பொட்டாசியம் முத்தயோகார்பனேட்டு

வேதிச் சேர்மம்

பொட்டாசியம் முத்தயோகார்பனேட்டு (Potassium trithiocarbonate) என்பது K2CS3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியல் சேர்மமாகும். இச்சேர்மத்தில் இரண்டு பொட்டாசியம் நேர்மின் அயனிகளும் இரண்டு ச்மதள முத்தயோகர்பனேட்டு எதிர்மின் அயனிகளும் சேர்ந்துள்ளன. தூய்மையற்ற மாதிரிகள் பெரும்பாலும் பழுப்பு நிறத்தில் தோன்றினாலும் இச்சேர்மம் ஒரு வெள்ளை நிற திண்மப் பொருளாகும். பொட்டாசியம் சல்பைடு அல்லது பொட்டாசியம் ஐதரோசல்பைடுடன் கார்பன் டை சல்பைடை வினைபுரியச் செய்து பொட்டாசியம் முத்தயோகார்பனேட்டு தயாரிக்கப்படுகிறது. இது ஆல்க்கைலேற்றும் முகவர்களுடன் வினையில் ஈடுபட்டு முத்தயோகார்பனேட்டு எசுத்தர்களைக் கொடுக்கிறது.:[1]

பொட்டாசியம் முத்தயோகார்பனேட்டு
இனங்காட்டிகள்
26750-66-3
EC number 247-959-3
InChI
  • InChI=1S/CH2O2S.2K/c2-1(3)4;;/h4H,(H,2,3);;/q;2*+1/p-2
    Key: JOKZZQQDSRIMNE-UHFFFAOYSA-L
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 117858
  • C(=O)([O-])[S-].[K+].[K+]
பண்புகள்
CK2S3
வாய்ப்பாட்டு எடை 186.39 g·mol−1
தோற்றம் திண்மம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
K2CS3 + 2 RX → (RS)2CS + 2 KX (X = halide)

மேற்கோள்கள்

தொகு
  1. R. E. Strube (1959). "Trithiocarbodiglycolic Acid". Organic Syntheses 39: 77. doi:10.15227/orgsyn.039.0077.