பொட்டாசியம் முப்புளோரோ அசிட்டேட்டு

வேதிச் சேர்மங்கள்

பொட்டாசியம் முப்புளோரோ அசிட்டேட்டு (Potassium trifluoroacetate) என்பது CF3COOK என்ற மூலக்கூற்று வாய்ப்பாடால் விவரிக்கப்படும் ஓர் கனிம வேதியியல் சேர்மமாகும். பொட்டாசியம் டிரைபுளோரோ அசிட்டேட்டு என்ற பெயராலும் இது அழைக்கப்படும். KH(CF3COO)2 என்ற வாய்ப்பாடு கொண்ட அமில உப்பாகவும் இது உருவாகும்.[2]

பொட்டாசியம் முப்புளோரோ அசிட்டேட்டு
இனங்காட்டிகள்
2923-16-2
பண்புகள்
CF3COOK
உருகுநிலை 135–137 °C (408–410 K)[1]
கொதிநிலை 145 °C (418 K)[1]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் பொட்டாசியம் இருபுளோரோபுரோமோ அசிட்டேட்டு
ஏனைய நேர் மின்அயனிகள் சோடியம் முப்புளோரோ அசிட்டேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

முப்புளோரோஅசிட்டிக் அமிலத்துடன் பொட்டாசியம் ஐதராக்சைடு, பொட்டாசியம் கார்பனேட்டு அல்லது பொட்டாசியம் பைகார்பனேட்டு ஆகியனவற்றைச் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் பொட்டாசியம் முப்புளோரோ அசிட்டேட்டு தயாரிக்கப்படுகிறது.

CF3COOH + KOH → CF3COOK + H2O

பண்புகள்

தொகு

வெப்பப்படுத்தினால் பொட்டாசியம் முப்புளோரோ அசிட்டேட்டு சிதைவடையும். 220 °செல்சியசு வெப்பநிலையில் அதிகபட்ச சிதைவு விகிதத்தை அடையும். பொட்டாசியம் புளோரைடு, சில ஆவியாகும் பொருட்கள், கார்பன் டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு, முப்புளோரோ அசிட்டைல் புளோரைடு போன்றவை விளைபொருட்களாகும்..[3]

மேற்கோள்கள்

தொகு