (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-01-15.
  6. "Uttar Pradesh Loksabha Election Constituency wise Results". www.rediff.com. பார்க்கப்பட்ட நாள் 2020-03-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீலா_கௌதம்&oldid=3686956" இலிருந்து மீள்விக்கப்பட்டது