பொதியச் சோதனை

பொதியச் சோதனை (ஆங்கிலம்:Package testing)என்பது உற்பத்தியாளரிடமிருந்து, நுகர்வோரை ஒரு பொருள் அடையும் வரை, ஏற்படும் நிலைகளைத் தெள்ளத்தெளிவாக ஆராய்வது ஆகும். இந்த ஆய்வினால் கண்டறியப்படும் நுட்பங்களில் இருந்து, ஒரு பொருள் தரம் குறையாமல், நுகர்வோரை அடைவது நிலைநாட்டப் படுகிறது. சிப்பமிடுதல், பொட்டலமிடுதல், பெட்டிக்குள் அடைத்தல், போக்குவரவு, காலநிலை மாற்றங்கள், மனிதத்தவறுகள் (Human error assessment and reduction technique (HEART)) போன்ற பல்வேறு காரணிகளால், உற்பத்தியாகும் பொருள், நுகர்வோரைப் பாதுகாப்பாகவும், எவ்வித இழப்பும் இல்லாமல், தரமாக அடைவதற்கான வழிமுறைகள் உருவாக்கப்படுகின்றன.

சோதனைக் கூறுகள் தொகு

இந்த சோதனைகள், உற்பத்தி செய்யப்படும் பொருள், அதன் தன்மை, அது நுகர்வோரை சென்றடைய வேண்டியத் தொலைவு, உற்பத்தியாகும் இடத்திற்கும், நுகர்வோரின் இடத்திற்கும் உள்ள காலநிலை மாற்றங்கள் போன்ற உட்காரணிகளைப் பொறுத்து கட்டமைக்கப்படும். அக்கட்டமைப்பு, உற்பத்திப் பொருளின் பாதுகாப்பு முறைகளைத் தெள்ளத்தெளிவாக ஆய்ந்து, தெரிவிக்கின்றன.[1]

அகச்சோதனைகள் தொகு

கீழ்காணும் பல்வேறு சோதனைகள், உற்பத்தியாகும் பொருட்களை பொறுத்து, ஆய்வகத்தில் நிகழ்த்தப்படுகின்றன.

  • பாதுகாப்பு உறை
  • பெட்டியினுள் ஏற்படும் பூச்சிகள்
  • சரக்குப்பெட்டியைத் தவறவிடுதல்
  • பாதுகாப்புக் காரணங்களுக்காக செலவிடப்படும் தொகை, விற்பனை விலைப் போட்டி, இலாப அளவு.

புறச்சோதனைகள் தொகு

பல்வேறு சோதனைகள், சோதனைச்சாலைகளில் செய்யப்பட்டாலும், மனிதத்தவறுகள், குழந்தைகள் பாதுகாப்பு, காலநிலை மாற்றங்கள், நுகர்வோரின் கருத்து, களச்சோதனை, சரக்குப்பெயரச்சியை நிழற்படங்களாகவும், நிகழ்படங்களாகவும் எடுத்து ஆய்தல் போன்ற சோதனைச்சாலைகளுக்கு வெளியே உள்ள காரணிகளும் கண்காணிக்கப்பட்டு, கண்டறியப்பட்டு, உறபத்திப்பொருள்கள் காக்கப்படுகின்றன. இச்சோதனைகளின் விளைவாக சரக்கு என்ற உற்பத்திப் பொருளின் பாரஅலகு( unit load), சரக்கின் கொள்கலன்(shipping container), சரக்குப்போக்குவரவு போன்றவை சீர்படுத்தப்பட்டு, செம்மைப்படுத்தப்படுகின்றன. இச்செம்மையான சரக்கு இடப்பெயர்ச்சியால், உற்பத்திப்பொருளானாது(சரக்கு) நுகர்வோரை பாதுகாப்பாக அடைய வழிவகை செய்கின்றன.

ஊடகங்கள் தொகு

இக்கட்டுரைகளையும் காணவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Urbanek, T; Lee, Johnson. Column Compression Strength of Tubular Packaging Forms Made of Paper. 34,6. Journal of Testing and Evaluation. பக். 31–40 இம் மூலத்தில் இருந்து 1 மார்ச் 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210301070641/https://www.fpl.fs.fed.us/documnts/pdf2006/fpl_2006_urbanik001.pdf. பார்த்த நாள்: 12 December 2011 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொதியச்_சோதனை&oldid=3811866" இலிருந்து மீள்விக்கப்பட்டது