பொட்டாசியம் பெர்டெக்னிடேட்டு

வேதிச் சேர்மம்


பொட்டாசியம் பெர்டெக்னிடேட்டு (Potassium pertechnetate) என்பது KTcO4 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தெக்கினீசியமும் பொட்டாசியமும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.

பொட்டாசியம் பெர்டெக்னிடேட்டு
Potassium pertechnetate
இனங்காட்டிகள்
75492-44-3 99Tc Y
InChI
  • InChI=1S/K.4O.Tc/q+1;;;;-1; Y
    Key: RXUFGZNRBITENT-UHFFFAOYSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image
  • [K+].[O-][Tc](=O)(=O)=O
பண்புகள்
KTcO4
வாய்ப்பாட்டு எடை 201.1
தோற்றம் நிறமற்ற திண்மம்[1]
உருகுநிலை 540 °செல்சியசு
கொதிநிலை சுமார் 1000 °செல்சியசு
2.13கி (20 °செல்சியசு)
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் பொட்டாசியம் பெர்மாங்கனேட்டு
பொட்டாசியம் பெர்யிரேனேட்டு
ஏனைய நேர் மின்அயனிகள் சோடியம் பெர்டெக்னிடேட்டு
அமோனியம் பெர்டெக்னிடேட்டு
வெள்ளி பெர்டெக்னிடேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

பொட்டாசியம் ஐதராக்சைடையும் பெர்டெக்னிடிக்கு அமிலத்தையும் ஒன்றாகச் சேர்த்து நடுநிலையாக்கல் வினைக்கு உட்படுத்தி பொட்டாசியம் பெர்டெக்னிடேட்டு தயாரிக்கப்படுகிறது:[2]

KOH + HTcO4 -> KTcO4 + H2O

இயற்பியல் பண்புகள்

தொகு

பொட்டாசியம் பெர்டெக்னிடேட்டில் உள்ள Tc–O பிணைப்பின் இடைவெளி 173.9 பைக்கோமீட்டர்களாகும். O–Tc–O பிணைப்பின் பிணைப்புக் கோணம் 108.05° மற்றும் 110.19° ஆகவும் காணப்படுகிறது.[2] பொட்டாசியம் மற்றும் ஆக்சிசன் இடையே 289.36 பைக்கோமீட்டர்கள் மற்றும் 286 பைக்கோமீட்டர்கள் ஆகும். I41/a (இடக்குழு எண். 88) என்ற இடக்குழுவில் அணிக்கோவை அளவுருக்கள் a = 563.0 பைக்கோமீட்டர் மற்றும் c = 1286.7 பைக்கோமீட்டர் என்ற அளவுகளில் பொட்டாசியம் பெர்டெக்னிடேட்டு நாற்கோணப் படிகத்திட்டத்தில் படிகமாகிறது.[3]

பயன்கள்

தொகு

பொட்டாசியம் பெர்டெக்னிடேட்டு மற்ற கதிரியக்க மருந்துகளைத் தயாரிக்கப் பயன்படுகிறது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. 《无机化学丛书》. 第九卷 锰分族 铁系 铂系. 谢高阳 等主编. 科学出版社. 3.13.3 含氧酸及其盐类. P116
  2. 2.0 2.1 2.2 Weaver, Jamie; Soderquist, Chuck Z.; Washton, Nancy M.; Lipton, Andrew S.; Gassman, Paul L.; Lukens, Wayne W.; Kruger, Albert A.; Wall, Nathalie A. et al. (2017-03-06). "Chemical Trends in Solid Alkali Pertechnetates" (in en). Inorganic Chemistry 56 (5): 2533–2544. doi:10.1021/acs.inorgchem.6b02694. பன்னாட்டுத் தர தொடர் எண்:0020-1669. பப்மெட்:28221786. https://pubs.acs.org/doi/10.1021/acs.inorgchem.6b02694. 
  3. Klaus Schwochau (Nov 2008), Technetium: Chemistry and Radiopharmaceutical Applications, John Wiley & Sons, p. 129, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3527613373