பைரவி (ராகம்)
பைரவி 20வது மேளகர்த்தா இராகமாகிய, "வேத" என்றழைக்கப்படும் 4வது சக்கரத்தின் 2வது மேளமாகிய நடபைரவியின் ஜன்னிய இராகம் ஆகும். இது ஒரு பழைமையான இராகம். பண்டைய தமிழிசைப் பண்களில் கெளசிகம் என்னும் பெயருடன் அழைக்கப்படுகிறது.[1]
இலக்கணம்
தொகுஆரோகணம்: | ஸ ரி2 க2 ம1 ப த2 நி2 ஸ் |
அவரோகணம்: | ஸ் நி2 த1 ப ம1 க2 ரி2 ஸ |
- இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), சாதாரண காந்தாரம் (க2), சுத்த மத்திமம (ம1), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த2), கைசிகி நிஷாதம (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன, மற்றும் சுத்த தைவதம் (த1) அவரோகணத்தில் வருகின்றது.
- இது ஒரு ஜன்னிய சம்பூர்ண இராகம ஆகும். இது பாஷாங்க இராகம ஆகும் (சதுஸ்ருதி தைவதம், த2, ஆரோகணத்தில் அன்னிய ஸ்வரம்).
- இது ஒரு புராதன இராகம் ஆகும். எல்லா உருப்படி வகைகளையும் இந்த இராகத்தில் காணலாம்.
- இது ஒரு வர்ணனைக்குரிய இராகம் ஆகும்.
- மனிதவர்க்கத்துக்கு தெரிந்த மிகப் பழைய இராகம் இது ஆகும்.
- வர்ணம் : " விரிபோனி " - அட - பச்சிமிரியம் ஆதியப்பையர்
- வர்ணம் : " அமிழ்தினும் இனிமையாய் " - ஆதி - கோமதி சங்கரய்யர்
- கிருதி : " பால கோபால " - ஆதி - முத்துசாமி தீட்சிதர்
- கிருதி : " பாலகோபால " - ஆதி - முத்துசாமி தீட்சிதர்
- கிருதி : " சிந்தயமாம் " - ரூபகம்- முத்துசாமி தீட்சிதர்
- கிருதி : " கொலுவையுன்னாடே " - ஆதி - தியாகராஜ சுவாமிகள்
- கிருதி : " உபசாரமு ஜேசே " - ரூபகம் - தியாகராஜ சுவாமிகள்
- கிருதி : " யாரோ இவர் யாரோ " - ஆதி - அருணாசலக் கவிராயர்
- பதம் : " வேலவரே உம்மைத்தேடி " - ஆதி - கானம் கிருஷ்ணையர்
- கீதம் : " கருணையே வடிவுடைய " - மிஸ்ர ஜம்பை - பெரியசாமித் தூரன்
- தேவாரம் : " காதலாகி " - மிஸ்ரசாபு - திருஞானசம்பந்தர்
- சுவரஜதி: " காமாட்சி " - மிஸ்ரசாபு - சியாமா சாஸ்திரி
திரையிசைப் பாடல்கள்
தொகு- திருப்பாற் கடலில் பள்ளி :- ஸ்வாமி அய்யப்பன்
ஆதாரங்கள்
தொகு- ↑ அ. கி. மூர்த்தி (1998). சைவ சித்தாந்த அகராதி. சென்னை: திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட். p. 161.
- ↑ டாக்டர். கே. ஏ. பக்கிரிசாமிபாரதி எழுதிய 'இந்திய இசைக்கருவூலம்' எனும் நூல் (மூன்றாம் பதிப்பு, செப்டம்பர் 2006); வெளியீடு: குசேலர் பதிப்பகம், சென்னை - 78.