பொட்டாசியம் சோடியம் டார்ட்டரேட்டு

வேதிச் சேர்மம்

பொட்டாசியம் சோடியம் டார்ட்டரேட்டு டெட்ராயைதரேட்டு (Potassium sodium tartrate tetrahydrate) என்பது KNaC4H4O6•4H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதிச் சேர்மமாகும். ரோசெல்லி உப்பு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. டார்டாரிக் அமிலத்தின் இரட்டை உப்பு என வகைப்படுத்தப்படும் இவ்வுப்பை பிரான்சு நாட்டின் லா ரோசெல்லி நகரத்தைச் சேர்ந்த மருந்தாளுநர் பியரி சீக்னெட் என்பவர் முதன்முதலில் 1675 ஆம் ஆண்டு கண்டுபிடித்தார். பொட்டாசியம் சோடியம் டார்ட்டரேட்டு மற்றும் மோனோபொட்டாசியம் பாசுபேட்டு என்ற இரண்டு சேர்மங்களும் முதலில் கண்டஏஇயப்பட்ட அழுத்த மின்விளைவு மின்னியல் பண்பை கொண்ட வேதியியல் சேர்மங்களாகும் [3]. இந்த மின்னியல் பண்பு 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய நுகர்வோர் மின்னணு ஏற்ற காலத்தில் படிக கிராமபோன் , ஒலிவாங்கிகள் மற்றும் காதொலிக் கருவிகளில் இதன் விரிவான பயன்பாட்டிற்கு வழிவகுத்தது. இத்தகைய பண்புபெயர்ப்பிகள் 2 வோல்ட்டு அல்லது அதற்கு மேற்பட்ட வழக்கமான ஒலிபெருக்கும் கருவி வெளியீடுகளுடன் விதிவிலக்காக அதிக வெளியீட்டைக் கொண்டிருந்தன. ரோசெல்லி உப்பு மென்மையானது, எனவே ஈரப்பதமான சூழ்நிலைகளில் சேமிக்கப்பட்டால் பொருளின் அடிப்படையில் எந்த மின்மாற்றிகளும் மோசமடைகின்றன.

சோடியம் பொட்டாசியம் L(+)-டார்ட்டரேட்டு டெட்ராயைதரேட்டு
Sodium potassium L(+)-tartrate tetrahydrate[1][2]
Skeletal formula of potassium sodium tartrate
Space-filling model of part of the crystal structure of potassium sodium tartrate
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
சோடியம் பொட்டாசியம் L(+)-டார்ட்டரேட்டு டெட்ராயைதரேட்டு
வேறு பெயர்கள்
E337; Seignette's salt; Rochelle salt
இனங்காட்டிகள்
304-59-6 Yes check.svgY
ChemSpider 8031536 Yes check.svgY
EC number 206-156-8
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 9855836
UNII QH257BPV3J Yes check.svgY
பண்புகள்
KNaC4H4O6•4H2O
வாய்ப்பாட்டு எடை 282.1 கி/மோல்
தோற்றம் பெரிய ஒற்றை சாய்வு ஊசிகள்
மணம் நெடியற்றது
அடர்த்தி 1.79 கி/செ.மீ³
உருகுநிலை
கொதிநிலை 220 °C (428 °F; 493 K) 130 செல்சியசில் நீரிலி; 220 செல்சியசில் சிதைவடையும்
26 கி / 100 மி.லி (0 செ); 66 கி / 100 மி.லி (26 செ)
எத்தனால்-இல் கரைதிறன் கரையாது
கட்டமைப்பு
படிக அமைப்பு செஞ்சாய்சதுரம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

ரோசெல்லி உப்பு ஒரு மலமிளக்கியாக மருத்துவ ரீதியாக பயன்படுத்தப்படுகிறது. கண்ணாடிக்கு வெள்ளி மேற்பூச்சு செய்யும் பணியிலும் இது பயன்படுத்தப்படுகிறது. சர்க்கரைகளை ஒடுக்கப் பயன்படும் பெய்லிங் கரைசலில் ஒரு உட்பொருளாகவும் இது உள்ளது. மின்னணுவியல் பொருட்களுக்கும் அழுத்த மின்விளைவு பொருட்களுக்கும் மின்முலாம் பூசுவதற்கு ரோசெல்லி உப்பு பயன்படுகிறது. சிகரெட்டு உருட்டும் காகிதங்களை தீப்பற்ற வைக்கும் எரிப்பு முடுக்கியாக இது பயன்படுகிறது.

கரிமவேதியியல் தொகுப்பு வினைகளில் பால்மங்களை உடைக்கும் நீரியநிலை பணிகளில் இது பயன்படுத்தப்படுகிறது, குறிப்பாக அலுமினிய அடிப்படையிலான ஐதரைடு வினையாக்கி பயன்படுத்தப்படும் வினைகளுக்கு இது பயனாகிறது [4]. சோடியம் பொட்டாசியம் டார்ட்ரேட்டு உப்பு உணவுத் தொழிற் துறையிலும் முக்கியமானதாக கருதப்படுகிறது [5].

