பைலான் கானாங்கோழி
பைலான் கானாங்கோழி [Baillon's crake (Zapornia pusilla)] என்பது ராலிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிறு நீர்ப்பறவை. இது உலகின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாகக் காணப்படுகின்றது. இந்த கானாங்கோழி இனத்திற்கு பிரென்சு இயற்கை ஆர்வலர் லூயி பைலானின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
பைலான் கானாங்கோழி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வரிசை: | |
குடும்பம்: | இராலிடே
|
பேரினம்: | |
இனம்: | Z. pusilla
|
இருசொற் பெயரீடு | |
Zapornia pusilla (பல்லாசு, 1776) | |
Range of Z. pusilla Breeding Resident Non-breeding | |
வேறு பெயர்கள் | |
Porzana pusilla |
உடலமைப்பு
தொகுஇக் கானாங்கோழி காடைகளைச் சற்று பெரிய, நாகணவாயை விட சிறியது. நீளம் -- 17 முதல் 19 cm[2]. மேற்பாகம் நல்ல செம்பழுப்பு நிறம்: அதில் ஆங்காங்கு கருங்கீற்றுகளும் பின்பகுதியில் வெண்புள்ளிகளும் காணப்படும். அடிப்பாகம் வெளிர் நிறம்; மங்கலான பச்சை நிறத்தில் அலகும் கால்களும் இருக்கும்[3]. பெண், ஆண் பெரும்பாலும் ஒரே மாதிரி இருப்பினும், பெண் கோழியின் கண்ணிற்குப் பின் செம்பழுப்பு நிறப் பட்டை இருக்கும்.
பரவலும் வாழ்விடமும்
தொகுபரவல்
தொகுவட அமெரிக்க, தென் அமெரிக்கக் கண்டங்கள், வட/வட மேற்கு ஆப்பிரிக்கா, ரஷ்யா, ஸ்காண்டினேவியா உள்ளிட்ட சில பகுதிகள் நீங்கலாக உலகின் பல்வேறு இடங்களிலும் இவை காணப்படுகின்றன[4]. மத்திய இந்தியா, வடமேற்கு இந்தியா நீங்கலாக இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் இக்கானாங்கோழிகள் தென்படுகின்றன. தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் இவை அதிகமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், இவற்றின் எண்ணிக்கையும் பதிவு செய்யப்படும் நெருக்கமும் குறைவாகவே உள்ளன.
வாழ்விடம்
தொகுஇடம்பெயர்வும் வலசையும்
தொகுஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் இந்திய துணைக் கண்டத்தில் உள்ள பைலான் கானாங்கோழியின் திரள்கள் அங்கேயே வசிப்பவையாக இருந்தாலும் அருகிலிருக்கும் பகுதிகளுக்கு அவை வலசை செல்கின்றன. ஐரோப்பாவிலும் வடக்கு மற்றும் மத்திய ஆசியாவிலும் இருக்கும் கானாங்கோழித் திரள்கள் முழுமையாக வலசை செல்பவை[5].
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2012). "Zapornia pusilla". IUCN Red List of Threatened Species 2012. https://www.iucnredlist.org/details/22692667/0. பார்த்த நாள்: 2 June 2015.
- ↑ "Identification -- Baillon's Crake". பார்க்கப்பட்ட நாள் 15 மே 2021.
- ↑ "Description". Archived from the original on 2021-09-16. பார்க்கப்பட்ட நாள் 15 மே 2021.
- ↑ "Species Map". பார்க்கப்பட்ட நாள் 15 மே 2021.
- ↑ "Movement and migration Patterns". பார்க்கப்பட்ட நாள் 15 மே 2021.