பொடிடேயா

பண்டைய கிரேக்க நகரம்

பொடிடேயா (Potidaea ; பண்டைய கிரேக்கம் : பண்டைக் கிரேக்கம்Ποτίδαια , Potidaia, மேலும் Ποτείδαια, Poteidaia ) என்பது கொரிந்தியர்களால் கிமு 600 இல் நிறுவப்பட்ட ஒரு குடியேற்றமாகும். இது பல்லீன் தீபகற்பத்தின் மிகக் குறுகிய இடத்தில், சாலிசிசின் வடக்கு முனையில் உள்ள மூன்று தீபகற்பங்களின் மேற்கில் உள்ளது. [1]

பழங்கால கால்சிடிஸ் வரைபடம், பல்லீன் மற்றும் பொடிடேயா தீபகற்பத்தைக் காட்டுகிறது
பொடிடாயா நாணயம், சுமார் கி.மு. 525-500 முன்பக்கம் திரிசூலத்தை வைத்திருக்கும் குதிரைவீரன்; கீழே நட்சத்திரம். பின்பக்கம் வலது பக்கம் நோக்கியவாறு உள்ள பெண்ணின் தலை, தொன்மையான அம்சங்களுடன்.
பொடிடேயா நகரச் சுவரின் எச்சங்கள்.

வரலாறு

தொகு

கிமு 479 இல் பாரசீகர்களால் முற்றுகையிடப்பட்டபோது, அப்போது ஏற்பட்ட பெரும் அலையால் அதாவது, ஆழிப்பேரலையால் இந்த நகரம் காப்பாற்றப்பட்டிருக்கலாம். [2] போர்த் தொடுத்த பாரசீகர்கள் வழக்கத்திற்கு மாறாக கடல் பின்வாங்கியதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயன்றார்கள், "முன்பு இருந்ததை விட, அந்த இடத்தில் திடீரென்று உயர்ந்த அலையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது" என ஆச்சரியத்துடன் எரோடோட்டசு தெரிவிக்கிறார். [3] 2012 ஆம் ஆண்டில், ஆச்சென் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், ஆழிப்பேரலைக்கு ஆளாகும் கிரேக்கப் பகுதிகளில் இப்பகுதியையும் சேர்க்க வேண்டும் என்பதற்கான ஆதாரங்களைக் கண்டுபிடித்ததாக அறிவித்தனர். [4]

ஆழிப்பேரலை பொதுவாக பூகம்பங்களுடன் தொடர்புடையது, ஆனால் இந்த நிகழ்வைக் குறிப்பிட்ட எரோடோடஸ் அந்த நேரத்தில் பூகம்பத்தைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. இதனால் இந்த நிகழ்வு வளிதண்டல அழுத்தத்தினால் ஏற்பட்ட வானிலை ஏழிப்பேரலையாக இருந்திருக்க அதிக வாய்ப்புள்ளது. மத்தியதரைக் கடலில் இதுபோன்ற நிகழ்வுகள் ஒப்பீட்டளவில் பொதுவானவை மட்டுமல்ல, அவற்றினால் ஏற்படும் பேரலை விளைவானது நீண்ட, குறுகிய நீரில் பெருக்கக்கூடியது. இது டோரோனியோஸ் வளைகுடாவின் தலைப்பகுதியில் அமைந்துள்ள பொடிடியாவில் ஏற்படுவதற்கு வாய்ப்பான ஒரு பகுதியாகும்.