புரத படிகவியலில் ஒரு பொதுவான வீழ்படிவாக்கியாக இது பயன்படுத்தப்படுகிறது. புரத செறிவை அளவிடப் பயன்படும் பியூரெட் வினையாக்கியில் ஒரு உட்கூறாக இது காணப்படுகிறது. இந்த உட்கூறு தாமிர அயனிகளின் கார pH மதிப்பை கரைசலில் பராமரிக்கிறது.

தயாரிப்புதொகு

 
விண்வெளி ஆய்வகமொன்றில் வளர்க்கப்பட்ட ரோசெல்லி உப்பின் பெரிய அளவு படிகங்கள்

68 சதவீதம் டார்டாரிக் அமிலத்தை கொண்ட டார்டார் ரோசெல்லி உப்பு தயாரிக்க உதவும் தொடக்கப் பொருளாக பயன்படுகிறது. இது முதலில் தண்ணீரில் அல்லது முந்தைய படிகமாக்கலுக்கு உதவிய நீர்மத்தில் கரைக்கப்படுகிறது. பின்னர் இது சூடான சோடியம் ஐதராக்சைடுடன் சேர்க்கப்பட்டு pH 8 அளவுள்ள காரமாக்கப்படுகிறது. செயலூக்கப்பட்ட கல் கரியால் இது நிறமாற்றம் செய்யப்பட்டு வடிகட்டப்படுவதற்கு முன்பு வேதியியல் ரீதியாக சுத்திகரிக்கப்படுகிறது. வடிநீர்மம் 100 ° செல்சியசு வெப்பநிலையில் 42 ° பவுமி அளவுக்கு ஆவியாகி, மணிகளாக்கும் கருவிக்குள் அனுப்பப்படுகிறது, சீக்னெட்டின் உப்பு மெதுவான குளிரூட்டலில் இங்கு படிகமாக்குகிறது. நீர்மத்திலிருந்து ரோசெல்லி உப்பு மையவிலக்கு விசை மூலம் பிரிக்கப்பட்டு, துகள்கள் கழுவுவப்படுகின்றன. சுழல் உலையில் உலர்த்தி சலிக்கப்பட்டு பின்னர் பயன்படுத்தப்படுகிறது. வணிக ரீதியாக விற்பனை செய்யப்படும் ரோசெல்லி மணிகள் அளவுகள் 2000 மைக்ரோமீட்டர் முதல் <250 மைக்ரோமீட்டர் வரை இருக்கும் [2]. ரோசெல்லி உப்பின் பெரிய படிகங்கள் விண்வெளி ஆய்வகத்தின் பலகைகளில் குறைக்கப்பட்ட ஈர்ப்பு விசை மற்றும் வெப்பச்சலன நிலைமைகளின் கீழ் வளர்க்கப்பட்டுள்ளன.

அழுத்தமின் விளைவுதொகு

1824 ஆம் ஆண்டில், சர் டேவிட் பிரீவ்சுட்டர் ரோசெல்லி உப்புகளைப் பயன்படுத்தி அழுத்தமின் விளைவுகளை நிரூபித்தார் [6], இதனால் அவர் இவ்விளைவை தீமின் விளைவு என்று பெயரிட்டார் [7]. 1919 ஆம் ஆண்டில், அலெக்சாண்டர் மெக்லீன் நிக்கல்சன் ரோசெல்லி உப்புடன் ஒலிவாங்கிகள், போன்ற ஒலியியல் தொடர்பான கண்டுபிடிப்புகளை பெல் ஆய்வகத்தில் உருவாக்கி பணியாற்றினார் [8].

மேற்கோள்கள்தொகு

  1. David R. Lide, ed. (2010), CRC Handbook of Chemistry and Physics (90th ed.), CRC Press, pp. 4–83
  2. 2.0 2.1 Jean-Maurice Kassaian (2007), "Tartaric Acid", Ullmann's Encyclopedia of Industrial Chemistry (7th ed.), Wiley, pp. 1–8, doi:10.1002/14356007.a26_163
  3. Newnham, R.E.; Cross, L. Eric (November 2005). "Ferroelectricity: The Foundation of a Field from Form to Function". MRS Bulletin 30: 845–846. doi:10.1557/mrs2005.272. 
  4. Fieser, L. F.; Fieser, M., Reagents for Organic Synthesis; Vol.1; Wiley: New York; 1967, p. 983
  5. "Rochelle Salt applications".
  6. "A Short History of Ferroelectricity" (PDF). groups.ist.utl.pt. 2009-12-04. 2016-05-04 அன்று பார்க்கப்பட்டது.
  7. Brewster, David (1824). "Observations of the pyro-electricity of minerals". The Edinburgh Journal of Science 1: 208–215. https://books.google.com/books?id=dkQEAAAAYAAJ&pg=PA208. 
  8. url = https://sites.google.com/view/rochellesalt/home