பொதுநலவாய நிறுவனம்

பொதுநலவாய நிறுவனம் (Commonwealth Foundation) 1966இல் பொதுநலவாய அரசுத்தலைவர்களால் நிறுவப்பட்ட அரசுகளுக்கிடையான அமைப்பாகும். இந்த நிறுவனம் இலண்டனில் உள்ள முன்னாள் அரண்மனை மார்ல்பரோ மாளிகையில் இருந்து இயங்குகிறது. பொதுநலவாயத் தலைவரான மேதகு ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத் பொதுநலவாய அமைப்புகளுக்காக இந்த அரண்மனையை ஒதுக்கிக் கொடுத்துள்ளார்.


பொதுநலவாய நிறுவனம்
பொதுநலவாய நிறுவனத்தின் சின்னம்
அமைப்பின் வகைஅரசுகளிடையேயான அமைப்பு
குறியீடுகள்CF
Statusசெயற்பாட்டில்
அமைக்கப்பட்ட நாள்1966
தலைமையகம்மார்ல்பரோ மாளிகை வெஸ்ட்மின்ஸ்டர், இலண்டன்
இணையதளம்www.commonwealthfoundation.com

வரலாறு

தொகு

1964ஆம் ஆண்டின் பொதுநலவாய அரசுத் தலைவர்கள் மாநாட்டில் பொதுநலவாய நிறுவனம் மற்றும் பொதுநலவாய தலைமைச்செயலகம் குறித்த கருத்தாக்கம் உருவானது. பொதுநலவாய தலைமைச் செயலகத்தின் தேவை குறித்து கானாவின் தலைவர் என்குருமா வலியுறுத்தினார்; பொதுநலவாய நிறுவனம் குறித்த கருத்தாக்கத்தை பிரித்தானியப் பிரதமர் அலெக் டக்ளஸ் - ஹோம் முன்வைத்தார். [1] பிரித்தானிய அரசு திட்டமிடப்பட்ட £250,000 செலவுகளில் பாதியை ஏற்க முன்வந்தது. துவக்கத்தில் பொதுநலவாய தலைமைச் செயலகம் இலண்டனில் அமையவிருந்ததால் பொதுநலவாய நிறுவனத்தையும் அங்கு அமைக்க திட்டமிடப்படவில்லை. இருப்பினும், பின்னர் பொதுநலவாயத்தின் பல தொழில்முறை சங்கங்கள் பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டு இயங்குவதால் இதையும் இலண்டனில் அமைக்க முடிவாயிற்று. [2]

மேற் சான்றுகள்

தொகு
  1. Conference of Commonwealth Prime Ministers, Final Communique (London, 1964).
  2. Chadwick J, 1982, The Unofficial Commonwealth: The Story of the Commonwealth Foundation 1965–1980 pp51–52.

வெளி இணைப்புகள்

தொகு

பொதுநலவாய தொழில்முறை சங்கங்கள்

தொழில்முறை மையங்கள்

பிற பயனுள்ள இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொதுநலவாய_நிறுவனம்&oldid=3590381" இலிருந்து மீள்விக்கப்பட்டது