பொட்டாசியம் அறுபுளோரோ ஆண்டிமோனேட்டு

வேதிச் சேர்மம்

பொட்டாசியம் அறுபுளோரோ ஆண்டிமோனேட்டு (Potassium hexafluoroantimonate) என்பது F6KSb என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[2]

பொட்டாசியம் அறுபுளோரோ ஆண்டிமோனேட்டு
Potassium hexafluoroantimonate
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பொட்டாசியம் அறுபுளோரோ ஆண்டிமனி(1-)
இனங்காட்டிகள்
16893-92-8
ChemSpider 10814363
EC number 628-032-6
InChI
  • InChI=1S/6FH.K.Sb/h6*1H;;/q;;;;;;+1;+5/p-6
    Key: LQKKGPUEJBHVHZ-UHFFFAOYSA-H
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 16688490
  • [K+].F[Sb-](F)(F)(F)(F)F
பண்புகள்
F6KSb
வாய்ப்பாட்டு எடை 274.85 g·mol−1
தோற்றம் தூள்
உருகுநிலை 846
கொதிநிலை 1505
தீங்குகள்
GHS signal word எச்சரிக்கை
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

பொட்டாசியம் பைரோ ஆண்டிமோனேட்டுடன் (K2H2Sb2O7) ஐதரசன் புளோரைடைச் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலமோ அல்லது திண்ம ஆண்டிமனி(III) ஆக்சைடுடன் பொட்டாசியம் ஐதராக்சைடு, 30 சதவீத ஐதரசன் பெராக்சைடு கரைசல், 48 சதவீத ஐதரோகுளோரிக் அமிலம் ஆகியவை சேர்ந்த கலவையை சூடுபடுத்தியோ பொட்டாசியம் அறுபுளோரோ ஆண்டிமோனேட்டு தயாரிக்கப்படுகிறது.[3]

ஆண்டிமனி பெண்டாபுளோரைடையும் பொட்டாசியம் அறுபுளோரோமாங்கனேட்டையும் ஒன்றாகச் சேர்த்து வினைபுரியச் செய்தாலும் பொட்டாசியம் அறுபுளோரோ ஆண்டிமோனேட்டு உருவாகும். [4]

SbF5 + K2MnF6 -> 4KSbF6 + 2MnF3 + F2

பயன்

தொகு

செயல் திறன் மிக்க மருந்துகளை தயாரிக்கும்போது மருந்து இடைநிலையாக பொட்டாசியம் அறுபுளோரோ ஆண்டிமோனேட்டு பயன்படுகிறது.[5]

வேதிப் பண்புகள்

தொகு

அடர் அமிலங்கள் மற்றும் ஆக்சிசனேற்றும் முகவர்களுடன் வினைபுரியும்போது பொட்டாசியம் அறுபுளோரோ ஆண்டிமோனேட்டு தீவிரமான வினையை வெளிப்படுத்துகிறது.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. "Potassium hexafluoroantimonate". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்).
  2. McCarthy, J. (6 December 2012). The Rare Earths in Modern Science and Technology: Volume 3 (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 105. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4613-3406-4.
  3. Macintyre, Jane E. (23 July 1992). Dictionary of Inorganic Compounds (in ஆங்கிலம்). CRC Press. p. 3217. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-412-30120-9. பார்க்கப்பட்ட நாள் 15 June 2024.
  4. Ebnesajjad, Sina (11 May 2013). Introduction to Fluoropolymers: Materials, Technology and Applications (in ஆங்கிலம்). William Andrew. p. 10. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4557-7551-4. பார்க்கப்பட்ட நாள் 15 June 2024.
  5. "Potassium hexafluoroantimonate(V) | CAS 16893-92-8 | SCBT - Santa Cruz Biotechnology" (in ஆங்கிலம்). Santa Cruz Biotechnology. பார்க்கப்பட்ட நாள் 15 June 2024.
  6. "Potassium hexafluoroantimonate(V)". Sigma Aldrich. பார்க்கப்பட்ட நாள் 15 June 2024.