பொட்டாசியம் அறுபுளோரோசிர்க்கோனேட்டு
பொட்டாசியம் அறுபுளோரோசிர்க்கோனேட்டு (Potassium hexafluorozirconate) என்பது K2ZrF6 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பொட்டாசியம், புளோரின், சிர்க்கோனியம் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
இருபொட்டாசியம் அறுபுளோரோசிர்க்கோனேட்டு, பொட்டாசியம் சிக்கோனியம் அறுபுளோரைடு, பொட்டாசியம் புளோரோசிர்க்கோனேட்டு
| |
இனங்காட்டிகள் | |
16923-95-8 | |
ChemSpider | 11221760 |
EC number | 240-985-6 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 56828182 |
| |
பண்புகள் | |
F6K2Zr | |
வாய்ப்பாட்டு எடை | 283.41 g·mol−1 |
தோற்றம் | வெண்மையான படிகத் தூள் |
அடர்த்தி | 3.48 கி/செ.மீ3 |
கரையும் | |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுதனிமங்களின் கரைசல்களிலிருந்து பொட்டாசியம் அறுபுளோரோசிர்க்கோனேட்டு வீழ்படிவாக்கப்படுகிறது.
- 2KF + ZrF4 -> K2ZrF6↓
- 2KCl + (NH4)2ZrF6 -> K2ZrF6↓ + 2NH4Cl}}
மேலும், தொழில்துறையில், 600–700°செல்சியசு வெப்பநிலையில் பொட்டாசியம் அறுபுளோரோசிலிக்கேட்டுடன் செறிவூட்டப்பட்ட சிர்கோனியம் தாதுவைச் சேர்த்து வினைபுரியச் செய்தும் இதை தயாரிக்கலாம்.[1]
இயற்பியல் பண்புகள்
தொகுபொட்டாசியம் அறுபுளோரோசிர்க்கோனேட்டு மணமற்ற வெள்ளை படிகத் தூளாக உருவாகிறது.
C 2/c (எண்.15) என்ற இடக்குழுவில் ஒற்றைச்சரிவச்சு படிகக் கட்டமைப்பில் பொட்டாசியம் அறுபுளோரோசிர்க்கோனேட்டு படிகமாகிறது.[2]
பயன்கள்
தொகுஉலோக சிர்கோனியத்தின் மின்னாற்பகுப்பு முறை உற்பத்தியில் பொட்டாசியம் அறுபுளோரோசிர்க்கோனேட்டு ஓர் இடைநிலைப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.
தீத்தடுப்பானாகவும்,[3] மக்னீசியம் மற்றும் அலுமினிய கலப்புலோகங்களில் சுத்திகரிப்பானாகவும் இது பயன்படுத்தப்படுகிறது.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ Lewis, Alison; Olsen, Christine (2007). BIWIC 2007: 14th International Workshop on Industrial Crystallization : September 9th-11th, 2007, University of Cape Town, Cape Town, South Africa (in ஆங்கிலம்). IOS Press. p. 186. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-58603-790-1. பார்க்கப்பட்ட நாள் 26 February 2024.
- ↑ Hoppe, R.; Mehlhorn, B. (September 1976). "Die Kristallstruktur von K 2 ZrF 6". Zeitschrift für anorganische und allgemeine Chemie 425 (3): 200–208. doi:10.1002/zaac.19764250303. https://onlinelibrary.wiley.com/doi/10.1002/zaac.19764250303. பார்த்த நாள்: 26 February 2024.
- ↑ Lewis, David M.; Rippon, John A. (20 May 2013). The Coloration of Wool and Other Keratin Fibres (in ஆங்கிலம்). John Wiley & Sons. p. 115. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-118-62509-5. பார்க்கப்பட்ட நாள் 26 February 2024.
- ↑ "Potassium hexafluorozirconate | CAS 16923-95-8 | Connect Chemicals". connectchemicals.com. பார்க்கப்பட்ட நாள் 26 February 2024.