பைதிகொண்டல மாணிக்யாலராவு
இந்திய அரசியல்வாதி
பைதிகொண்டல மாணிக்யாலராவு (Pydikondala Manikyala Rao) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1961 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் தேதியன்று இவர் பிறந்தார். தாடேபல்லிகூடம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2014 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் வரை ஆந்திரப் பிரதேசத்தின் அறநிலையத்துறை அமைச்சராகவும் இருந்தார்
பைதிகொண்டல மாணிக்யாலராவு Pydikondala Manikyala Rao | |
---|---|
அற்நிலையத்துறை அமைச்சர் | |
பதவியில் மே 2014 – மார்ச்சு 2018 | |
தொகுதி | தாடேபல்லிகூடம் சட்டமன்றத் தொகுதி |
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை உறுப்பினர் | |
பதவியில் மே 2014 – மே 2019 | |
தொகுதி | தாடேபல்லிகூடம் சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ஆந்திரப் பிரதேசம், இந்தியா | 1 நவம்பர் 1961
இறப்பு | 1 ஆகத்து 2020 விசயவாடா, இந்தியா | (அகவை 58)
அரசியல் கட்சி | பாரதிய சனதா கட்சி |
மந்திரி சபை | ஆந்திரப் பிரதேச அரசு |
ஆந்திரப் பிரதேச அரசியலில் இவர் பாரதிய சனதா கட்சியின் உறுப்பினராகச் செயல்பட்டார்.[1][2][3] இந்தியாவில் கோவிட்டு-19 தொற்றுநோய் காலத்தின் போது கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டு விசயவாடாவில் உள்ள மருத்துவமனையில் ராவு 2020 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் முதல் தேதியன்று இறந்தார்.[4][5][6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Elections 2014 :: Andhra Pradesh::Telangana ::INDIA:: Elections 2014 Results:: Results". sakshi.com. பார்க்கப்பட்ட நாள் 13 July 2015.
- ↑ "VIP darshan issues will be reviewed : Manikyala Rao". தி இந்து. 14 June 2014. http://www.thehindu.com/news/national/andhra-pradesh/vip-darshan-issues-will-be-reviewed-manikyala-rao/article6112174.ece. பார்த்த நாள்: 13 July 2015.
- ↑ ":: Council of Ministers ::". Government of Andhra Pradesh. Archived from the original on 8 October 2013. பார்க்கப்பட்ட நாள் 13 July 2015.
- ↑ "Senior BJP leader and former Andhra minister P Manikyala Rao succumbs to COVID-19". The New Indian Express.
- ↑ "Senior BJP leader and former Andhra minister P Manikyala Rao succumbs to COVID-19". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 1 August 2020. பார்க்கப்பட்ட நாள் 1 August 2020.
- ↑ "Former Andhra Minister P Manikyala Rao succumbs to Covid-19". NetIndian. 1 August 2020. பார்க்கப்பட்ட நாள் 1 August 2020.