பொதுக் கல்லீரற் கான்
பொதுக் கல்லீரற் கான் (common hepatic duct) [1] என்பது கல்லீரலில் இருந்து பித்தநீரை எடுத்துச்செல்லும் இடது கல்லீரற் கான் மற்றும் வலது கல்லீரற் கான் ஆகியன இணைந்து உருவாகும் உடற்கூற்றியல் அமைப்பாகும். பொதுக் கல்லீரற் கான் பித்தப்பையில் இருந்து வெளிச்செல்லும் பித்தப்பைக்கானுடன் சேர்ந்து பொதுப் பித்தக்கான் எனும் நாளக்கான் அமைப்பை உருவாக்குகிறது. வயது வந்தவர்களில் பொதுவாக இந்தக் கானின் நீளம் 6–8 செ.மீ, விட்டம் 6 மி.மீ.[2]
பொதுக் கல்லீரற் கான் | |
---|---|
1: வலது கல்லீரற் சோணை 2: இடது கல்லீரற் சோணை 3: நீள்சதுரக் கல்லீரற் சோணை 4: கல்லீரல் வட்டக் கட்டுநாண் 5: அரிவாளுருக் கட்டுநாண் 6: கல்லீரல் வாற்சோணை 7: கீழ்ப் பெருநாளம் 8: பொதுப் பித்தக்கான் 9: கல்லீரல் நாடி 10: வாயினாளம் 11: பித்தப்பைக்கான் 12: பொதுக் கல்லீரற் கான் 13: பித்தப்பை | |
விளக்கங்கள் | |
அடையாளங்காட்டிகள் | |
இலத்தீன் | ductus hepaticus communis |
MeSH | D006500 |
TA98 | A05.8.01.061 |
TA2 | 3092 |
FMA | 14668 |
உடற்கூற்றியல் |
மருத்துவ முக்கியத்துவம்
தொகுகல்லீரல்-பித்தப்பைத் தொகுதி கல்லீரலில் சுரக்கப்படும் சுரப்புகளை குடலுக்குக் கொண்டு செல்ல உதவும் உறுப்புகள், கான்கள் அடங்கிய தொகுதியாகும். பொதுக் கல்லீரற் கான் இதனுள் அடங்குகிறது. பித்தப்பை அகற்றப்பட்டவர்களில் இதன் தொழிற்பாடும் இது எடுத்துச்செல்லும் பித்தத்தின் அளவும் கூடுதலாக இருக்கும்.
அறுவைச்சிகிச்சையின் போது இது ஒரு முக்கிய அடையாளக்குறியாக விளங்குகின்றது. இது பித்தப்பையீரல் முக்கோண வெளியை பித்தப்பைக் கான், பித்தப்பை நாடி (அல்லது கல்லீரலின் கீழ் விளிம்புப் பகுதி) ஆகியனவற்றுடன் சேர்ந்து உருவாக்குகின்றது. அறுவைச்சிகிச்சையில் தவறுதலாக அங்கிருக்கும் அமைப்புகள் வெட்டப்படுதலைத் தடுக்க இந்த முக்கோணம் பற்றிய அறிவு உதவுகின்றது.
படத்தொகுப்பு
தொகு-
பொதுக் கல்லீரற் கான்
-
வாயில் நாளம்
-
பித்தப்பையும் பித்தக்கான்களும் - வெட்டுமுகத் தோற்றம்
-
கல்லீரல்-பித்தப்பைத் தொகுதி
-
பொதுக் கல்லீரற் கான்