பித்தப்பை (Gallbladder) என்பது கல்லீரலின் கீழே அமைந்துள்ள ஒரு சிறிய பை போன்ற அமைப்பாகும். இது கல்லீரலில் உற்பத்தியாகும் பித்தநீரை எடுத்துச் செல்லும் பித்த நாளத்துடன் இணைந்துள்ளது. கொழுப்பு வகை உணவின் சமிபாட்டுக்குத் தேவையான பித்தநீரைச் சேமித்து வைத்திருந்து தேவையான வேளையில் குடலுக்குள் விடுகின்றது. உணவு உண்டதும், பித்தப்பை சுருங்குகிறது. இந்தப் பித்தப்பை இல்லாமல் மாந்தர் உயிர் வாழமுடியும். அறுவை சிகிச்சை மூலம் பித்தப்பை அகற்றப்படல் பித்தப்பை நீக்கம் எனப்படும்.

பித்தப்பை
Surface projections of the organs of the trunk, with gallbladder labeled at the transpyloric plane.
இலத்தீன் vesica fellea; vesica biliaris
கிரேயின்

subject #250 1197

தொகுதி Digestive system (GI Tract)
தமனி Cystic artery
சிரை Cystic vein
நரம்பு Celiac ganglia, vagus[1]
முன்னோடி Foregut
Dorlands/Elsevier g_01/12383343

கட்டமைப்பு தொகு

பித்தப்பை பை போன்ற அமைப்புடைய அங்கமாகும். இது ஈரலின் வலது பக்கச் சோணையின் கீழாக மேலமிழ்ந்து காணப்படும்.நரை நீல நிறம் கொண்டது.[2] வளர்ந்தவர்களில் இது கிட்டதட்ட 7 முதல் 10 சென்டிமீட்டர்கள் (2.8 முதல் 3.9 அங்குலங்கள்) நீளமும் 4 சென்டிமீட்டர்கள் (1.6 அங்) விட்டமும் கொண்டதாயிருக்கும்[3] இதன் கொள்ளளவு 50 மில்லிலிட்டர்கள் (1.8 imperial fluid ounces) ஆகும்.[2]

பித்தப்பை பேரிப்பழத்தின் வடிவத்தை ஒத்ததாகக் காணப்படும். அதன் முனை பித்தக்கானில் திறக்கும்.[4] பித்தப்பை மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்படும்: மேற்பகுதி, உடல், கழுத்து என்பவையாகும். மேற்பகுதி வட்ட அடியையும் வளைந்த அமைப்பு வயிற்றறைச் சுவருடனும் ஈரலில் புதையுண்டு காணப்படும்.

தொழிற்பாடு தொகு

 
1. பித்தக்கான்கள்: 2. உட்கல்லீரல் பித்தக்கான், 3. இடது, வலது கல்லீரல் கான்கள், 4. பொதுக் கல்லீரற் கான், 5. பித்தப்பைக் கான், 6. பொதுப் பித்தக்கான், 7. வாட்டரின் குடுவையம், 8. பெரும் முற்சிறுகுடல் முகிழ்ப்பு
9. பித்தப்பை, 10–11. வலது மற்றும் இடது கல்லீரல் சோணை. 12. மண்ணீரல்.
13. உணவுக்குழாய். 14. இரைப்பை. சிறுகுடல்: 15. முன்சிறுகுடல், 16. இடைச்சிறுகுடல்
17. கணையம்: 18: துணைக் கணையக் கான், 19: கணையக் கான்.
20–21: வலது, இடது சிறுநீரகம்.

பித்தப்பையின் முதன்மையான தொழிற்பாடு பித்தத்தைச் சேமித்தல் ஆகும். இது உணவிலுள்ள கொழுப்புக்களின் சமிபாட்டுக்கு தேவையானது.ஈரலால் சுரக்கப்பட்டு கல்லீரல் நாளத்தின் ஊடாக அனுப்பப்பட்டு பித்தப்பையில் சேமிக்கப்படும்.குறித்த நேரத்தில் பித்தப்பையில்30 முதல் 60 மில்லிலிட்டர்கள் (1.0 முதல் 2.0 US fl oz)பித்தம் சேமிக்கப்படும்[5]

கொழுப்பைக் கொண்ட உணவுப் பதார்த்தம் உணவுக்கால்வாயினை அடையும் போது அது முன்சிறுகுடல் மற்றும் இடைச் சிறுகுடலிலிருந்து முன்கொலிசிஸ்டொகைனினின் சுரப்பைத் தூண்டும். இச்சுரப்பின் காரணமாக பித்தப்பை சந்தம் பொருந்தியவகையில் இறுக்கமுற்று அதன் உள்ளடக்கத்தை பொது பித்தக் குழாயில் வெளியிட அது இறுதியில் முன்சிறுகுடலை வந்தடையும். பித்தம் கொழுப்பைப் பகுதியளவு சமிபாடடையச் செய்து அதன் அகத்துறுஞ்சலை அதிகரிக்கும். பித்தம் பித்த உப்புக்களையும், நீரையும் முதன்மையாக கொண்டிருக்கும். ஈமோக்குளொபின் அனுசேபத்தின் போது வெளியேறும் விளைபொருளான பிலிரூபின் இனப்படும் பித்த நிறப்பொருள் வெளியேற்றப்படும்.[5]

