வாட்டரின் குடுவையம்
வாட்டரின் குடுவையம் (வேறு பெயர்கள்: கல்லீரக்கணையக் குடுவையம், கல்லீரக்கணையக் கான்) என்பது கணையக் கான் மற்றும் பொதுப் பித்தக்கான் ஆகியன சேர்ந்து உருவாகும் அமைப்பாகும். இது முன்சிறுகுடலின் பெரும் முற்சிறுகுடல் முகிழ்ப்பில் அமைந்துள்ளது. இது 1720இல் ஆபிரகாம் வாட்டர் (1684–1751) எனும் செருமானிய உடற்கூற்றியியலாளரால் விவரிக்கப்பட்டது.[1]
வாட்டரின் குடுவையம் | |
---|---|
கல்லீரல்-பித்தப்பைத் தொகுதியின் விளக்கப்படம். | |
விளக்கங்கள் | |
அடையாளங்காட்டிகள் | |
இலத்தீன் | Ampulla hepatopancreatica, ampulla Vaterii |
MeSH | D014670 |
TA98 | A05.8.02.017 |
TA2 | 3111 |
FMA | 15076 |
உடற்கூற்றியல் |
அமைப்பு
தொகுபித்தப்பையில் இருந்து வெளியேறும் பித்தப்பைக்கான் பொதுக் கல்லீரல் கானுடன் சேர்ந்து பொதுப் பித்தக்கானை உருவாக்குகின்றது. இது கணையக் கானுடன் சேர்ந்து உருவாகும் அமைப்பு வாட்டரின் குடுவையம் எனப்படுகின்றது. இவ் வாட்டரின் குடுவையம் முன்சிறுகுடலுள் திறக்கின்றது. கணையத்தில் இருந்து சுரக்கப்படும் நொதியங்களும் பொருட்களும், பித்தப்பை அல்லது பித்தக்கான்களில் இருந்து வெளியேறும் பித்தநீரும் வாட்டரின் குடுவையத்தூடாக முன்சிறுகுடலுக்குள் கொண்டுசெல்லப்படுகின்றன. பித்தநீரில் அடங்கியுள்ள பித்த உப்புகள் பெரும் கொழுப்புத் துணிக்கைகளை நீர்மநெய்க்கலவையாக்குதலில் (emulsion) ஈடுபடுகின்றன, இதனால் இலிப்பேசு எனும் கொழுப்பைச் சமிபாடடையச் செய்யும் நொதியத்தின் வினை இலகுவில் நடக்கின்றது.
இங்கே காணப்படும் கணையக்கான் இறுக்கி, பித்தக்கான் இறுக்கி, ஓடியின் இறுக்கி (கல்லீரல் - கணைய இறுக்கி) ஆகிய இறுக்கிகள் பித்தநீர் மற்றும் கணையச் சாறு குடுவையத்தின் வழியே செல்வதைக் கட்டுப்படுத்துகின்றது. ஓடியின் இறுக்கி முன்சிறுகுடல் உள்ளடக்கங்கள் பின்னோக்கி குடுவையத்துள் செல்வதையும் தடுக்கின்றது.