சோடியம் முப்புளோரோ அசிட்டேட்டு

வேதிச் சேர்மம்

சோடியம் முப்புளோரோ அசிட்டேட்டு (Sodium trifluoroacetate) என்பது C2F3NaO2 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். சோடியம் டிரைகுளோரோ அசிட்டேட்டு என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. CF3CO2Na என்ற அமைப்பு வாய்பாட்டாலும் இதை அடையாளப்படுத்தலாம். முப்புளோரோ அசிட்டிக் அமிலத்தின் சோடியம் உப்பாக சோடியம் முப்புளோரோ அசிட்டேட்டு வகைப்படுத்தப்படுகிறது. முப்புளோரோமெத்திலேற்ற வினைகளுக்கு உரிய மூலமாக இதை பயன்படுத்துகிறார்கள்.[1]

சோடியம் முப்புளோரோ அசிட்டேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
சோடியம் முப்புளோரோ அசிட்டேட்டு
வேறு பெயர்கள்
சோடியம் பெர்புளோரோ அசிட்டேட்டு
சோடியம் 2,2,2-முப்புளோரோ அசிட்டேட்டு
இனங்காட்டிகள்
2923-18-4
ChemSpider 68703
EC number 220-879-6
InChI
  • InChI=1S/C2HF3O2.Na/c3-2(4,5)1(6)7;/h(H,6,7);/q;+1/p-1
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 517019
  • C(C(=O)[O-])(F)(F)F.[Na+]
UNII 255JUV5YVI
பண்புகள்
C2F3NaO2
வாய்ப்பாட்டு எடை 136.00 g·mol−1
தோற்றம் வெண்மையான படிகத் தூள்
அடர்த்தி 1.49 கி மி.லி−1
உருகுநிலை 207 °C (405 °F; 480 K)
கொதிநிலை சிதைவடையும்
625 கி/லி
கரைதிறன் எத்தனால், அசிட்டோநைட்ரைல், இருமெத்தில்பார்மமைடு மற்றும் பல முனைவுக் கரைப்பான்களில் கரையும்
காடித்தன்மை எண் (pKa) 0.23 (இணை அமிலம்)
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் நச்சு, எரிச்சல், சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும்
GHS pictograms The skull-and-crossbones pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The environment pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H300, H315, H319, H335, H410
P261, P264, P270, P271, P273, P280, P301+310, P302+352, P304+340, P305+351+338, P312, P321, P330, P332+313
தீப்பற்றும் வெப்பநிலை தீப்பற்றாது
Autoignition
temperature
தீப்பற்றாது
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் சோடியம் முக்குளோரோ அசிட்டேட்டு
ஏனைய நேர் மின்அயனிகள் இலித்தியம் முப்புளோரோ அசிட்டேட்டு
பொட்டாசியம் முப்புளோரோ அசிட்டேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

50 சதவீத நீர்த்த முப்புளோரோ அசிட்டிக் அமிலத்துடன் சம அளவு சோடியம் கார்பனேட்டை கரைத்து சோடியம் முப்புளோரோ அசிட்டேட்டு தயாரிக்கப்படுகிறது. கரைசலை வடிகட்டி சிறப்பு கவனத்துடன் உப்பை சிதைவடைதலின்றி வெற்றிட ஆவியாக்கம் செய்ய வேண்டும். பெறப்படும் திண்மத்தை 100 பாகை செல்சியசு வெப்பநிலையில் உலர்த்தி பயன்படுத்தலாம்.[2]

காரத்தன்மை

தொகு

சோடியம் முப்புளோரோ அசிட்டேட்டின் காடித்தன்மை எண் 0.23 ஆகும். 4.76 காடித்தன்மை எண் கொண்ட அசிட்டிக் அமிலத்துடன் ஒப்பிடுகையில் முப்புளோரோ அசிட்டேட்டு அயனியின் காரத்தன்மை மிகவும் பலவீனமானதாகும். இது கார்பாக்சிலேட்டு குழுவை ஒட்டிய மூன்று புளோரின் அணுக்களின் எலக்ட்ரான்-திரும்புதல் விளைவு இதற்கு காரணமாகும். ஐதரோகுளோரிக் அமிலம் அல்லது சல்பூரிக் அமிலம் போன்ற வலிமையான அமிலங்கள் முப்புளோரோ அசிட்டேட்டு அயனியை முப்புளோரோ அசிட்டிக் அமிலமாக புரோட்டானேற்றம் செய்ய இயலும்.

CF3CO2- + HCl -> CF3CO2H + Cl-
CF3CO2- + H2SO4 -> CF3CO2H + HSO4-

பொதுவாக, முப்புளோரோ அசிட்டேட்டு சமநிலையில் ஐதரோனியம் நேர்மின் அயனிகளுடன் வினைபுரிந்து முப்புளோரோ அசிட்டிக் அமிலத்தை உருவாக்குகிறது:

CF3CO2- + H3O+ <=>> CF3CO2H + H2O

முப்புளோரோ அசிட்டிக் அமிலம் மற்றும் ஐதரோனியம் அயனிக்கு இடையே உள்ள காடித்தன்மை எண்ணில் உள்ள ஒற்றுமையின் காரணமாக ஐதரோனியத்துடனான பொதுவான வினை சமநிலையில் உள்ளது.

பயன்

தொகு

முப்புளோரோமெத்திலேற்ற வினைகளுக்கு சோடியம் முப்புளோரோ அசிட்டேட்டு ஒரு பயனுள்ள வினையாக்கியாகும்.

 
சோடியம் முப்புளோரோ அசிட்டேட்டின் முப்புளோரோமெத்திலேற்ற வினை

இவற்றையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Chang, Ying; Cai, Chun (June 2005). "Trifluoromethylation of carbonyl compounds with sodium trifluoroacetate". Journal of Fluorine Chemistry 126 (6): 937–940. doi:10.1016/j.jfluchem.2005.04.012. 
  2. Prakash, G. K. Surya; Mathew, Thomas (2010), "Sodium Trifluoroacetate", Encyclopedia of Reagents for Organic Synthesis (in ஆங்கிலம்), எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/047084289x.rn01136, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780470842898