பைலோஸ் சமர்

பெலோபொன்னேசியன் போரின் போது நடந்த கடற்படை சமர்

பைலோஸ் கடற்படை சமர் (Battle of Pylos) என்பது கிமு 425 இல் பெலோபொன்னேசியன் போரின் போது பைலோஸ் தீபகற்பத்தில், இன்றைய மெசேனியாவில் உள்ள நவரினோ விரிகுடாவில் நடந்த ஒரு கடற்படை சமராகும். இதில் எசுபார்த்தாவிற்கு எதிராக ஏதென்சு வெற்றியை ஈட்டியது.

பைலோஸ் சமர்
பெலோபொன்னேசியன் போர் பகுதி
நாள் கிமு 425
இடம் பைலோஸ்
36°55′N 21°42′E / 36.917°N 21.700°E / 36.917; 21.700
ஏதெனியன் வெற்றி
பிரிவினர்
ஏதென்ஸ் எசுபார்த்தா
தளபதிகள், தலைவர்கள்
Demosthenes திராசிமெலிடாஸ்,
Brasidas
பலம்
  • 50 கப்பல்கள்
  • 90 ஹாப்லைட்டுகள்
  • ~540 இலகுரக துருப்புகள்
  • 60 கப்பல்கள்
  • எண்ணிக்கை தெரியாத துருப்புகள்
இழப்புகள்
8 கப்பல்கள் 18 கப்பல்கள்
420 ஹாப்லைட்டுகள் கைதாயினர்

பெலோபொன்னேசியன் போர் துவங்கிய பிறகு எசுபாராத்தாவின் அணியில் இருந்த அரசுகள் அதற்கு தானியங்கள் முதலியவற்றை அனுப்பி உதவி வந்தன. அந்த உதவிகளை தடுக்கவும், அந்த அரசுகளுக்கு நல்ல பாடம் கற்பிக்கவும் ஏதென்சு விரும்பியது. இதற்காக நாற்பது கப்பல்கள் அடங்கிய கப்பற்படையை யூரோமோடன், சோப்போக்கிளீஸ் ஆகிய இருவரின் தலைமையில் சிசிலி தீவுப்பக்கமாக ஏதென்சு அனுப்பியது. இந்தப் படை பெலோபொன்னேசியாவைச் சுற்றிக்கொண்டு மேற்கே பைலோஸ் துறைமுகத்தை நெருங்கியபொழுது கடும் புயலில் சிக்கி பைலோஸ் துறைமுகத்தில் ஒதுங்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளானது. பைலோஸ் துறைமுகத்தின் கேந்திரிய முக்கியத்துவத்தை உணர்ந்த ஏதெனியன் தளபதி டெமோஸ்தீனசின் 'இந்தத் துறைமுகத்தை நல்லபடி அரண் செய்துகொண்டோமானால் இங்கிருந்து நாற்பத்தாறு மைல் தொலைவில் உள்ள எசுபார்த்தாவை தாக்குவது எளிதா இருக்கும்; மெஸ்சியர்களும் நமக்கு உதவிசெய்வார்கள்' என்று படைத் தலைவர்களுக்கு யோசனைக் கூறினார். ஆனால் இதற்கு அவர்கள் இசையவில்லை. ஆனால் புயல் காற்றும் ஓயவில்லை. படையினரும் சும்மா இருந்தனர். அப்படி சும்மா இருந்த பொழுது அவர்களைக் கொண்டு துறைமுகத்தை கோட்டை கொத்தளங்களுடன் அரண் செய்தனர். புயல் ஓய்ந்த பின்னர் கடற்படை அங்கிருந்து புறப்பட்டபோது ஒரு சிறிய படை ஒன்று டெமாஸ்த்தனீஸ் பொறுப்பில் அங்கேயே விட்டுவிட்டுச் சென்றனர். எசுபார்த்தவுக்கு உட்பட்ட இராச்சியங்களில் ஏதெனியன் குடியேற்றத்தை நிறுவும் நோக்கத்துடன் அவை சென்றன. இந்த செய்கை எசுபார்த்தன் தலைமைக்கு அச்சமூட்டியது. மேலும் அகிசின் தலைமையின் கீழ் அட்டிகாவை நாசம் செய்த எசுபார்த்தன் இராணுவம், தங்கள் பயணத்தை முடித்துக் கொண்டு (இந்தப் பயணம் 15 நாட்கள் நீடித்தது) எசுபார்த்தாவை நோக்கி அணிவகுத்துச் சென்றது. பைலோசியஸ் துறைமுகத்தில் ஏதெனிய கப்பற்படை இருப்பதை அறிந்ந எசுபார்த்தா அந்த நேரத்தில்கோர்சிராவில் இருந்த தன் கடற்படை பைலோசு நோக்கி அனுப்பப்பியது.

