பைரா மால்
பைரா மால் (Paira Mall) இந்தியாவைச் சேர்ந்த ஒரு மருத்துவர் ஆவார். 1874 ஆம் ஆண்டு முதல் 1957 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் இவர் வாழ்ந்தார். ஒரு மொழியியலாளராகவும் இலண்டனில் உள்ள என்றி வெல்கமின் வரலாற்று மருத்துவ அருங்காட்சியகத்தின் சேகரிப்பாளராகவும் அறியப்பட்டார். [1]
சுயசரிதை
தொகுஇந்தியாவில் பிறந்த மால், ருசோ-சப்பானியப் போரில் (1904-1905) இராணுவ அறுவை சிகிச்சை நிபுணராகப் பணியாற்றினார். செருமன், பிரெஞ்சு, இத்தாலியன், சமசுகிருதம், பாரசீகம், இந்தி, பஞ்சாபி, அரபு மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் சரளமாகப் பேசக்கூடியவராக இருந்தார்.
1911 ஆம் ஆண்டு , இலண்டனில் உள்ள என்றி வெல்கம் வரலாற்று மருத்துவ அருங்காட்சியகத்திற்கு இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆயுர்வேத மருத்துவத்தின் கலை மற்றும் அறிவியலைக் காட்டும் பொருட்களை தெற்காசியாவிலிருந்து சேகரிப்பது இவரது பணியாகும். ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படும் மருத்துவ தாவரங்களைச் சேகரிப்பதற்காகவும் இவர் நியமிக்கப்பட்டார். இங்கிலாந்தில் இருந்த ஆய்வகங்களின் கையெழுத்துப் பிரதிகளை நகலெடுத்து மொழிபெயர்த்ததன் மூலம் உள்ளூர் மருத்துவ அறிவையும் மால் பெற்றார். இத்தகைய சேகரிப்புகளை மால் தொடர்ந்து 15 ஆண்டுகளாக சேகரித்தார். [2]
1910 ஆம் ஆண்டு இலண்டனில் நிறுவப்பட்ட இந்திய சங்கத்தின் உறுப்பினராக மால் இருந்தார்.
மரபு
தொகு16 நவம்பர் 2017 முதல் ஏப்ரல் 8, 2018 வரை, வெல்கம் அருங்காட்சியகம் தனது சேகரிப்பில் இருந்த மருத்துவப் பொருட்கள், ஓவியங்கள் மற்றும் கையெழுத்துப் பிரதிகள் உட்பட பைரா மால் சேகரித்த பொருட்கள் "ஆயுர்வேத மனிதன்: இந்திய மருத்துவத்துடன் சந்திப்புகள்" என்ற தலைப்பில் நடைபெற்ற கண்காட்சியில் இடம்பெற்றன. [3] [4] [5] [6] [7] மால் பயணம் செய்த போது வெல்கம் மற்றும் அவரது ஊழியர்களுடன் பைரா மால் எழுதிய எழுத்துப்பூர்வ கடிதப் பரிமாற்றங்களும் இக்கண்காட்சியில் அடங்கும். [4] [5] [6] [8] அப்பல்லோ பத்திரிகை, மாலிடம் இருந்து வரப்பெற்ற கடிதங்கள் "கண்டங்கள் மற்றும் கலாச்சாரங்கள் முழுவதும் மருத்துவ மற்றும் கலாச்சார பாரம்பரியத்தின் இயக்கத்தை கண்டறிய உதவுகின்றன என்று செய்தி வெளியிட்டது.. [9]
மேலும் படிக்க
தொகுபின்வரும் புத்தகங்கள் பைரா மால் மற்றும் அவரது படைப்புகள் பற்றியவை:
- ஆலன், நைகல், பர்ல்ஸ் ஆஃப் தி ஓரியண்ட்: வெல்கம் லைப்ரரியில் இருந்து ஆசிய பொக்கிஷங்கள் (லண்டன்: தி வெல்கம் டிரஸ்ட், 2003)
- ஃபிரைட்லேண்டர், பீட்டர் ஜி., தி WIHM ஹிந்தி கலெக்ஷன்
- லார்சன், பிரான்சிஸ், அன் இன்ஃபினிட்டி ஆஃப் திங்ஸ்: ஹவ் சர் ஹென்றி வெல்கம் கலெக்ட் தி வேர்ல்ட் (ஆக்ஸ்போர்டு: ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பிரஸ், 2009)
- Muñoz, Bárbara Rodríguez, ஆயுர்வேத மனிதர் : இந்திய மருத்துவத்துடன் சந்திப்புகள் (வெல்கம் சேகரிப்பு, 2017)
மேற்கோள்கள்
தொகு- ↑ "Paira Mall | Making Britain".
- ↑ Prasad, Aarathi. "Encounters with Indian medicine". The Lancet 391 (10117): 196–197. doi:10.1016/s0140-6736(18)30025-4. பன்னாட்டுத் தர தொடர் எண்:0140-6736. https://doi.org/10.1016/S0140-6736(18)30025-4.
- ↑ "Ayurvedic Man: Encounters with Indian Medicine". Wellcome Collection. பார்க்கப்பட்ட நாள் 14 April 2021.
16 November 2017—8 April 2018
- ↑ 4.0 4.1 "How Wellcome sent a medicine collector to wander Asia for a decade". https://www.theguardian.com/culture/2017/nov/09/how-wellcome-sent-a-medicine-collector-to-wander-asia-for-a-decade.Kennedy, Maev (November 9, 2017). "How Wellcome sent a medicine collector to wander Asia for a decade". The Guardian. Retrieved 14 April 2021.
- ↑ 5.0 5.1 "Medical encounters between the East and the West". https://www.livemint.com/Leisure/DBtbmoBz7FmVjjM6inqgjK/Cures-beyond-belief.html.Kumar, Tanuj (January 26, 2018). "Medical encounters between the East and the West". LiveMint. Retrieved 14 April 2021.
- ↑ 6.0 6.1 "Ayurvedic Man: Ancient understandings of medicine". https://www.clovemagazine.com/journal/2017/11/29/ayurvedic-man-ancient-understandings-of-medicine.
- ↑ "Ayurvedic Man: Vintage Kashmiri circumciser, anyone?". https://www.thetimes.co.uk/article/ayurvedic-man-vintage-kashmiri-circumciser-anyone-njcnwcjs0.
- ↑ "Ayurveda: The ancient practice that healed with turmeric before it was cool". https://www.independent.co.uk/life-style/food-and-drink/turmeric-ayurveda-india-health-tradition-healing-a8060476.html.
- ↑ "Who owns the heritage of traditional medicine?". https://www.apollo-magazine.com/who-owns-the-heritage-of-traditional-medicine/.