பொடுத்தோல்

பொடுத்தோல் (ஆங்கிலம்: Poduthol;மலையாளம்: പൊടുത്തോല്‍) என்பது தென்னிந்தியாவில் வடக்கு மலபார் பகுதி துணை உணவாகும். இது பொதுவாக மதிய உணவு மற்றும் இரவு உணவின் போது சோற்றுடன் பரிமாறப்படுகிறது. இது வழக்கமாகத் திருமணங்கள் மற்றும் பிற விழாக்களில் போதும் தயாரிக்கப்படுகிறது.

பொடுதோல்

செய்முறை

தொகு

முட்டைக்கோசு, பீன்சு, பலாக்காய், கேரட், வாழைக்காய், கடலைப்பருப்பு, பயற்றம் பருப்பு, பாகல், கருணைக்கிழங்கு, முருங்கை, இபோமோயா, அகத்தி போன்ற இலைகள் உள்ளிட்ட காய்களைக் கொண்டு பொடுத்தோல் சமைக்கப்படுகிறது. சிறியத் துண்டுகளாக நறுக்கப்பட்ட காய்கறிகள் மற்றும் கீரைகளுடன் மஞ்சள் தூள், மிளகாய்ப் பொடி, துண்டுகளாக்கப்பட்ட வெங்காயம் மற்றும் துருவிய தேங்காய் சேர்த்துச் சமைக்கப்படுகிறது. சூடான பாத்திரம் ஒன்றில் மேற்கூறிய பொருட்களைப் போட்டு முழுமையாக வேகும் வரை கிளறவேண்டும்.[1] காய்கறி நன்கு வெந்த உடன் கறிவேப்பிலையிட்டு தேங்காய் எண்ணெய்யில் வறுத்த கடுகு, பூண்டு கிராம்புகளுடன் தாளித்து எடுக்கவேண்டும்.

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொடுத்தோல்&oldid=3393220" இலிருந்து மீள்விக்கப்பட்டது