ஈரலால் சுரக்கப்பட்டு பித்தப்பையில் சேமிக்கப்படும் பித்தம் பித்தப்பையில் இருந்து வெளிவிடப்படும் பித்தத்தின் அமைப்பில் இருந்து மாறுபட்டது. அதாவது,சேமிக்கபடும் போது நீர் அகற்றப்படுவதுடன் பகுப்புக்கும் உட்படும். கடத்தப்படுதலின் போது பித்தப்பையின் மேற்றோல் கலங்களில் இருந்து வெளியேறும் சோடியம் அயனிகள் பிரசாரண அமுக்கத்தை அதிகரிக்கும் இதனால் நீர் மற்றும் குளோரைட்டு மீள் அகத்துஞ்சப்படும்.[5]

மருத்துவ முக்கியத்துவம் தொகு

பித்தப்பைக்கல் தொகு

பித்தப்பைக்கல் பித்தம் நிரம்பலடைவதாலோ, பொதுவாக கொலஸ்திரோல் மற்றும் பிலுரூபின் காரணமாக ஏற்படும்.[6] பெரும்பாலான பித்தப்பைகற்கள் பித்தப்பையில் இருக்கும் போதோ அல்லது பித்தத் தொகுதி ஊடாக செல்லும் போதோ அறிகுறிகள் எதையும் காட்டாது.[7] அறிகுறிகள் தென்படும் போது அடி வயிற்றில் கடுமையான வயிற்றுவலி அடிக்கடி உணரப்படும்.[6] கற்கள் பித்தப்பையை தடைப்படுத்தும் போது கொலிசிஸ்டைட்டிஸ் எனப்படும் அழற்சி ஏற்படும். கற்கள் பித்தத் தொகுதியை தடப்படுத்தும் போது மஞ்சள் காமாலை ஏற்படும்,கணைய நாளாத்தில் அடைப்பு ஏற்படுமாயின் கணைய அழற்சி ஏற்படும்.[7] பித்தப்பைகள் நோயினை மீயொலி மூலம் கண்டறிய முடியும்.[6] அறிகுறிகளுடன் கூடிய பித்தப்பைக்கல் கண்டறியப்படும் போது இயற்கையாக வெளியேறும் வகையில் விடப்படும்.[7] அடிக்கடி ஏற்படும் பித்தப்பைக் கல்லுக்கு பித்தப்பையைசத்திரசிகிச்சை மூலம் முழுமையாக அகற்றுவது பொதுவாக செய்யப்படுகின்றது.[7]

மேற்கோள்கள் தொகு

  1. Ginsburg, Ph.D., J.N. (2005-08-22). "Control of Gastrointestinal Function". in Thomas M. Nosek, Ph.D.. Gastrointestinal Physiology. Essentials of Human Physiology. Augusta, Georgia, United State: Medical College of Georgia. பக். p. 30 இம் மூலத்தில் இருந்து 2008-04-01 அன்று. பரணிடப்பட்டது.. http://www.lib.mcg.edu/edu/eshuphysio/program/section6/6ch2/6ch2line.htm. பார்த்த நாள்: 2007-06-29. 
  2. 2.0 2.1 Gray's Anatomy 2008, ப. 1187-81.
  3. Jon W. Meilstrup (1994). Imaging Atlas of the Normal Gallbladder and Its Variants. Boca Raton: CRC Press. பக். 4. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8493-4788-2. 
  4. Nagral, Sanjay (2005). "Anatomy relevant to cholecystectomy". Journal of Minimal Access Surgery 1 (2): 53. doi:10.4103/0972-9941.16527. 
  5. 5.0 5.1 5.2 Hall, Arthur C. Guyton, John E. (2005). Textbook of medical physiology (11th ). Philadelphia: W.B. Saunders. பக். 802–804. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7216-0240-0. 
  6. 6.0 6.1 6.2 "Cholelithiasis - Hepatic and Biliary Disorders - MSD Manual Professional Edition" (in en-AU). http://www.msdmanuals.com/en-au/professional/hepatic-and-biliary-disorders/gallbladder-and-bile-duct-disorders/cholelithiasis. பார்த்த நாள்: 18 October 2017. 
  7. 7.0 7.1 7.2 7.3 Britton, the editors Nicki R. Colledge, Brian R. Walker, Stuart H. Ralston ; illustrated by Robert (2010). Davidson's principles and practice of medicine. (21st ). Edinburgh: Churchill Livingstone/Elsevier. பக். 977–984. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7020-3085-7. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பித்தப்பை&oldid=3605714" இருந்து மீள்விக்கப்பட்டது