பொட்டாசியம் பார்மேட்டு

வேதிச் சேர்மம்

பொட்டாசியம் பார்மேட்டு (Potassium formate) CHKO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பார்மிக் அமிலத்தின் பொட்டாசியம் உப்பாக இச்சேர்மம் கருதப்படுகிறது. வலிமையான நீருறிஞ்சும் சேர்மமான பொட்டாசியம் பார்மேட்டு வெள்ளை நிறத்தில் திண்மமாகக் காணப்படுகிறது.[2] பொட்டாசியம் உற்பத்தியின் போது பார்மேட்டு பொட்டாசு செயல்முறையில் ஓர் இடைநிலை சேர்மமாக இது உருவாகிறது.[3] சாலைகளில் பயன்படுத்தக்கூடிய சுற்றுச்சூழலுக்கு உகந்த பனிநீக்க உப்பாகவும் பொட்டாசியம் பார்மேட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது.[4][5] குறைந்த அளவு அரிக்கும் திரவ உலர்த்தியிலும் இதைப் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.[6] பொட்டாசியம் பார்மேட்டின் 52% கரைசல் −60 °செல்சியசு (−76 °பாரங்கீட்டு) உறைநிலைப் புள்ளியைக் கொண்டுள்ளது.[7] பல திரவ குளிரூட்டிகளை விட, குறிப்பாக துத்தநாகம் மற்றும் அலுமினியம், பொட்டாசியம் பார்மேட்டு உப்புநீரானது சில சமயங்களில் வெப்பப் பரிமாற்றத்திற்காகப் பயன்படுத்தப்படுகிறது. பல எஃகுகளிடம் இவை அரிக்கும் தன்மையுடன் இருந்தாலும், சில அளவுகளில் அலுமினியம் மற்றும் எஃகுகளுடன் இணக்கமாக உள்ளன.[8][9]

பொட்டாசியம் பார்மேட்டு[1]
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
பொட்டாசியம் பார்மேட்டு
இனங்காட்டிகள்
590-29-4 Y
ChemSpider 11054 N
InChI
  • InChI=1S/CH2O2.K/c2-1-3;/h1H,(H,2,3);/q;+1/p-1 N
    Key: WFIZEGIEIOHZCP-UHFFFAOYSA-M N
  • InChI=1/CH2O2.K/c2-1-3;/h1H,(H,2,3);/q;+1/p-1
    Key: WFIZEGIEIOHZCP-REWHXWOFAK
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 11539
SMILES
  • C(=O)[O-].[K+]
UNII 25I90B156L Y
பண்புகள்
CHKO2
வாய்ப்பாட்டு எடை 84.12 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர் உறிஞ்சும் திறன் படிகங்கள்
அடர்த்தி 1.908 கி/செ.மீ3
உருகுநிலை 167.5 °C (333.5 °F; 440.6 K)
கொதிநிலை சிதைவடையும்
32.8 கி/100 மி.லி (0 °செல்சியசு)
331 கி/100 மி.லி (25°செல்சியசு)
657 கி/100 மி.லி (80 °செல்சியசு)
கரைதிறன் எத்தனாலில் கரையும்
டை எத்தில் ஈதரில் கரையாது.
காரத்தன்மை எண் (pKb) 10.25
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H335, H319, H315
P261, P302+352, P280, P305+351+338
Lethal dose or concentration (LD, LC):
5500 மி.கி/கி.கி (வாய்வழி, சுண்டெலி)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

மேற்கோள்கள் தொகு

  1. Olsen, J C (editor), Van Nostrand's Chemical Annual, Chapman and Hall, London, 1934
  2. "MSDS - 294454". www.sigmaaldrich.com. பார்க்கப்பட்ட நாள் 2019-03-18.
  3. Concise Encyclopedia Chemistry, Mary Eagleson (1994), page 888. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-11-011451-5
  4. "Finnish Environment Institute > Main publications on the effect of de-icing chemicals on ground water". www.syke.fi. பார்க்கப்பட்ட நாள் 2015-11-18.
  5. Pasi P. Hellstén; Jani M. Salminen; Kirsten S. Jørgensen; Taina H. Nystén (2005). "Use of potassium formate in road winter deicing can reduce groundwater deterioration". Environ. Sci. Technol. 39 (13): 5095–5100. doi:10.1021/es0482738. பப்மெட்:16053115. Bibcode: 2005EnST...39.5095H. 
  6. "Module 71: Liquid desiccants for dehumidification in building air conditioning systems".
  7. "Potassium Formate for Runway Deicing".
  8. "Brines and antifreeze". பார்க்கப்பட்ட நாள் 2022-01-16.
  9. "Technical information on "TYFOXIT F15-F50: Ready-to-Use, High-Performance Ultra Low Viscous Secondary Refrigerants for Applications Down to –50 °C"" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2022-01-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொட்டாசியம்_பார்மேட்டு&oldid=3751833" இலிருந்து மீள்விக்கப்பட்டது