பொட்டாசியம் அமைல் சேந்தேட்டு
பொட்டாசியம் அமைல் சேந்தேட்டு (Potassium amyl xanthate) என்பது CH3(CH2)4OCS2K என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். மேலும், இதுவொரு கரிமக்கந்தகச் சேர்மமாகவும் கருதப்படுகிறது. கார மணமும் வெளிர் மஞ்சள் நிறமும் கொண்ட இச்சேர்மம் தூளாகவும் சிறு உருண்டைகளாகவும் காணப்படுகிறது. இது தண்ணீரில் கரையும். நுரைமிதப்பு செயல்முறையில் தாதுக்களை பிரித்தெடுக்க சுரங்கத் தொழிலில் இதைப் பயன்படுத்துகிறார்கள்.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
பொட்டாசியம்ஆ-பென் டைல்கார்பனோடைதயோயேட்டு
| |
வேறு பெயர்கள்
பொட்டாசியம் பென்டைல்சேந்தோகெனேட்டு
பொட்டாசியம் -ஆ-பென்டைல் டைதயோகார்பனேட்டு | |
இனங்காட்டிகள் | |
2720-73-2 | |
ChEMBL | ChEMBL2380741 |
ChemSpider | 16668 |
EC number | 220-329-5 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 493949 |
| |
பண்புகள் | |
C6H11KOS2 | |
வாய்ப்பாட்டு எடை | 202.37 g·mol−1 |
தோற்றம் | வெளிர் மஞ்சள் நிறம் கொண்ட தூள் |
அடர்த்தி | 1.073 கி/செ.மீ |
கரையும் | |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
H228, H302, H312, H315, H319, H335, H411 | |
P210, P240, P241, P261, P264, P270, P271, P273, P280, P301+312, P302+352, P304+340, P305+351+338, P312 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுஅமைல் ஆல்ககாலுடன் கார்பன் டைசல்பைடும் பொட்டாசியம் ஐதராக்சைடும் சேர்த்து வினைபுரியச் செய்வதால் பொட்டாசியம் அமைல் சேந்தேட்டு உருவாகிறது[1]
- CH3(CH2)4OH + CS2 + KOH → CH3(CH2)4OCS2K + H2O
பண்புகள்
தொகுவெளிர் மஞ்சள் நிறத்தில் காணப்படும் பொட்டாசியம் அமைல் சேந்தேட்டு தூளானது pH 8 மற்றும்13 மதிப்புகளுக்கிடையில் நிலைப்புத்தன்மை கொண்டதாக இருக்கிறது. அதிகபட்ச நிலைப்புத்தன்மை pH 10 மதிப்பில் காணப்படுகிறது[2].
பாதுகாப்பு
தொகுஎலிகளுக்கு வாய்வழியாக பொட்டாசியம் பென்டைல்சேந்தேட்டு கொடுக்கப்படும்போது அதன் உயிர்கொல்லும் அளவு (LD50) 480 மி.கி/கி.கி ஆகும்[3]. இச்சேர்மம் ஒரு மக்கி அழியும் சேர்மமாகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Charles C. Price and Gardner W. Stacy (1948). "p-nitrophenyl) sulfide". Organic Syntheses 28: 82. http://www.orgsyn.org/demo.aspx?prep=CV3P0667.; Collective Volume, vol. 3, p. 667
- ↑ J. Dyer, L. H. Phifer, Macromolecules 2 (1969) 111. R. J. Millican, C. K. Sauers, J. Org. Chem. 44 (1979) 1964.
- ↑ Kathrin-Maria Roy "Xanthates" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry 2005, Wiley-VCH, Weinheim.