டெலியன் கூட்டணி காலத்தில், ஏதென்ஸ் மற்றும் கொரிந்து இடையே மோதல்கள் ஏற்பட்டன. இருப்பினும், கொரிந்தியர்கள் ஒவ்வொரு ஆண்டும் பொடிடேயாவுக்கு உயர் அதிகாரிகளை அனுப்பவது வழக்கமாக இருந்தது. ஏதென்சுக்கும் கொரிந்துக்கும் இடையிலான அனைத்து மோதல்களிலும் பொடிடேயா தவிர்க்க முடியாமல் ஈடுபட்டது. கிமு 432 இல் ஏதெனியர்களுக்கு எதிராக இதன் மக்கள் கிளர்ச்சி செய்தனர். மேலும் பெலோபொன்னேசியப் போரின் தொடக்கத்தில் இது முற்றுகையிடப்பட்டது மேலும் கிமு 430 இல் பொடிடேயா சமரில் கைப்பற்றப்பட்டது. [5]

கிமு 363 இல் ஏதெனியர்கள் நகரத்தை மீட்டெடுத்தனர், ஆனால் கிமு 356 இல் பொடிடேயா மாசிடோனின் இரண்டாம் பிலிப்பின் கைகளில் வீழ்ந்தது. அதன்பிறகு பொடிடேயா அழிக்கப்பட்டு இந்தப் பிரதேசம் ஒலிந்தியர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கசாண்டர் இதே இடத்தில் ஒரு நகரத்தை கட்டினார், அதற்கு கசாண்ட்ரியா என்று பெயரிடப்பட்டது. இந்த நேரத்தில்தான், இன்றும் இருக்கும் கால்வாய், பூசந்தியின் குறுகிய பகுதியில் அகழந்து உருவாக்கப்பட்டது. ஒருவேளை நகரத்தை கடற்படை தளமாக மாற்றும் நோக்கத்துடன் அவ்வாறு செய்யப்பட்டிருக்கலாம். கிமு 43 இல் ஒரு உரோமானிய குடியேற்றம் மாசிடோனியாவின் புரோகன்சல் மூலம் ஏற்படுத்தப்பட்டு உரோமானியர்கள் குடியேறப்பட்டனர். இது கிமு 30 இல் ஆக்டேவியன் (எதிர்கால அகஸ்ட்டஸ் ) மூலம் மீள்குடியேற்றப்பட்டது மற்றும் கொலோனியா யூலியா அகஸ்டா கசாண்ட்ரென்சிஸ் என்ற அதிகாரப்பூர்வ பெயரைப் பெற்றது. [6]

நவீன மரபு

தொகு

முதல் உலகப் போருக்குப் பிறகு சின்ன ஆசியாவில் இருந்து வந்த அகதிகளுக்காகக் கட்டப்பட்ட நவீன குடியேற்றமான நியா பொடிடாயா, இந்த பழமையான இடத்திற்கு அருகில் அமைக்கபட்டது.

பரவலர் பண்பாட்டில், ஜீனா: வாரியர் பிரின்சஸ் என்ற தொலைக்காட்சி தொடரில் வரும் கற்பனை கதாபாத்திரமான கேப்ரியல் பொடிடேயாவை சேர்ந்தவர் என்று சித்தரிக்கப்பட்டது.

மேலும் பார்க்கவும்

தொகு

குறிப்புகள்

தொகு
  1. POTEIDAIA (Nea Poteidaia) Chalkidike, Greece, entry in The Princeton Encyclopedia of Classical Sites.
  2. Smid, T. C.: "'Tsunamis' in Greek Literature", Greece & Rome, 2nd Ser., Vol. 17, No. 1 (April 1970), pp. 100-104 (102f.)
  3. Herodotus, The Histories, 8.129
  4. "Persian invaders of Greece 'did perish in tsunami'". BBC News. 20 April 2012. https://www.bbc.co.uk/news/world-europe-17783788. 
  5.    "Cassandreia". Dictionary of Greek and Roman Geography. (1854–1857). London: John Murray. 
  6. D. Samsaris,The Roman Colony of Cassandreia in Macedonia (Colonia Iulia Augusta Cassandrensis), Dodona 16(1), 1987, 353-362.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொடிடேயா&oldid=3424296" இலிருந்து மீள்விக்கப்பட்டது