தளபதி டெமோஸ்தீனஸ் ஐந்து கப்பல்களுடனும் அவற்றின் துணை ராணுவ வீரர்களுடன் பைலோசியசிஸ் துறைமுகத்தில் இருந்தார். மொத்தத்தில், டெமோஸ்தீனசிடம் 600 வீரர்கள் இருந்திருக்கலாம், அவர்களில் 90 பேர் மட்டுமே ஹாப்லைட்டுகள் ஆவர். ஏதெனியன் கடற்படையை இடைமறித்து சாஃபக்கிளீசு மற்றும் யூரிமெடனுக்கு எசுபார்த்தாவின் கடற்படைகளால் தங்களுக்கு ஏற்படவுள்ள ஆபத்தை தெரிவிக்க அவர் இரண்டு கப்பல்களை அனுப்பினார். இதற்கிடையில், எசுபார்த்தன்கள் 43 கப்பல்களையும் ஒரு பெரிய தரைப்படையையுடனும் துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தனர். எண்ணிக்கையில் தன் படைகளை விட அதிகமாக எசுபார்த்தன்கள் இருப்பதைக் கண்ட டெமோஸ்தீனஸ் தன்னிடம் மீதமுள்ள மூன்று கப்பல்களை கரைக்கு மேலே இழுத்து, கைவசம் இருந்த ஆயுதங்களைத் தன் குழுவினருக்கு கொடுத்தார். அவர் தனது படையின் பெரும் பகுதியை தரையில் எதிர்கொள்ளும் வகையில் வலுவான அரண் அமைக்கப்பட்ட இடத்தில் நிறுத்தினார். பின்னர் டெமோஸ்தீனஸ் 60 ஹாப்லைட்டுகள் மற்றும் ஒரு சில வில்லாளர்களைத் தேர்ந்தெடுத்து, எசுபாரத்தன்கள் தங்கள் மீது எங்கு தாக்குதலைத் தொடங்கக்கூடும் என்று எதிர்பார்த்த இடத்தில் நிறுத்தினார். தற்காப்புச் சுவர் மிகவும் பலவீனமாகவும் கடந்து உள்ளே வர மிகவும் பொருத்தமான நிலப்பகுதியாக இருக்கும் தீபகற்பத்தின் தென்மேற்கு மூலையில் எசுபார்த்தன்கள் தாக்குவார்கள் என்று டெமோஸ்டெனிஸ் எதிர்பார்த்தார். டெமோஸ்தீனஸ் எதிர்பார்த்த இடத்திலேயே எசுபார்த்தன்கள் தாக்கினர், மேலும் ஏதெனியர்கள் தரை மற்றும் கடலில் என ஒரே நேரத்தில் தாக்குதல்களை எதிர்கொண்டனர். ஏதெனியர்கள் எசுபார்த்தன்களை ஒன்றரை நாட்களுக்கு தடுத்து நிறுத்தினர். இருப்பினும், எசுபார்த்தன்கள் பைலோஸ் துறைமுகத்தைத் தாக்கும் முயற்சிகளை நிறுத்திவிட்டு, அதற்குப் பதிலாக முற்றுகை இடும் முடிவுக்கு வந்தனர்.

எசுபார்த்தன்கள் முற்றுகைக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்த கொண்டிருந்தபோது, 50 கப்பல்களைக் கொண்ட ஏதெனியன் கடற்படை, ஜாசிந்தசிலிருந்து துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தது. அச்சமயத்தில் எசுபார்த்தன்கள் துறைமுகத்தின் நுழைவாயிலை காவல் காக்கத் தவறிவிட்டிருந்தனர். அதனால் ஏதெனியர்கள் கப்பல்கள் உள்ளே சென்று எசுபார்த்தன்களை எளிதில் சுற்றிவளைக்க முடிந்தது; எசுபார்த்தன் கடற்படை தீர்க்கமாக தோற்கடிக்கப்பட்டது. மேலும் துறைமுகத்தை ஏதெனியர்கள் முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர். அதன் மூலம், அவர்கள் பைலோசுக்கு சேர்ந்தாற்போல் இருக்கின்ற ஸ்பேக்டீரியா என்ற தீவில் இருந்த 420 ஸ்பார்டன் ஹாப்லைட்டுகளை தப்பிக்க முடியாமல் சிக்க வைத்தனர். இவர்களில் 120 பேர் எசுபார்டியேட் வகுப்பைச் சேர்ந்தவர்கள், அவர்களுக்கு ஏற்பட்ட ஆபத்து எசுபார்த்தன் அரசாங்கத்தை பீதிக்குள்ளாக்கியது. அரசாங்க பிரதிநிதிகள் நிகழ்விடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் அந்த இடத்திலேயே போர்நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். எசுபார்த்தன் நன்னடத்தையின் ஒரு உத்திரவாதமாக முழு எசுபார்த்தன் கடற்படையும் ஏதெனியர்களிடம் சரணடைந்தது. மேலும் நிரந்தர அமைதிப் பேச்சுவார்த்தைக்காக ஏதென்சுக்கு தூதர்கள் அனுப்பப்பட்டனர். அந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்றபோது, ஏதெனியர்கள் எசுபார்த்தன் கப்பல்களை சாக்குப்போக்குகள் சொல்லி விடுவிக்காமல் வைத்திருந்தனர். மேலும் ஸ்பேக்டீரியாவில் உள்ள ஹாப்லைட்டுகளை முற்றுகையிட குவிந்தனர்; இறுதியில், ஸ்பேக்டீரியா போரில், அந்த ஹாப்லைட்டுகள் கைதுசெய்யப்பட்டு ஏதென்சுக்கு பணயக்கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். பைலோஸ் துறைமுகம் ஏதெனியனின் கைகளில் இருந்தது. மேலும் எசுபார்த்தன் பிரதேசத்தில் தாக்குதல் நடத்துவதற்கான ஒரு தளமாகவும், எசுபார்த்தன் எலட்களிடமிருந்து தப்பிச் செல்வதற்கான புகலிடமாகவும் அது பயன்படுத்தப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பைலோஸ்_சமர்&oldid=3504687" இலிருந்து மீள்விக்கப்பட்டது